THE KING MAKERS

THE KING MAKERS
THE KING MAKERS

22 Apr 2016

புத்தக சுமையை குறைக்க சி.பி.எஸ்.இ., புது உத்தரவு


மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்க, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய கல்வி வாரியம், பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.இது தொடர்பாக சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
* இரண்டாம் வகுப்பு வரை, புத்தகங்களை பள்ளியிலேயே வைத்திருக்க வேண்டும்
* மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், அதிக எடையுள்ள குறிப்பு புத்தகங்கள் கொண்டு வருவதை தடுக்க வேண்டும்
* கால அட்டவணைக்கு ஏற்ப, அதற்குண்டானபுத்தகங்களை மட்டுமே எடுத்து வருவதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்
* பாடத்திட்டங்கள், கலந்துரையாடும் வகையிலும், மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையிலும் எளிமையானதாக இருக்க வேண்டும்
* வீட்டுப் பாடங்களை ஆண்டு முழுவதுக்கும் பகிர்ந்து, பரவலாக்க வேண்டும்; திணிக்கக் கூடாது
* பாடத்திட்டத்துடன் சேர்ந்த மற்ற நடவடிக்கைகளை, தினமும் நடத்த வேண்டும்; இதன் மூலம் புத்தகச் சுமை குறையும்
* பாடச் சுமையைக் குறைப்பது குறித்தும், மாணவர்களுக்கு வலியை ஏற்படுத்தாத பைகள் கொண்டு வருவது குறித்தும் பெற்றோருடனும் பள்ளி நிர்வாகம் ஆலோசிக்க வேண்டும்
* புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்களுக்கு, எளிதில் மக்காத உறைகளை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்
* வகுப்பறையில், குறிப்பு புத்தகங்கள், சீருடை, விளையாட்டு உபகரணங்களை மாணவர்கள் வைத்திருக்க வசதி செய்ய வேண்டும்.இது போன்று பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை நடைமுறைபடுத்துவதை, பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு அறிவிப்பாணையில் கூறப்பட்டு உள்ளது.

போலி ஆசிரியர்கள் யார்: களம் இறங்கிய கல்வித்துறை:

குழப்பத்திற்கும் தீர்வு
போலி ஆசிரியர்களை கண்டுபிடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. உண்மைத்தன்மை சான்று பெறுவதில் இருந்த குழப்பத்தையும் ஆசிரியர் தேர்வு வாரியம் தீர்த்து வைத்துள்ளது. சமீபத்தில் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர் பிடிபட்டார்.
இதையடுத்து 2012, 2013 ல் தகுதித் தேர்வு மூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் தகுதிச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை கண்டறிய பள்ளிதலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டது. தகுதிச்சான்றின் உண்மைத் தன்மை குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர்.

அவற்றை ஆசிரியர் தேர்வு வாரியம் கண்டுகொள்ளாமல் இருந்ததால் தலைமை ஆசிரியர்கள் தகுதிச்சான்று பெற முடியாமல் தவித்து வந்தனர்.போலி ஆசிரியர்களை கண்டு பிடிப்பதிலும் சிக்கல் இருந்தது. தற்போது 'தகுதித் தேர்வை மட்டுமே ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது.


தகுதிச் சான்றுகளை முதன்மை கல்விஅலுவலர்களே அளித்தனர். இதனால் உண்மைத் தன்மை சான்றுகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் பெற்று கொள்ளலாம். சந்தேகம் இருந்தால் மட்டும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவுப்படுத்தி உள்ளது.தகுதிச்சான்றின் உண்மைத் தன்மை குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர்.

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தபால் ஓட்டு போட படிவம் 7 ம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பின் போது ஓட்டுச் சீட்டு வழங்கப்படும்.


தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு வரும் 24ம் தேதி நடைபெறும் முதல் பயிற்சி வகுப்பிலேயே தபால் ஓட்டு போடுவதற்கான படிவம் வழங்கப்பட உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வரும் மே மாதம் 16ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது.
அதன்படி கடலுார் மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளில் உள்ள 19 லட்சத்து 94 ஆயிரத்து 357 வாக்காளர்கள் ஓட்டு போட வசதியாக 2,256 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் அன்று 11 ஆயிரத்து 851 அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவர்களின் சொந்த தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கு நியமிக்கப்படுவதால், அவர்கள் ஓட்டுப்போட வசதியாக தபால் ஓட்டு வழங்கப்படும்.இந்த தபால் ஓட்டுகள் கடந்த தேர்தலில் உரிய நேரத்தில் வழங்காததால் பெரும்பாலான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓட்டு போட முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், இந்த தேர்தலில் முன்கூட்டியே தபால் ஓட்டுகள் வழங்கிட வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன.அதனையேற்ற தேர்தல் ஆணையம், தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தபால் ஓட்டு போட வசதியாக முதல்கட்ட பயிற்சி வகுப்பிலேயே படிவம் 12-பி வழங்கிட உத்தரவிட்டுள்ளது.
அதன்படி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு வரும் 24ம் தேதி, மே மாதம் 7 மற்றும் 12ஆகிய தேதிகளில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. அதில் முதல் பயிற்சி வகுப்பு நடைபெறும் 24ம் தேதி அனைவருக்கும் படிவம்-12-பி வழங்கப்பட உள்ளது. அதனை அவர்கள் உடனடியாகவோ அல்லது 7ம் தேதி பயிற்சி வகுப்பு முடிவதற்குள்ளோ பூர்த்தி செய்து வழங்கினால், 7 ம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பின் போது ஓட்டுச் சீட்டு வழங்கப்படும்.
அதன் படிவங்களை பூர்த்தி செய்து, ஓட்டு சீட்டில் தனது ஓட்டை பதிவு செய்து பயிற்சி வகுப்பு மற்றும் தொகுதி தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் சேர்க்கலாம். அல்லது தொகுதி தேர்தல் அலுவலருக்கு தபாலில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றிட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளதால் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

தேர்தல் பணியில் கட்டாயம் ஈடுபட வேண்டும்: அரசு ஊழியர்-ஆசிரியர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு.


தேர்தல் பணியில் அரசு ஊழியர்-ஆசிரியர்கள் கட்டாயம் ஈடுபட வேண்டும் என்றும் அவர்கள் தேர்தல் பணிகள் தொடர்பாக, மூன்று பயிற்சிக் கூட்டங்களிலும் பங்கேற்க வேண்டும் என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:-
இரண்டு தொகுதிகளுக்கு ஒரு பொதுப் பார்வையாளரும், 32 காவல் பார்வையாளர்களும் ஏப்ரல் 29-ஆம் தேதியன்று தமிழகம் வரவுள்ளனர். தொகுதிக்கு ஒருவர் என நியமிக்கப்பட்டுள்ள செலவினப் பார்வையாளர்களும் விரைவில் வருவர்.
வைப்புத் தொகை எவ்வளவு?
வேட்புமனு தாக்கலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்தால், வேட்புமனு தாக்கல் செய்வோரை அந்தத் தொகுதியைச் சேர்ந்த ஒருவர் முன்மொழிய வேண்டும். பதிவு செய்யப்பட்ட கட்சியாக இருந்தால் தொகுதியைச் சேர்ந்த 10 பேர் முன்மொழிய வேண்டும்.தனித் தொகுதியில் போட்டியிட ரூ.5 ஆயிரம் முன்வைப்புத் தொகை செலுத்த வேண்டும். பொதுத் தொகுதியிலும் தாழ்த்தப்பட்ட-பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் போட்டியிட விரும்பினால், ரூ.5 ஆயிரம் முன்வைப்புத் தொகைசெலுத்தினாலே போதும். பொதுத் தொகுதியில் போட்டியிட பிற வகுப்பைச் சேர்ந்தவர்கள் ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும்.

போலி வாக்காளர்கள்:

போலி வாக்காளர்கள் இருப்பதாக, பிற கட்சிகள் புகார் கூறியபோது பாமக எந்தப் புகாரையும் கூறவில்லை. இப்போது வாக்காளர் பட்டியல் அனைத்தும் இறுதி செய்யப்பட்ட சூழ்நிலையில், போலி வாக்காளர்கள் இருப்பதாக அந்தக் கட்சி புகார் தெரிவிக்கிறது.வாக்காளராக இல்லாத ஒருவரின் பெயர் பட்டியலில் இடம்பெற்றிருந்தால், அவருடைய பெயர் இடம் மாறியவர்-இறந்தவரின் பட்டியலில் வைக்கப்படும். இந்தப் பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அரசியல் கட்சிகள் தெரிவிக்கலாம்.

இடம் மாறியவர்-இறந்தவரின் பட்டியலில் உள்ளவர்கள் வாக்கை செலுத்த வேண்டுமானால் வாக்காளர் அடையாள அட்டையுடன் கூடுதலாக ஒரு ஆவணத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

மண்டல குழுக்கள்:

வாக்குப் பதிவுக்குத் தேவையான அனைத்து இயந்திரங்கள், எழுதுபொருள்கள் ஆகியவற்றை வழங்கும் பணியை மண்டல குழுக்களே மேற்கொள்ளும். மேலும், வாக்குப் பதிவின்போது ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் அதனையும் இந்தக் குழுக்களே தீர்த்து வைக்கும். மொத்தமாக 5,916 குழுக்கள் வட்டாட்சியர்கள் தலைமையில் செயல்படும் என்றார் ராஜேஷ் லக்கானி.வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 22) தொடங்கி, ஏப்ரல் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


இதற்கான அறிவிக்கையை அன்றைய தினம் காலையில் தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது.மனுக்கள் பரிசீலனை ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெறுகிறது. திரும்பப் பெற மே 2- ஆம் தேதி கடைசியாகும். வாக்குப் பதிவு 16-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 19-ஆம் தேதியும் நடைபெறுகிறது.வேட்புமனு அளிக்கும் போது, ஒவ்வொரு வேட்பாளரும் அஞ்சல்தலை அளவிலான புகைப்படத்தை அளிக்க வேண்டும். இந்த புகைப்படம் வாக்குப் பதிவின் போது, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பயன்படுத்தப்படும்.

மேலும், சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்.
வேட்புமனு தாக்கல் செய்யும்போது மூன்று வாகனங்களில் வர வேண்டும். அதற்கு மேல் வந்தால் அதற்கான செலவு வேட்பாளரின் கணக்கில் சேர்க்கப்படும்.வேட்புமனு தாக்கலின்போது, வேட்பாளருடன் நான்கு பேர் உடனிருக்கலாம். வேட்புமனு தாக்கல் செய்துள்ள வேட்பாளரின் அடிப்படைத் தகவல்கள் உடனடியாக தேர்தல் துறையின் இணையதளத்தில் வெளியிடப்படும். அடுத்த 24 மணி நேரத்தில் அந்த வேட்புமனு அப்படியே பதிவேற்றம் செய்யப்படும். வங்கிக் கணக்கு விவரத்தையும் தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Total Working days and percentage:

Total Working days and percentage:
220,219-100%
218,217-99%
216,215-98%
214,213-97%
212,211-96%
210,209,208-95%
207,206-94%
205,204-93%
203,202-92%
201,200-91%
199,198,197-90%
196,195-89%
194,193-88%
192,191-87%
190,189-86%
188,187,186-85%
185,184-84%
183,182-83%
181,180-82%
179,178-81%
177,176,175-80%
174,173-79%
172,171-78%
170,169-77%
168,167-76%
166,165 - 75%

 கல்வி இணை
செயல்பாடுகள் ஒட்டுமொத்த சராசரிக்கான தரநிலை:
A A A-A
A A B-A
A A C-B
A A D-B
A B B-B
A B C-B
A B D-B
B B B-B
B B C-B
B B D-C
B C C-C
C C C-C

lections to Tamil Nadu Legislative Assembly 2016 - Holidays - Public Holiday

G.O.Ms.No.407
Dt: April 22, 2016

Holidays - Public Holiday


- General Elections to Tamil Nadu Legislative Assembly 2016 - Declaration of the poll day 16.05.2016 as Public Holiday - Notified.

தேர்தல் பயிற்சிக்கென ஒரு ஆன்ட்ராய்டு செயலி


தேர்தல் பணியில் ஈடுபடவிருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு உதவும் வகையில் ஒரு ஆன்ட்ராய்டு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


வாக்குப்பதிவின் போது பல்வேறு நிலைகளில் பணிபுரியும் ( Zonal Officer, Presiding Officer, Polling Officer I, Polling Officer II , Polling Officer III மற்றும் BLO ) அலுவலர்களுக்கு பயனளிக்கும் தகவல்கள், பயிற்சிக் கட்டகங்கள், Manuals, வீடியோ இணைப்புகள், வினாக்கள் மற்றும் பிற விரிவான தகவல்களை உள்ளடக்கிய செயலியாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


தஞ்சை மாவட்ட தேர்தல் அலுவலர் (ஆட்சியர்) அவர்கள் வெளியிட்டுள்ள “Thanjavur Election" என்ற இச்செயலி தஞ்சை மாவட்டம் மட்டுமன்றி, அனைவருக்கும் பயன்படும் வகையில் உள்ளது.

 நீங்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளீர்களா? நீங்கள் எந்த மாவட்டமாக இருந்தாலும், அவசியம் தேர்தல் நாள் வரையிலும் உங்கள் செல்பேசியில் இருக்க வேண்டிய செயலி இது.

Be Informative and be Efficient.
கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய இணைப்பு -





Election apps

16 Apr 2016

ஆண்டு இறுதியில் சமர்ப்பிக்க வேண்டிய படிவங்கள்:


1)மதிப்பெண் பதிவேடு

2)தேர்ச்சி தரநிலை விபரப்பட்டியல்
3)மக்கள் தொகை சுருக்கம்
4)5 குழந்தைகள் பெயர்ப்பட்டியல்
5)இடைநின்றவர் பெயர்ப்பட்டியல்/இன்மை அறிக்கை
6)பள்ளியில்சேராதவர் பெயர்ப்பட்டியல் /இன்மை அறிக்கை
7)மாற்றுத்திறனாளிகள் பெயர்ப்பட்டியல் /இன்மை அறிக்கை
8)குழந்தைதொழிலாளர் பெயர்ப்பட்டியல் /இன்மை அறிக்கை
9) EERசுருக்கம்
10)பள்ளி வேலை நாட்கள் விபரம்
11) கோடைவிடுமுறை அனுமதி
12) ஆசிரியர் கோடை விடுமுறை கால முகவரி விவரம்.
13) 2015-2016 ஆம் கல்வியாண்டு-ஆசிரியர் விடுப்பு விவரம்.

12 Apr 2016

நடத்தை விதிகள் தெரியுமா? யாரை பணியிட மாற்றம் செய்யலாம்...


அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்வது குறித்தும் நடத்தை விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் பணிகள் முடியும் வரை தேர்தலுடன் தொடர்புடைய அதிகாரிகளை இடமாற்றம் செய்வது ஆணையத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.
தலைமை தேர்தல் அதிகாரி, கூடுதல், இணை, துணை தலைமை தேர்தல் அதிகாரிகள், மண்டல ஆணையாளர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள், தேர்தல் நடத்தை விதிகளுள் தொடர்புடைய பிற வருவாய் அலுவலர்கள், தேர்தல் ஆணையத்தால் மாற்றுப் பணியமர்த்தப்பட்ட தேர்தல் நிர்வாகத்தில் காவல் துறை தொடர்புடைய அதிகாரிகளான மண்டல காவல் துறை தலைவர், காவல் துறை துணைத் தலைவர், முதுநிலை காவல் கண்காணிப்பாளர்கள், பகுதி-மண்டல அலுவலர்கள், போக்குவரத்துப் பிரிவு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரப் பிரிவு, வாக்குச் சாவடிக்குத் தேவையான பொருள்களை கொள்முதல் செய்தல், பயிற்சிப் பிரிவு, அச்சுப் பிரிவு ஆகியவற்றின் அலுவலர்கள், மாநில தேர்தல் நிர்வாகத்தின் முதுநிலை அலுவலர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் பணி மாறுதல் உத்தரவு தேர்தல் அறிவிப்புக்கு முன்பே வழங்கப்பட்டிருந்தாலும், நடத்தை விதிமுறை நடைமுறைக்கு வந்த பிறகு, தேர்தல் ஆணையத்தின் சிறப்பு அனுமதியைப் பெறாமல் செயல்படுத்த முடியாது.
நிர்வாகத்தின் உடனடித் தேவைக்காக யாரேனும் ஒரு அலுவலரைப் பணி மாறுதல் செய்ய வேண்டுமெனில் தேர்தல் ஆணையத்தை மாநில அரசு அணுகலாம்.

ஆசிரியர் வரைந்த ஓவியம் அரசு விளம்பரம் ஆனது:

ஆசிரியர் வரைந்த ஓவியம் அரசு விளம்பரம் ஆனது: குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பை வலியுறுத்தும் படைப்பு
சமூகத்தின் வளர்ச்சி குறியீடு கல்வி. ஆனால் பொருளாதார, புறச் சூழல் களால் அடிப்படைக் கல்வி மறுக் கப்படும் குழந்தைகள் சிறு வயதி லேயே தொழிலாளர்களாக மாற்றப்படும் கொடுமை நீடிக்கிறது. இந்த நிலையை மாற்றி, அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியறிவு வழங்க வேண்டுமென அரசு வலி யுறுத்தி வருகிறது.
அரசின் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புத் திட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் கோவை யைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் உணர்ச்சிபூர்வமான கற்பனை ஓவி யம் ஒன்றை உருவாக்கியுள்ளார். மக்களாலும், ஓவியப் பிரியர்களா லும் பெரிதும் பாராட்டப்பட்ட அந்த ஓவியம், தற்போது தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் விழிப்புணர்வு விளம்பர ஓவியமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளி ஆசிரியர்
கோவை தீத்திபாளையத்தைச் சேர்ந்தவர் ஆர்.கிருஷ்ணன். சிங்கா நல்லூர் அருகே உள்ள அரசு உதவி பெறும் ராஜலட்சுமி மில்ஸ் உயர் நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரிய ராக பணியாற்றி வருகிறார். சமூகப் பிரச்சினைகளை வித்தியாசமான கோணத்தில் தனது ஓவியத்தின் வழியே பிரதிபலிப்பதில் வல்லவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தைத் தொழிலாளர் விழிப்பு ணர்வு ஓவியங்களை வரைந்துள் ளார்.
இந்த ஓவியங்கள் குறித்து தகவலறிந்து கோவை மாவட்ட தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புத் திட்ட அலுவலர் கள் ஓவிய ஆசிரியர் கிருஷ் ணனை தொடர்புகொண்டு பேசியுள் ளனர். அதன் பிறகு குழந்தைத் தொழிலாளர்களையும், தொழி லாளர்களாக உள்ள குழந்தைகளின் கல்வி ஏக்கத்தையும் காட்சி மொழி யில் உணர்த்தும் வகையில் மென் மையான ஓவியத்தை வரைந்து கொடுத்துள்ளார். அது பிடித்துப் போக, உடனடியாக, துறை ரீதியான அனுமதி பெற்று அந்த ஓவியத்தையே விழிப்புணர்வு விளம்பரமாகவும் அச்சிட்டுள்ளனர்.
ஓவிய ஆசிரியர் ஆர்.கிருஷ் ணன் கூறும்போது, ‘‘சுமார் 8 ஓவியங் களை இந்த தலைப்பில் வரைந்து கொடுத்தேன். இறுதியாக இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் ஓவியத்தை தேர்வு செய்தனர். ஏக் கத்துடன் கண்ணீர் வடிக்கும் சிறுமி குழந்தைத் தொழிலாளியாகவும், பரிதாபமான பார்வையுடன் பள் ளிக்கு செல்லும் சிறுமியும் இருக் கும் ஓவியம் தேர்வாகி, அரசு விழிப்புணர்வுக்காக அச்சிடப்பட் டுள்ளது. மக்களுக்காக எனது ஓவி யம் பயன்படப்போவது, மிகப் பெரிய விருதுக்கு சமமானது. அவர்கள் கருத்தை கூறும்போதே, கற்பனை ஓவியமாக இதை வரைந்து முடித்தேன்’’ என்றார்.
வித்தியாசமான ஓவியங்கள்
கற்பனை ஓவியம் வரைவதில் மட்டுமல்ல, தண்ணீரில் மிதக்கும் ரங்கோலி ஓவியம், கொப்பரைத் தேங்காயைச் செதுக்கி வித்தியாச மான ஓவியங்களையும், சர்க்கரை மூலம் ஓவிய பொம்மைகள் உரு வாக்குவதிலும் இவர் கை தேர்ந் தவர். தனது வித்தியாசமான ஓவியத் திறனை பள்ளி மாணவர்களுக்கும் ஆர்வத்துடன் பயிற்றுவித்து வருகி றார்.
ஆசிரியரின் எண்ணத்தை..
கோவை மாவட்ட தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புத் திட்ட இயக்குநர் விஜய குமார் கூறும்போது, ‘‘சிறந்த பல ஓவியங்களை அவர் வரைந்து கொடுத்தார். அதில், இரு சிறுமிகள் கொண்ட ஓவியம் அனைவரையும் கவர்ந்தது. அதை தேர்வு செய்து, அரசின் விழிப்புணர்வு விளம்பரமாக அச்சிட்டுள்ளோம்.
வழக்கமாக இணையதளத் திலிருந்து எடுக்கப்படும் படங்கள், வாசகங்களை மட்டுமே விழிப்புணர்வு விளம்பரத் துக்கு பயன்படுத்துவோம். முதன் முறையாக, கல்வியின் அவசியம் உணர்ந்த ஒரு ஆசிரியரின் எண் ணத்தையே ஓவியமாகப் பெற்று, விழிப்புணர்வுக்கு பயன்படுத்து கிறோம்’’ என்றார்.

அரசு ஊழியர்கள் அரசின் குடிகள் இல்லையா? எந்த விஷயம் பற்

றி ஆதரித்து எழுதுவதாக இருந்தாலும், விமர்சிப்பதாக இருந்தாலும், இரண்டு நிலைகளில் இருந்தேஜெயமோகன் அணுகுவார். உச்சபட்ச ஆராதனை அல்லது உச்சபட்சவசைபாடுதல். இதை தமிழக இலக்கியவாதிகளும், வாசகர்களும், பத்திரிகைகளும் நன்கு அறிவர். இதில் அவருக்கு நன்மையும் உண்டு. எப்பொழுதுமே இவர் இப்படித்தானே, இவருக்கு பதில் சொல்லி ஆகப்போவதில்லை என்று நிறைய நேரம், அவர் எழுத்தைக் கடந்து போய்விடுவார்கள்.
எல்லா நேரமும் கடந்துபோக முடியாதல்லவா!இந்திய தேர்தல் ஆணையம், அரசு ஊழியர்களை நம்பியே தேர்தலை நடத்துகிறது. அதற்கு முக்கியமான காரணம் நம்பகத் தன்மைதான். அரசு ஊழியர்களை மட்டுமே அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியும்; அவர்களிடம் விளக்கங்கள் கோர முடியும்; தவறு நடந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.
அரசு ஊழியர்களும் தேர்தல் பணிகளை தங்களின் அடிப்படை கடமையாக நினைத்தே செயல்படுகின்றனர்.காவலிலே கழியும் நாட்கள்: சொல்லப்போனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது என்ற நிலையிலேயே, அரசு ஊழியர்களின் வயிற்றில் புளி கரைய ஆரம்பித்துவிடும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஒவ்வொரு அலுவலருக்கும், நித்ய கண்டம் பூரண ஆயுசுதான். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் வரும் நடத்தை விதிகளால், பாதிப்புக்கு உள்ளாவோர்அரசு ஊழியர்களே. மூன்றாண்டுகளுக்கு மேல் பணியில் உள்ளோருக்குக் கட்டாய இடமாற்றம், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து காவல் துறையைப் போல், 24 மணிநேர பணி என, தேர்தலை முன்னெடுத்து நடத்தும் வருவாய் துறையினர், பைத்தியம் பிடிக்காத நிலையில் தான், வேலை பார்த்துக் கொண்டிருப்பர்.
தேர்தல் பணிக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை நியமிப்பது, தேர்தல் ஆணையம் விதிக்கும் கட்டுப்பாடுகளையும், நடத்தை விதிகளையும் அமல்படுத்துதல், அரசியல்வாதிகள் வலிந்து இழுக்கும் சண்டை சச்சரவுகளுக்கு ஈடுகொடுத்து அமைதியாக தேர்தல் நடைமுறைகளை செயல்படுத்துதல் என, தேர்தலில் ஈடுபடும் ஒவ்வொரு அரசு ஊழியரும், எவ்வளவு அவதிக்கு ஆளாகின்றனர்என்பதை, ஜெயமோகன் வாக்களிக்கச் செல்லும் நேரத்தில் கூடபார்த்திருக்க மாட்டார் போலும்.தேர்தல் ஆணையம், இரண்டு, மூன்று சட்டசபைத் தொகுதிகள் கடந்து, வேறொரு சட்டசபைத் தொகுதியில் தான் ஆசிரியர்களை தேர்தல் அலுவலர்களாக நியமிக்கின்றனர்.
இம்முறை பெண்களுக்கு மட்டும் சலுகை வழங்கப்பட இருப்பதாக, தேர்தல் ஆணையம் சொல்லியிருக்கிறது. குறைந்தது, 100 கி.மீ., தள்ளி உள்ள மையங்களுக்கே, ஆசிரியர்கள் தேர்தல் பணி செய்ய செல்கின்றனர். இன்று ஆசிரியர்களில், 70 சதவீதம் பேர்பெண்கள் தான். வாக்களிப்பு நடத்தும் பணிக்காக மட்டும், ஏறக்குறைய மூன்று நாட்களை ஊழியர்கள் செலவழிக்க வேண்டும். தேர்தலுக்கு முதல் நாள், பணியமர்த்தப்பட்ட ஊருக்குச் சென்று, காலையிலேயே தேர்தல் மையத்தில், வாக்குப் பெட்டியின் வருகைக்காக காத்திருக்க வேண்டும்.அன்று முழுக்க ஒருநாள் பெட்டிக்குக் காவல். அடுத்த நாள் வாக்குப் பதிவு. வாக்குப் பதிவு முடிந்து, பெட்டியை வருவாய் துறையினர் வந்து பெற்றுக் கொள்ளும் வரை அதற்கு காவல் பணி. நள்ளிரவுக்குப் பின், குக்கிராமங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாது. மூன்றாம் நாள் காலையில் கிளம்பி, தங்களின் சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டும்.தேர்தலுக்கு முதல் நாளும், தேர்தல் அன்றும் நள்ளிரவில் தமிழகம் முழுக்க உள்ள பேருந்து நிலையங்களில் சென்று பார்த்தால் தெரியும்... கைக்குழந்தைகளுடனும், கணவன்மார்களுடனும், தனியாகவும் அல்லாடிக் கொண்டு நின்றிருக்கும் அரசு பெண் ஊழியர்களை.
தேர்தல் நடக்கும் மையங்கள் எல்லாமே அரசு பள்ளிகள். அரசுப் பள்ளிகளில் என்ன வசதிகள் இருக்கின்றன என்பது, நாம் அனைவரும் அறிந்ததே. கழிப்பறை வசதிகள் சமீபத்தில் இருக்கின்றன என்றாலும், பெரும்பாலான பள்ளிகளில் கழிப்பறைக்குத் தண்ணீர் வசதிஇருக்காது. குளிப்பதற்கான இடம் இல்லவே இல்லை. ஆடை மாற்றக்கூட தனியான அறைகள் எதுவும் இல்லாத பள்ளிகளில்,உட்காரும் பெஞ்சுகளில் இரவு முழுக்க கொசுக்கடியில் படுத்து எழுந்து அல்லது இரவு முழுக்க துாக்கமே இல்லாமல் உட்கார்ந்திருந்து விட்டு இரவைக் கழிப்பர். பல ஊர்களில் டீக்கடை கூட இருக்காது.
அப்புறம் ஓட்டலைப் பற்றி என்ன சொல்வது? யார் வீட்டிலும் ஒருவேளை சாப்பிட்டு விட முடியாது. கட்சிக்காரனுக்கு சாதகமாக நடந்து கொண்டதாக புகார் வந்துவிடும். தேர்தல்ஆணையம் கொடுக்கும், ஆயிரத்து சொச்சம் ரூபாய்க்காகவா, அரசு ஊழியர்கள் இத்தனை பாடுகளையும் தாங்கிக் கொள்கின்றனர்?சாத்தியமில்லைதேர்தல் முறைகளை மறைமுகமாகக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டோர் அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் என்கிறார் ஜெயமோகன். அதற்கு உதாரணமாக அவரிடம் ஓர் ஆசிரியர் பகிர்ந்து கொண்ட உண்மைகளையும் கூறியிருக்கிறார். தாங்கள் நினைத்தால் ஓர் ஆட்சியையே மக்கள் விரும்பினாலும் வரவிடாமல் செய்துவிட முடியும் என்றாராம். அவர் தேர்தல் பணிக்கே போகாத ஆசிரியராக இருப்பார் என்றுநினைக்கிறேன்.
ஏழு கோடி மக்கள்தொகை உள்ள தமிழகம் போன்ற ஒரு மாநிலத்தில், 15 லட்சம் அரசு ஊழியர்கள், ஒருமித்த கருத்துடன் ஒரு அரசை மாற்றவோ அல்லது கொண்டு வரவோ நினைத்தால், நிச்சயம் அது சாத்தியமான ஒன்றே.பதினைந்து லட்சம் ஊழியருக்கும், குடும்பத்திற்கு நான்கு பேர் என்று வைத்தால்கூட, 60 லட்சம் பேர் அரசு ஊழியர்கள் குடும்பத்தைச் சார்ந்தோராக இருப்பர். அடுத்து, அவரின் உறவினர்கள் எல்லாம் சேர்த்தால் கோடியை தாண்டும். பெரும்பான்மை வாக்காளர்களும் இதில் இருப்பர் என்பதைச் சொல்லவேண்டியதில்லை.
ஒருமித்த கருத்துப் பிரசாரத்தின் வழியாக, அரசு ஊழியர்களால் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர முடியுமே தவிர, கீழ்த்தனமாக கள்ள ஓட்டுகளின் வழியாக ஆட்சி மாற்றத்தை கொண்டு வர, அரசு ஊழியர்கள் நினைப்பதில்லை.அப்படி நினைப்பார்களேயானால், தமிழகத்தில் எல்லோருக்கும் இருக்கும் புரிதலின்படி ஒரே ஆட்சி தானேஇருந்திருக்க முடியும்? எல்லா தேர்தல் பணியிலும், இதேஅரசுஊழியர்கள், ஆசிரியர்கள் தானே ஈடுபடுத்தப்படுகின்றனர்? அவர்களுக்கு அவ்வளவு அதிகாரம் இருக்கிறது என்றால், ஏன் மாதச் சம்பளத்திற்கு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கப் போகின்றனர்? வேலையை விட்டு அரசியல்வாதியாகி விடலாமே?தேர்தல் நடைபெறும் மையத்தில், கண்ணை கட்டிவிட்டா அரசியல் கட்சிகளின் ஏஜன்டுகள் உட்கார்ந்திருக்கின்றனர்?
ஏதேனும் ஒரு தேர்தல் அலுவலர், ஒரு வார்த்தை முன்பின்னாக சொல்லிவிட்டால் கூட போதும், கத்தி ஆர்ப்பாட்டம் செய்து அரைமணி நேரத்துக்கு வாக்குப்பதிவை நிறுத்தி விடுவர்.மை வைப்பதில் துவங்கி, பேருந்து போகாத ஊர்களுக்குக் கூட வாக்குப் பெட்டிகளை சுமந்து சென்று, அரசுஊழியர்களே தேர்தலை நடத்திக்கொடுக்கின்றனர்.பொறுத்துக் கொள்ள முடியாதுஅரசு ஊழியர்கள் எல்லாம் நியாயமானோரா; அவர்கள், மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு ஒழுங்காக தங்களின் வேலையைச் செய்கின்றனரா என்பது போன்ற பிரச்னைகள் எல்லாம், நிச்சயம் விவாதிக்கப்பட வேண்டியவை.அரசு ஊழியர்களின் பணி நேர்மைக்கும், சேவைக்கும் வக்காலத்து வாங்கி, நான் இந்த மறுப்பை எழுதவில்லை.
ஆனால், தேர்தல் களத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கடுமையான உழைப்பால் தான், இந்தியாவின் ஜனநாயகத்தை அமல்படுத்தும் தேர்தல் பணி நடைபெறுகிறது என்பதை விளக்கவே இந்த மறுப்பு.தமிழகத்தை பொறுத்தவரை, ஆசிரியர்களுக்கும், கட்சி அரசியலுக்கும் உள்ள உறவுகள், வேறு தளத்தில் விரிவாகப்பேசப்பட வேண்டியவை. அரசுஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க, வேறு வழி ஏதாவது இருந்தால் ஜெயமோகன் பரிந்துரைக்கலாம்.சாமானியர்களில் இருந்துஎழுத்தாளர்கள் வரை, மக்களின் வரிப்பணத்தில் கொழிக்கும் அரசு ஊழியர்கள் என்று சொல்வதை எப்படி பொறுத்துக்கொள்வது?
அரசு ஊழியர்களுக்கு எதிரான அரசே, மக்களுக்குச் சாதகமான அரசாக இருக்க முடியும் என்ற ஜெயமோகனின் வரிகள் வெறுப்பின் உச்சம்.நான் முன்பே ஒரு கணக்கை சொல்லியுள்ளது போல், தமிழகத்தில் ஒரு கோடி மக்களுக்கு எதிரான ஓர் அரசாங்கத்தை, மக்கள் நல அரசு எப்படி என்று சொல்வீர்கள்? அரசு ஊழியர்களை அரசின்குடிகளாக ஏற்றுக் கொள்ளவில்லையா ஜெயமோகன்?கட்டுரையாளர், கவிஞர்
தொடர்புக்கு: vandhainila@gmail.com

7 Apr 2016

வாட்ஸ்அப் மெசேஜ்-களை பாதுகாக்க வாட்ஸ்அப் என்க்ரிப்சன் புதிய வசதி !


வாட்ஸ்அப் மெசேஜ்-களை பாதுகாக்க வாட்ஸ்அப் என்க்ரிப்சன் புதிய வசதி ! 


வாட்ஸ்அப் மெசேஜ்-களை பாதுகாக்க வாட்ஸ்அப் என்க்ரிப்சன் புதிய வசதி ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபல்யமான மெசஞ்சர் செயலியாக காணப்படும் வாட்ஸ்அப், தனது பயனர்களுக்காகசிறந்த பல வசதிகளை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது.


அந்த வகையில் அண்மையில் வாட்ஸ்அப்-இல் அறிமுகப்படுத்தப்பட்ட தடித்த மற்றும் வளைந்த எழுத்துக்கள் மூலம் செட் செய்யும் வசதியை குறிப்பிடலாம். இவ்வாறு பயனுள்ள பல வசதிகளை அறிமுகப்படுத்தி வந்த வாட்ஸ்அப் நிறுவனம், தற்போது வாட்ஸ்அப் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட சிறந்ததொரு வசதியைஅறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது வாட்ஸ்அப் என்க்ரிப்சன் எனப்படும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.

 என்க்ரிப்சன் என்றால் என்ன? 

என்க்ரிப்சன் எனப்படுவது, நாம் குறித்த ஒருவருக்கு அனுப்பும் செய்தி வெறும் டெக்ஸ்ட் வடிவத்திலேயே செல்லாமல், இரகசிய குறியீடுகளாக மாற்றப்பட்டு அனுப்பப்படுவதாகும். ஆகவே குறித்த செய்தி ஒன்றை நாம் மற்றுமொருவருக்கு அனுப்பும் போது, அந்த செய்தி குறித்த நபரை சென்றடையும் வரை யாராலும் ஹேக் செய்து தெரிந்து கொள்ள முடியாது. 

உதாரணமாக நாம் எமது வாட்ஸ்அப் மூலம் எமது நண்பர் ஒருவருக்கு மெசேஜ் ஒன்றை அனுப்பும் போது, குறித்த மெசேஜ்-ஐ நடுவில் இருந்து யாரேனும் ஹேக் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. குறித்த ஹேகர், எமது மெசேஜ்-ஐ ஹேக் செய்து விட்டால், நேரடியாக அவரால் எம்முடைய மெசேஜ்-ஐ வாசித்து தெரிந்து கொள்ள முடியும். ஆனால் எமது மெசேஜ் என்க்ரிப்சன் செய்யப்படுவதால், எமது மெசேஜ்-ஐ யாரேனும் ஹேக் செய்தாலும் அவர்களால் குறித்த மெசேஜ் என்ன என்று வாசித்து தெரிந்து கொள்ள முடியாது. ஏன் என்றால், எம்முடைய மெசேஜ் வெறும் எழுத்துகளாக இல்லாமல் சிறப்பு குறியீடுகளாக காணப்படுவதே இதற்கு காரணம் ஆகும். இந்த என்க்ரிப்சன் வசதியை தான், தற்போது வாட்ஸ்அப் தனது பயனர்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. ஆகவே இனி நீங்கள்அனுப்பும் ஒவ்வொரு வாட்ஸ்அப் மெசேஜ்-உம் சிறந்ததொரு பாதுகாப்பு முறை மூலம் பாதுகாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த வசதியை பெற்றுக்கொள்வது எப்படி? 

இந்த வசதியை உங்களது வாட்ஸ்அப் கணக்கில் செயற்படுத்த, உங்களது வாட்ஸ்அப் பதிப்பை அப்டேட் செய்திடுங்கள். அப்டேட் செய்ததும், உங்களுடைய வாட்ஸ்அப்செட்டிங்க்ஸ் பகுதிக்கு சென்று, அங்கே Account என்பதில் Security என்பதை தெரிவு செய்யுங்கள். . இந்த மெனு-வில் உங்களது வாட்ஸ்அப் மெசேஜ் மற்றும் அழைப்புக்களை (கால்) என்க்ரிப்ட் செய்வதற்கான வசதி காணப்படும். ஆகவே இனி நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு மெசேஜ்-உம் என்க்ரிப்ட் செய்யப்பட்டே அனுப்பப்படும்.