THE KING MAKERS

THE KING MAKERS
THE KING MAKERS

27 Dec 2016

இணைய வேகம்... இந்தியா, நேபாளம், பங்களாதேஷ்... யாருக்கு சாதகம்?

இணைய வேகம்... இந்தியா, நேபாளம், பங்களாதேஷ்... யாருக்கு சாதகம்?
http://www.testftirupurnorth.blogspot.com

இந்தியாவில் ஒரு பக்கம் கேஷ்லெஸ் பொருளாதாரம்; பரிவர்த்தனைகள் அதிகரிக்கும் என கூறும் நேரத்தில் இணைய வேகம் பற்றி  வெளியாகியுள்ள புள்ளிவிவரங்கள் "நிஜமாவா” என அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றன. டிஜிட்டல் இந்தியா என்று மார்தட்டிக் கொள்ளும் நாம் இணைய வேகத்தில் நேபால், பங்களாதேஷ் ஆகிய நாடுகளைவிடவும் பின் தங்கியுள்ளோம். இணைய பாதுகாப்பு, இணைய பயன்பாட்டு வேகம் ஆகியவற்றில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது. இது எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்?
இணைய பாதுகாப்பு:
ஹேக்கர்களின் கைவரிசை உலக அளவில் அதிகரித்து வருகிறது. இணைய பாதுகாப்பு என்பது உலக அளவில் சவாலான விஷயம்தான். சமீபத்தில் இணைய பாதுகாப்பு குறைவு காரணமாக ஹேக்கர்கள் இந்தியாவில் உள்ள 32 லட்சம் ஏ.டி.எம் கார்டுகளின் பின் நம்பர்களை திருடியது குறிப்பிடத்தக்கது. இதே போல அரசு இணையதளங்கள், முக்கிய பிரமுகர்களின் மின்னஞ்சல்கள் முடக்கப்படுவதும் வழக்கமாகியுள்ளது. இணைய தாக்குதலுக்கு உள்ளாகும் உலகின் டாப் 5 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.

ஒட்டு மொத்தமாக ஒப்பிட்டால் உலக அளவில் இங்கிலாந்தில் 25.6 சதவிகித தாக்குதல்களும், சீனாலில் 20.7 சதவிகிதமும், அமெரிக்காவில் 17.04 சதவிகிதமும் இணைய தாக்குதல் நடைபெறுகிறது. இந்தியாவில் 6.95 சதவிகித தாக்குதல்கள் நடபெறுகின்றன.
இணைய வேகம்:
இந்தியாவில் என்னதான்  4ஜி தொழில்நுட்பம் வந்துவிட்டாலும் இன்னும் பல கிராமங்கள் இணையத்தால் இணைக்கப்படாத நிலையில் தான் இருக்கிறது. அடிப்படை இணைய வசதிகளுக்கான முயற்சி தொடர்ந்து இருந்தாலும் மக்களை இணையம் மூலம் இணைக்க போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது குறை தான்.

இணைய வேகத்தில் இந்தியா 96-வது இடம் பிடித்துள்ளது. இந்தியாவை விட பொருளாதார ரீதியாக பின் தங்கிய நேபால் மற்றும் பங்களாதேஷ் முறையே 90 மற்றும் 91-வது இடத்தைப் பிடித்துள்ளன.
சராசரி இணைய வேகம்:
சராசரி இணைய வேகத்தில் சவுத் கொரியா முதலிடத்தில் உள்ளது. அதன் சராசரி இணைய வேகம் நொடிக்கு 26.3 மெகாபைட்டாக உள்ளது. ஹாங்காங் 2-வது இடத்திலும், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் முறையே 6 மற்றும் 7-வது இடத்தில் உள்ளன. இந்தியாவில் சராசரியாக நொடிக்கு 4.1 மெகாபைட் இணையத்தையே மக்கள் பெறுகின்றனர்.
பாதிப்பை ஏற்படுத்துமா இணைய வேக குறைபாடு?
இன்னும் இந்தியாவில் வங்கிகள் முழுமையாக இணையத்தால் இணைக்கப்படவில்லை. இணைய சேவை என்பதும் நாடு முழுவதும் ஒரே அளவில் இன்னமும் போய்ச் சேரவில்லை. இந்த காரணங்கள் வங்கி பரிவர்த்தனை, கல்வி, சேவைகள் போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியா போன்ற பொருளாதார ரீதியாக மேம்பட்ட நாடு இணைய வேகம், பாதுகாப்பில் பின் தங்கியிருப்பது கவலையளிக்கும் விஷயம் தான்.
கேஷ்லெஸ் பொருளாதாரம் பற்றி பேசுவதற்கு முன்னால் அனைத்து வங்கிகளும் இணையத்தின் மூலம் இணைக்கப்படுவதும், முறையான இணையப்பாதுகாப்பு மேம்படுத்தப்படுவதும் அவசியமாகியுள்ளது. டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்கள் மூலம் நல்ல முடிவுகள் கிடைத்தால் மட்டுமே உலக அரங்கில் இந்தியா டிஜிட்டல் புரட்சியில் கால்பதிக்க முடியும்.

25 Dec 2016

நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் இனி 5-ம் வகுப்பு வரையில் மட்டுமே கட்டாய தேர்ச்சி முறை அமலில் இருக்கும்

நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் இனி 5-ம் வகுப்பு வரையில் மட்டுமே கட்டாய தேர்ச்சி முறை அமலில் இருக்கும்.

5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் கட்டாய தேர்ச்சி முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது. மாற்றம் செய்வதற்கான மத்திய
மனிதவள மேம்பாட்டுத் துறையின் பரிந்துரைக்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. கட்டாய தேர்ச்சி முறையால் கல்வி தரம் குறைகிறது என மனிவதவள மேம்பாட்டுத் துறை தெரிவித்து உள்ளது. தற்போது 8-ம் வகுப்பு வரையில் கட்டாய தேர்ச்சி முறையானது நடைமுறையில் உள்ளது.

தேசிய கல்வி கொள்கை தொடர்பாக ஆலோசிக்க மத்திய கல்வி ஆலோசனை வாரியம் (சி.ஏ.பி.இ) கடந்த வருடம் டெல்லியில் கூடியது. அப்போதைய மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிருதி இரானி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது 8–வது வகுப்பு வரை நடைமுறையில் உள்ள கட்டாய தேர்ச்சி முறை வேண்டாம் என்று மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

அப்போது ஸ்மிருதி இரானி பேசுகையில், 8-ம் வகுப்பு வரையில் மாணவர்களை பெயில் ஆக்குவதில்லை என்ற கொள்கையை ரத்து செய்வதற்கு அனைவரும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தனர் என்று தெரிவித்து இருந்தார். 8-ம் வகுப்பு வரையில் மாணவர்கள் பெயில் ஆக்க கூடாது என்ற திட்டம் முந்தைய காங்கிரஸ் தலையிலான அரசினால் கொண்டுவரப்பட்டது.

20 Dec 2016

அரசு பள்ளி மாணவர் சேர்க்கை: தமிழகம் முதலிடம்: அமைச்சர் கே.பாண்டியராஜன் பெருமிதம்


அரசு பள்ளி மாணவர் சேர்க்கை விகிதத்தில் நாட்டிலேயே தமிழகம் முன்னிலை பெற்றுள்ளது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறினார்.சென்னை முகப்பேர் கிழக்கில் உள்ள அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் 10,000 சதுர அடியில் ரூ.1.5 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பாண்டியராஜன் ஆகியோர் திங்கள்கிழமை திறந்து வைத்தனர்.

பின்னர் விழாவில் அமைச்சர் கே.பாண்டியராஜன் பேசியது: தற்போதைய சூழலில் பள்ளிக் கல்வித் துறையில் மாணவர் சேர்க்கை நாடு முழுவதும் 5 சதவீதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் தனியார் பள்ளி மாணவர் சேர்க்கை 8 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மட்டுமே மாணவர் சேர்க்கை 1 சதவீதம் அதிகரித்துள்ளது.தமிழகத்தைப் பொறுத்தவரை 100 மாணவர்களில் 99 பேர் 6 -ஆம் வகுப்பையும், 95 சதவீதம் பேர் 10 -ஆம் வகுப்பையும், 80 சதவீதம் பேர் பிளஸ் 2 வகுப்பையும் நிறைவு செய்கின்றனர்.அமெரிக்காவில் கூட கல்லூரி படிப்பை 100 -க்கு 30 சதவீதம் பேர் மட்டுமே நிறைவு செய்யும் நிலையில், தமிழகத்தில் ஆண்டுதோறும் 45 சதவீதம் பேர் கல்லூரி படிப்பை நிறைவு செய்கின்றனர்.

அடுத்த 5 ஆண்டுகளில் இதை 50 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பள்ளிக் கல்வியில் மதிப்பெண்ணுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் மாணவர்களின் கற்கும் திறனை வெளிப்படுத்தச் செய்வது, படிப்பு தவிர தனித்திறனை வளர்க்கும் செயல்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்துவது உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பிளஸ் 2 வகுப்புக்கு புதிய பாடத்திட்டத்தைஅறிமுகப்படுத்துவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன என்றார் அவர். விழாவில் அமைச்சர் பெஞ்சமின், அம்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலெக்ஸாண்டர், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சத்துணவு மையங்கள் தூய்மையாக செயல்படுவது குறித்த ஆணை



விலையில்லா பாடப்புத்தகம் பெற


19 Dec 2016

புத்திசாலி முதலாளியும் வேலைக்காரனும் | நகைசுவை கதைகள்


ஒரு பெரிய தொழிற்சாலை, கிட்ட தட்ட 1000 பேருக்கு மேல வேலை பார்க்கும் தொழிற்சாலை, எல்லாம் நல்லபடியாகத்தான் போய்கொண்டிருந்தது....!

ஒரு நாள் அந்த முதலாளி தொழிற்சாலைகுள் வலம் வந்தாராம், அப்போது ஒருத்தன் “மல்லாக்க படுத்து விட்டத்த பாக்குறது என்ன சுகம் ” அப்படின்னு படுத்து கிடந்தான்.


அவருக்கு வந்தது பாரு கோபம்… இருந்தாலும் அடக்கிகிட்டு, அவனை எழுப்பினார்,  “தம்பி நீ மாதம் எவ்வளவு சம்பளம் வாங்குற”? அப்படின்னு கேட்டாரு… அதுக்கு அவன் ஒன்னும் புரியாம முழிச்சிக்கிட்டு “மூவாயிரம் ருபாய் சார் “ அப்படின்னான்.

உடனே அவரு பைக்குள இருந்து பண முடிப்பினை எடுத்து ஒரு பத்தாயிரம் ருபாய எடுத்து தூக்கி எரிஞ்சாறு. “இதுல உன்னோட மூணு மாச சம்பளத்துக்கு மேலே ஒரு ஆயிரம் ருபாய் அதிகமா இருக்கு, நான் இங்க சும்மா படுத்து கிட்டு இருக்குரவனுக்கு சம்பளம் கொடுக்கறதுக்கு இந்த தொழிற்சாலையை நடத்தல..” அப்படின்னு சொன்னாரு.

அவன் ஒரு நிமிஷம் அவர குறு குருன்னு பார்த்தான். அப்புறம் அந்த பணத்த வாங்கிகிட்டு வேகமா வெளிய போய்ட்டான்எல்லாரும் வாயடைச்சி போய் நின்னாங்க.

அப்புறம் முதலாளி எல்லாரையும் கர்வமா பார்த்து… “இனிமே எல்லாம் அப்படி தான் ” (தமிழ் பட டயலாக்) அப்படின்னாரு. அப்புறமா கணக்குபிள்ளய கூப்பிட்டு “யார்யா அவன் ??” அப்படின்னு கேட்டாரு…

அதுக்கு அந்த கணக்கு பிள்ளை சொன்னான்…! ” டீ கொண்டு வந்த பையன் மொதலாளி .. “

இது எப்படி இருக்கு…! டீ கொடுக்க வந்தவனுக்கு பத்தாயிரம் குடுத்த முதலாளிய நெனைச்சா எப்படி தெரியுமா இருக்கு??? 

18 Dec 2016

Year planner 2017

அனைத்து பள்ளி தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு...

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷?

அரசாணை எண் 309 நாள் 16.12.2016 இன்படி அகவிலைப்படி 125% to 132%ஆக 1.7.2016 முதல் உயர்த்தப்பட்டு உள்ளது.

உயர்த்தப்பட்ட அகவிலைப்படி நிலுவை கோரும் பட்டியல் தயார் செய்து உதவி தொடக்கக் கல்வி அலுவகத்தில் 20.12.2016 மாலைக்குள் வழங்கவும்.

நிலுவைப்பட்டியலில்
1. July / October ஆண்டு ஊதிய உயர்வு நாள் குறிப்பிடவும்.

2. 1.7.2016 க்குப் பின் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு தேதி மற்றும் நாட்கள் குறிப்பிட்டு நிலுவை பட்டியலில் சேர்க்கவும்

3. 1.7.2016 க்குப்பின் தேர்வுநிலை சிறப்புநிலை பெற்றிருப்பின் எந்த தேதி முதல் எனக் குறிப்பிட்டு பட்டியலில் சேர்க்கவும் (ஆணையின் நகல் இணைக்கவும்)

4.1.7.2016 க்குப்பின் ஊக்க ஊதிய உயர்வுகள் பெற்றிருப்பின் எந்த தேதி முதல் எனக் குறிப்பிட்டு பட்டியலில் சேர்க்கவும் (ஆணையின் நகல் இணைக்கவும்)

5. 1.7.2016 க்குப்பின் அரைச்சம்பள விடுப்பு (UEL ON PA)எடுத்திருப்பின் எந்த தேதி முதல் எந்த தேதி வரை எனக் குறிப்பிட்டு பட்டியலில் சேர்க்கவும் (ஆணையின் நகல் இணைக்கவும்)

6.அனைத்து ஆசிரியர்களின் TPF / CPS எண் குறிப்பிடவும்

7. CPS திட்டத்தில் உள்ள ஆசியர்கள் மொத்த நிலுவையில் 10% CPS பங்களிப்பு தொகை கழித்து நிலுவை கோரவும்.

🌷SAN🌷

நாடு முழுவதும் ஒரே விதமான ஓட்டுனர் உரிமம் விரைவில் அறிமுகம்.

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷



நாடு முழுவதும் உள்ள, ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், புதிய மென்பொருளை பயன்படுத்தி, இணையதளம் வாயிலாக, ஒரே மாதிரியான ஓட்டுனர் உரிமம் வழங்கும் முயற்சியில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. 'தமிழகத்தில் கூடுதலாக, 12 ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், மேம்படுத்தப்பட்ட புதிய மென்பொருள், இந்த மாதத்தில் செயல்பாட்டிற்கு வரும்' என, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.



இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: தமிழகம் உள்ளிட்ட, 14 மாநிலங்களில் உள்ள, 175 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், 'வாகன், சாரதி' என்ற, மென்பொருள்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வாகன் மென்பொருள், வாகனங்களை பதிவு செய்யவும், 'சாரதி'யானது, ஓட்டுனர்களின் பதிவுகளை கையாளவும் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வழங்கி வருகிறது.



தேசிய தகவலியல் மையமான, என்.ஐ.சி., பொறியாளர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு, மென்பொருள் செயல்பாடு குறித்த பயிற்சி அளித்தனர். ஆனாலும், சோதனை முயற்சியாக, தமிழகத்தில், 12 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் மட்டுமே, இந்த மென்பொருள்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
இம்மாதத்தில் கூடுதலாக, 12 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், இந்த மென்பொருள்கள், புதிய அம்சங்களுடன் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். 'சாரதி, 4.0 வெர்ஷன்' மூலம், ஓட்டுனர் உரிமம் வழங்குதல், புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளும், 'வாகன்' மென்பொருள் மூலம், வாகன பதிவு உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படும். இவற்றில் உள்ள தகவல்கள், டில்லியில் உள்ள, என்.ஐ.சி., சர்வரில் பாதுகாக்கப்படும். இது, ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் உள்ள, கம்ப்யூட்டர் தகவல்களை, இணையதளம் வாயிலாக இணைக்கும். இதனால், ஒரு மாநிலத்தின் வாகனம் மற்றும் வாகன ஓட்டியின் தகவல்களை, மற்ற மாநிலங்களிலும் சரிபார்க்க முடியும். போலி வாகனம், போலி ஓட்டுனர் உரிமத்தை எளிதாக கண்டுபிடிக்க முடியும்.




இதற்கு வசதியாக, நாடு முழுவதும் உள்ள ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், ஒரே மாதிரியான ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இம்மாதம்... : சென்னை தென்மேற்கு, செங்குன்றம், கிருஷ்ணகிரி, நாமக்கல் வடக்கு, விழுப்புரம், கரூர், புதுக்கோட்டை, மதுரை வடக்கு, சிவகங்கை, விருதுநகர், நாகர்கோவில், மயிலாடுதுறை ஆகிய, 12 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், இம்மாதம் வாகன், சாரதியின், 4.0 வெர்ஷனின் செயல்பாடு அமலுக்கு வருகிறது.


        

16 Dec 2016

English for children

TamilNadu Districts

Tamil Handwriting practice book

வி.ஏ.ஓ., பதவிக்கு கவுன்சிலிங் அறிவிப்பு


'கிராம நிர்வாக அதிகாரி என்ற, வி.ஏ.ஓ., பதவிக்கான, பணி ஒதுக்கீட்டு கவுன்சிலிங், வரும், 19 முதல் நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயகுமார் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பு:


வி.ஏ.ஓ., பதவிகளில் நேரடி நியமனம் செய்ய, பிப்., 28ல், எழுத்துத்தேர்வு நடந்தது. இதன் முடிவுகள், ஜூலை, 1ல், வெளியாகின. பின், தேர்வு பெற்றவருக்கு, ஆக., 1 முதல், 8 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. ரேங்க் பட்டியலின்படி, தேர்வான விண்ணப்பதாரர்களுக்கு, வரும், 19 முதல், 23 வரை, கலந்தாய்வு நடக்கிறது. இதற்கான கூடுதல் தகவல்களை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

4 Dec 2016

வங்கி கணக்கு துவங்க ஆதார் எண் கட்டாயமல்ல : நிதி அமைச்சகம்!!!

     

      வங்கி கணக்கு துவங்குவதற்கு ஆதார் எண் கட்டாயம் இல்லை என மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ்குமார் கேங்வார் தெரிவித்துள்ளார்.

      பார்லி.,யில் கேள்வி ஒன்றிற்கு எழுத்துபூர்வமாக பதிலளித்த சந்தோஷ்குமார், வங்கி கணக்கு துவங்குவதற்கோ அல்லது பணபரிவர்த்தனைக்கோ ஆதார் எண் கட்டாயமல்ல. மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 6 ஆவணங்களில் ஆதார் எண்ணும் ஒன்று. எனவே வங்கி நடவடிக்கைகளை பெறவும் ஆதார் எண் கட்டாயம் இல்லை என தெரிவித்துள்ளார்.

சமச்சீர் கல்வி; உயர்நீதிமன்றம் அரசுக்கு நோட்டீசு!!!


தமிழகத்தில் நடைமுறையில் உள்ள சமச்சீர் கல்வியை மேம்படுத்தி, தரமான கல்வி வழங்க நடவடிக்கை கோரியதை, தானாக முன்வந்து பொதுநல வழக்காக விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை (நீதித்துறை) இளங்கோவன் தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழகத்தில் ஒன்று முதல் 10 ம் வகுப்புவரை நடைமுறையில் உள்ள சமச்சீர் கல்வியை ஒழுங்குபடுத்தி, மேம்படுத்தி, தரமான கல்வி வழங்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு பதிவாளர் மனு செய்திருந்தார். தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எஸ்.நாகமுத்து கொண்ட அமர்வு தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது.
நீதிபதிகள்: தமிழக கல்வித்துறை முதன்மைச் செயலர், பள்ளிக் கல்வி மற்றும் துவக்கக் கல்வி இயக்குனர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
இவ்விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு உதவ நடுநிலை அறிவுரையாளராக மூத்த வழக்கறிஞர் ஐசக்மோகன்லாலை நியமிக்கிறோம். விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனர்

2017 ல் வார இறுதி நாட்களுடன் மகிழ்விக்க வரும் விடுமுறைகள்

.

பிறக்கவிருக்கும் 2017 ம் ஆண்டில் அனைத்து விடுமுறை நாட்களும் வார இறுதி நாட்களை ஒட்டியே வருவது பலரையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
🌷  மொத்தம் 14 விடுமறை நாட்கள் வார இறுதி நாட்களுடன் சேர்ந்து வருகிறது.


அதிலும் ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை வருவது கூடுதல் 'ஜாக்பாட்'
செய்தி.


🌷ஜனவரி 🌷

26 ம் தேதி குடியரசு தினம் வியாழக்கிழமை வருகிறது. சனி, ஞாயிறு வார விடுமுறை என்பதால் வெளியூர்களில் தங்கி வேலை செய்வோர் வெள்ளிக்கிழமையும் விடுமுறை எடுக்க வாய்ப்புள்ளது.

பிப்ரவரி


24 ம் தேதி வெள்ளிகிழமை மகாசிவராத்திரி.


🌷மார்ச் 🌷


11, 12 ஆகிய நாட்கள் சனி,ஞாயிறு

இதைத் தொடர்ந்து 13 ம் தேதி திங்கள்கிழமை ஹோலி பண்டிகை விடுமுறை.

25, 26 சனி,ஞாயிறு.


28 ம் தேதி கூடி பட்வா (வடமாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகை) விடுமுறை

🌷ஏப்ரல் 🌷


1, 2 சனி,ஞாயிறு, இதைத் தொடர்ந்து 4ம் தேதி ராம நவமி விடுமுறை.


13 ம் தேதி வைஷாகி பண்டிகை,


 14ம் தேதி அம்பேத்கார் ஜெயந்தி மற்றும் புனிதவெள்ளி.


🌷ஏப்ரல் 🌷


14ம் தேதி தென்னிந்தியாவில் தமிழ் புத்தாண்டு தினமாகவும், சித்திரை விஷூவாகவும் கொண்டாடப்படுகிறது.


 இதைத் தொடர்ந்து 15, 16 ஆகிய நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறை.

16ம் தேதி ஈஸ்டர் தினம் விடுமுறையாகவே கருதப்படுகிறது.


29, 30 சனி, ஞாயிறு விடுமுறை. இதனைத் தொடர்ந்து மே 1 ம் தேதி விடுமுறை.


🌷ஜூன் 🌷


24, 25 சனி, ஞாயிறு. இதைத் தொடர்ந்து 26ம் தேதி திங்கள்கிழமை ரம்ஜான்.


🌷ஆகஸ்ட் 🌷


12,13 சனி,ஞாயிறு. 14ம் தேதி கிருஷ்ணஜெயந்தி.

15ம் தேதி சுதந்திர தினம்.

 மீண்டும் ஆகஸ்ட் 17 ம் தேதி வியாழக்கிழமை பார்சி புத்தாண்டு.

19 மற்றும் 20 சனி,ஞாயிறு விடுமறை.

இதனால் இடையில் வரும் 16 மற்றும் 18 ஆகிய தேதிகள் விடுமுறை எடுத்தால் தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.



🌷ஆகஸ்ட் 🌷



25 ம் தேதி வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தி.


இதைத் தொடர்ந்து 26, 17 சனி,ஞாயிறு விடுமுறை.


🌷அக்டோபர் 🌷

 செப்டம்பர் 30, அக்டோபர் 1 சனி,ஞாயிறு.


தொடர்ந்து அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி விடுமுறை.

14, 15 சனி,ஞாயிறு. அக்டோபர் 16 திங்கள் கிழமை தசரா.

17 ம் தேதி நரக சதுர்த்தி.

18 ம் தேதி புதன்கிழமை தீபாவளி.

19 ம் தேதி பலிபிரதிபதா பண்டிகை.

20 ம் தேதி பாய்துஜ் பண்டிகை.

தொடர்ந்து 21 மற்றும் 22 சனி,ஞாயிறு விடுமுறை.

🌷டிசம்பர் 🌷

டிசம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை மிலாடி நபி.


 2,3 சனி,ஞாயிறு விடுமுறை.

டிசம்பர் 23,24 சனி,ஞாயிறு.

 டிசம்பர் 25 திங்கள்கிழமை கிறிஸ்துமஸ் விடுமுறை.

இந்திய மாணவிக்கு அமைதி விருது





 

துபாய்: சர்வதேச அமைதி விருது, வெளிநாட்டு வாழ் இந்திய மாணவிக்கு வழங்கப்பட்டது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் வசிப்பவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவி கேஹ்காசன் பாசு. இவர் சுற்றுச்சூழல் ஆர்வலர். 'கிரீன் ஹோப்' என்ற பசுமை அமைப்பை நிறுவி, இயற்கை பாதுகாப்பு தொடர்பான பல்வேறு பணிகளை செயல்படுத்தி வருகிறார். இதில் 1000 தன்னார்வலர்கள் பணிபுரிகின்றனர். 10 நாடுகளில் இவரது அமைப்பு செயல்படுகிறது. இளம் வயதிலேயே இவர் ஆற்றிய பணிகளை பாராட்டி, நெதர்லாந்தின் ஹேக் நகரில் நடந்த விழாவில் 2016ம் ஆண்டுக்கான சர்வதேச குழந்தைகள் அமைதி விருது நேற்று இவருக்கு வழங்கப்பட்டது. இதனை வங்கதேசத்தை சேர்ந்த நோபல் அமைதி பரிசு பெற்ற முகமது யூனிஸ் வழங்கினார்.

பாசுவின் பெற்றோர் கோல்கட்டாவைச் சேர்ந்தவர்கள். இவர் 12 வயதிலேயே 'கிரீன் ஹோப்' அமைப்பை தொடங்கினார். அடுத்த 4 ஆண்டுகளில் கொலம்பியா, பிரான்ஸ், மெக்சிகோ, நேபாளம், ஓமன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் 5000 மரங்களை நட்டுள்ளார். இது தவிர யு.ஏ.இ., யில் பல்வேறு இயற்கை தொடர்பான பணிகளை செய்துள்ளார்.

சர்வதேச குழந்தைகள் அமைதி விருது 2005ம் ஆண்டு, நெதர்லாந்தில் தொடங்கப்பட்டது. உலகளவில் குழந்தைகளின் அரிய பணிகளை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது. விருதுடன் 72 லட்ச ரூபாய் வழங்கப்படுகிறது. முதல் விருது எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்திய தென் ஆப்ரிக்க மாணவர் நிகோசி ஜான்சனுக்கு வழங்கப்பட்டது. 2013ல் பாக்., சிறுமி மலாலாவுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதுக்கும், நோபல் அமைதி பரிசுக்கும் தொடர்பில்லை.

1 Dec 2016

4th week cce worksheets

பொதுக்குழு& செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்
திருப்பூர் மாவட்டம் செயற்குழு மற்றும் பொதுக்குழு

இடம் : மா.ந.நி.பள்ளி, தேவங்கபுரம்.

நாள் : 01.12.2016


பொருள் :

1) வரவு, செலவு
2) நிலுவைகள்
3) உறுப்பினர் சேர்க்கை
4) கோரிக்கை விளக்க மாநாடு
5) பிற...

போன்றவைகளை முன்வைத்து  தற்போது  நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது

9 Nov 2016

TET 82 marks judgement copy

TESTF 82 marks judgement copy

https://drive.google.com/file/d/0B_YeNwgt8TH5UEFyUVFuOTZaazQ/view?usp=drivesdk

வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது, சனி மற்றும் ஞாயிறு செயல்படும் என அறிவிப்பு




புதுடெல்லி, வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது, அந்த நோட்டுகளை டிசம்பர் 30-ந் தேதிக்குள் வங்கிகள் மற்றும் தபால் நிலைய கணக்குகளில் மாற்றி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. மாற்றாக மத்திய அரசு புதிய 500 ரூபாய், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துகிறது. இப்பணியினை விரைவில் நடைமுறைப்படுத்த பாரத ரிசர்வ் வங்கி அதற்கான பணியை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளும் விதமாக புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது என்று அறிவித்து உள்ள ரிசர்வ் வங்கி, சனி மற்றும் ஞாயிறு வங்கிகள் செயல்படும் என்று அறிவித்து  உள்ளது. 2-வது சனிக்கிழமை என்றாலும் வங்கிகள் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

6 Nov 2016

Periyar books

http://www.testftirupurnorth.blogspot.com பெரியாரின் புத்தகங்கள் - மின்னூல் வடிவில்

அழியட்டும் "ஆண்மை" --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/2.pdf
அழிவு வேலைக்காரன் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/3.pdf
ஆத்மா, மோட்சம் - நரகம் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/5.pdf
இந்து மதப் பண்டிகைகள் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/10.pdf
இயற்கையும், மாறுதலும் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/11.pdf
இராமாயணக் குறிப்புகள் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/13.pdf
இனிவரும் உலகம் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/15.pdf
உயர் எண்ணங்கள் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/16.pdf
கிராமங்கள் ஒழிய வேண்டும் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/20.pdf
சித்திரபுத்திரன் விவாதங்கள் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/22.pdf
சிந்தனையும் பகுத்தறிவும் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/23.pdf
சுதந்திரத் தமிழ்நாடே எனது லட்சியம் -- > http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/25.pdf
இலங்கைப் பேருரை --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/28.pdf
தமிழர்கள் இந்துக்களா ? --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/33.pdf
தமிழ்நாட்டு எல்லைப் போராட்டம்: பெரியாரும் ம.பொ.சி.யும் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/31.pdf
திராவிடர் - ஆரியர் உண்மை --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/36.pdf
திராவிடர் திருமணம் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/38.pdf
தேவதாசி ஒழிப்புச் சட்டம் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/39.pdf
பறையன் பட்டம் போகாமல் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/43.pdf
பிள்ளையாரை உடைப்போம் ! --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/46.pdf
புத்தர் விழா --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/48.pdf
புராணங்களை எரிக்க வேண்டும் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/50.pdf
பெண் விடுதலைச் சட்டங்களும் பார்ப்பனர்களும் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/51.pdf
பெரியாரின் தன் வரலாறு --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/57.pdf
பொதுத் தொண்டு --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/59.pdf
பொதுவுடைமை சமதர்மம் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/60.pdf
மனு சாஸ்த்திரத்தை எரிக்க வேண்டும். ஏன் ? --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/66.pdf
மனு நீதி: ஜாதிக்கொரு நீதி --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/68.pdf
ரஷ்யாவின் வெற்றி --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/69.pdf
ஜனநாயகத்தின் முட்டாள்த்தனம் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/73.pdf

3 Nov 2016

அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி : அறிக்கை தர அரசுக்கு உத்தரவு


'அரசு பள்ளிகளில் கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகளை மேம்படுத்த எத்தகைய உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்பது குறித்து, அரசு திட்ட அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

மதுரை ஆனந்தராஜ் 2014ல் தாக்கல் செய்த மனு: 'தமிழகத்தில், 5,720 பள்ளி களில் கழிப்பறை வசதி இல்லை' என, 2014 ஆக., 8 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்துவதால், மாணவர்களுக்கு தொற்று நோய் பரவுகிறது. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கழிப்பறை வசதிகள் செய்ய வேண்டும் என, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்திருந்தார்.
நீதிபதிகள், 'அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தண்ணீர் வசதியுடன் கழிப்பறை ஏற்படுத்த வேண்டும். பராமரிக்க போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும். இதில் மேற்கொண்ட நடவடிக்கை, நிறைவேற்ற எவ்வளவு கால அவகாசம் தேவை என்பது பற்றி தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, 2014ல் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கை நேற்று, நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் அடங்கிய அமர்வு விசாரித்தது. மூன்று மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வழக்கறிஞர் கமிஷனர்கள் குழுவினர் நேற்று அறிக்கை தாக்கல் செய்தனர். இதில், கழிப்பறைகள், தண்ணீர் வசதி, துப்புரவு பணியாளர்கள் போதிய அளவு இல்லை. கழிப்பறைகள் மோசமான நிலையில் உள்ளன. 


சில பள்ளி களில் மின் கட்டணத்தை ஆசிரியர்கள் சொந்த பணத்திலிருந்து செலுத்துகின்றனர். அதை கல்வித்துறையே ஏற்று, மின்வாரியத்திற்கு செலுத்தலாம். நாப்கின் வசதி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. நீதிபதிகள் உத்தரவில் கூறியதாவது: பல்வேறு குறைபாடுகள் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மூன்று மாவட்ட பள்ளிகளிலேயே இந்நிலை எனில், மற்ற மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் நிலை பற்றி உங்களுக்கே தெரியும். 


வழக்கறிஞர் கமிஷனர்கள் சுட்டிக்காட்டியுள்ள குறைகளை நிவர்த்தி செய்யவும், பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், எத்தகைய உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது பற்றி பள்ளிக் கல்வித்துறை செயலர் நவ., 8ல் திட்ட அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறினர்

பள்ளிகளில் 'ஆதார்' பதிவு: நவ.,15ல் மீண்டும் துவக்கம்*



அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, 'ஆதார்' அட்டை வழங்கும் பணி, நவ., 15ல் மீண்டும் துவங்குகிறது.
இதுகுறித்து, அரசு கேபிள், 'டிவி' நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில், ஆதார் அட்டை பதிவு பணிகளை, அக்டோபர் முதல், மாநில அரசு ஏற்றுள்ளது. அதனால், செப்டம்பர் வரை, ஆதார் பதிவு பணிகளை மேற்கொண்ட, மத்திய அரசின், 'பெல்' நிறுவனம் விலகியது.


இதனால், அரசுப் பள்ளிகளில் நடந்து வந்த மாணவ, மாணவியருக்கான, ஆதார் பதிவு பணிகள் நின்று போயின. அப்பணிகளை மீண்டும் தொடரும்படி, பள்ளிக் கல்வித் துறை வலியுறுத்தியது.
அதைத் தொடர்ந்து, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு, ஆதார் விபரம் பதிவு செய்யாத மற்றும் பணிகள் முழுமையாக நிறைவு பெறாத பள்ளிகளின் பட்டியல் பெறப்பட்டுள்ளது.


தற்போது, பல சிக்கல்களுக்கு பின், பொது மக்களுக்கான ஆதார் பதிவு பணிகளை, முழு வீச்சில் துவங்கி விட்டோம். பள்ளிகளில், ஆதார் பணிகளை, நவ., 15ல் துவங்கவுள்ளோம்; பொங்கல் பண்டிகைக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்; இப்பணியில், 500 பேர் ஈடுபடுவர்.


பொதுவாக, அரசு பள்ளிகளில் படிப்பவர்கள் தான், கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல சலுகைகளுக்காக, மனு செய்கின்றனர். அதனால் தான், அரசு பள்ளிகளுக்கு நேரடியாக சென்று, ஆதார் பதிவு செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

10th standard way to success tamil guide a

https://drive.google.com/file/d/0B_YeNwgt8TH5MV9ELWJNMzIxWGc/view?usp=drivesdk

2 Nov 2016

இல்லந்தோறும் இணையம் திட்டம்:

இல்லந்தோறும் இணையம் திட்டம்: விண்ணப்பங்கள் வரவேற்பு
"இல்லந்தோறும் இணையம்' திட்டத்தில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன் விவரம்:

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் ஏற்கனவே பெற்றுள்ள இணைய சேவை உரிமத்தை பயன்படுத்தி, "இல்லந்தோறும் இணையம்" என்ற கொள்கையின் அடிப்படையில், அதிவேக அகண்ட இண்டர்நெட் சேவைகளை மாவட்ட தலைநகரங்களில் வழங்கி வருகிறது. குறைந்த கட்டணம் -சிறப்பான சேவையின் காரணமாக இந்தத் திட்டம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையடுத்து இரண்டாம் கட்டமாக, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நகராட்சி பகுதிகளிலும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துடன் இணைந்து, அதிவேக அகண்ட அலைவரிசை இண்டர்நெட் சேவைகளை வருவாய் பங்கீட்டு முறையில் வழங்குவதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விருப்பம் கோரும் விண்ணப்பத்தை நிறுவனத்தின் இணையதளத்தில் (www.tactv.in)   இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் நவம்பர் 15, மாலை 3 மணி.

27 Oct 2016

அண்ணாமலைப் பல்கலை.யில் சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம்

🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் பெறாத மாணவர்களுக்கு அதை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.


பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம் கடந்த 15 ஆண்டுகளாகப் படித்து தேர்ச்சி பெற்றவர்களில் சிலர் தங்களது மதிப்பெண் பட்டியல் (Mark Sheet), பட்டச் சான்றிதழை(Covocation)  இதுவரை பெறாததால் அவை தேர்வுத் துறையில் உள்ளன.


அந்த மாணவர்கள் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்வதற்கானசிறப்பு முகாம் டிசம்பர் 9 முதல் 11-ஆம் தேதி வரை பல்கலைக்கழகத் தேர்வுத் துறை கட்டடத்தில் நடைபெற உள்ளது. எனவே, இதுவரை சான்றிதழ் பெற்றுக் கொள்ளாதவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பயன்பெறலாம்.


மாணவ, மாணவிகள் தங்களது அடையாள அட்டையுடன் நேரில் வந்து, பல்கலைக்கழகத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைச் செலுத்தி சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.

 மேலும் விவரங்களுக்கு 04144-238027, 237368, 238358, 04144-238282, 238248 EX: 578 என்ற எண்களிலும், aucertisplcamp16@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம் என தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரி ராம.சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.

ஆதார் அட்டை பதிவுக்கு காலக்கெடு ஏதுமில்லை'

🍄🍄🍄🍄🍄🍄🍄🍄


குடும்ப அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணிக்கு காலக்கெடு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என்று உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவித்துள்ளார். மேலும், ஆதார் எண்ணை இணைக்காத குடும்ப அட்டைகளுக்கு பொருள்கள் நிறுத்தப்படும் என்று வெளியான தகவலையும் அவர் மறுத்துள்ளார்.


சென்னையில் உள்ள அமுதம், கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் அமைச்சர் ஆர்.காமராஜ் புதன்கிழமை ஆய்வு நடத்தினார். இதைத் தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-


தீபாவளி பண்டிகைக்கு முன்பாக, அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் அத்தியாவசியப் பொருள்கள் நகர்வு செய்துமுடிக்கப்பட வேண்டும். மாத ஒதுக்கீட்டின்படி பொருள்கள் நகர்வு செய்து முடிக்க வேண்டும். மேலும், அத்தியாவசியப் பொருள்கள் சீரான முறையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்வது உறுதி செய்யப்பட வேண்டும்.


ஆதார் எண் பதிவு: ஆதார் எண் பதிவுகள் மேற்கொள்ளாத அட்டைதாரர்களுக்கு பொருள்கள் விநியோகம் நிறுத்தப்பட மாட்டாது. இந்தப் பணிகளுக்கு காலநிர்ணயம் செய்யப்படவில்லை. ஆதார் எண்ணை இணைக்காதோரும் பொருள்கள் வழங்குவதற்கு வழக்கமான நடைமுறையே பின்பற்றப்பட்டு வருகிறது.


பொருள் தேவைப்படாத அட்டைதாரர்களும்...:


எந்தப் பொருளும் தேவைப்படாத குடும்ப அட்டை ("என் கார்டு') வைத்துள்ளோர், குடும்ப அட்டை காலக்கெடு (31.12.16 வரை) நீட்டிப்பு பிரதி, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் தங்கள் பகுதிக்குரிய நியாய விலைக் கடைக்குச் சென்று செல்லிடப்பேசி உள்ளிட்ட சுயவிவரக் குறிப்புகளைக் கூறி ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் என்றார்.ஆய்வின்போது உணவு பொருள் வழங்கல்- நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் மதுமதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

8 ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி: மாநிலங்களின் முடிவுக்கு விட்டது மத்திய அரசு

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷






பள்ளி மாணவர்களுக்கு 8-ஆம் வகுப்பு வரை கட்டாயமாக தேர்ச்சி அளிக்கும் கொள்கை தொடர்பான இறுதி முடிவை சம்பந்தப்பட்ட மாநிலங்களிடமே விட்டுவிடுவதாக மத்திய அரசு கூறியுள்ளது.



மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தலைமையில் தில்லியில் மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.


இதில், "8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை கடைப்பிடிக்கப்படுவதால் கல்வித் தரம் குறைகிறது. எனவே, 5-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி பெறவைப்பது தொடர்பாக இறுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும்' என்று பல்வேறு மாநிலங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.



கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ஜாவடேகர் கூறியதாவது: மாநில அரசுகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது.

 இது தொடர்பாக உரிய சட்டத் திருத்தத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வரும். அது வரை 8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் கொள்கை தொடர்பான இறுதி முடிவை மாநில அரசுகளே எடுத்துக் கொள்ளலாம்.


மாநிலக் கல்வி வாரியத்தில் ஏற்கெனவே 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு உள்ளது. அதேபோல மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திலும் (சிபிஎஸ்இ) 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பான திட்டம் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது. இது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும்.

 மத்திய கல்வி ஆலோசனை வாரியக் கூட்டத்தை அடிக்கடி நடத்த வேண்டும் என்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.


மத்திய, மாநில அரசுகளுக்கு கல்வித் திட்டங்கள் தொடர்பாக ஆலோசனைகள் அளிப்பதில் முதன்மையானது மத்திய கல்வி ஆலோசனை வாரியமாகும்.

 இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜீவ் பிரதாப் ரூடி, விஜய் கோயல், மகேந்திர நாத் பாண்டே, உபேந்திர குஷ்வாஹா, 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த கல்வி அமைச்சர்கள், மாநிலப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

23 Oct 2016

OCTOBER SALARY

தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு மாநில கருவூல கணக்குத்துறை இயக்குநர் அவர்கள் அனைத்து மாவட்ட கருவூல அலுவர்களுக்கும் தெரிவித்துள்ள அறிவுரைகளின்படி, வரும் திங்கட்கிழமை 24.10.2016 அன்று கருவூலகத்தில் பணியாளர்களது ஊதியப்பட்டியல் தயார்செய்து வழங்கினால் தீபாவளிக்கு முதல் நாள் 28.10.2016 அன்று ஊதியம் வழங்கிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது என்ற செய்தியினை தெரிவித்துக
கொள்கிறோம்.

SABL ஏற்கக் கூடிய ஒன்றா? இணையத்தில் ஓர் கட்டுரை !! கற்பிப்பு முறைகளும் கள(கால)த் தேவையும்:



*செயல்வழிக் கற்றல் எளிமைப்படுத்தப்பட்டதா?*

SABL மிக எளிய நடைமுறையாக இருக்க வேண்டுமெனில், ஒரு வகுப்பில்

1. மாணவர்கள் மீத்திறன் மிக்கவர்களாக இருக்க வேண்டும்.

2. மாணவர் எண்ணிக்கை 15

3. ஆசிரியர் துடிப்பான & உடல் வலிமை மிக்கவராக இருத்தல்.

ஆகிய இம்மூன்றில் ஏதேனும் 2 கூறுகள் இருந்தே ஆகவேண்டும்.

2 கூறுகள் கூட இல்லையெனில் SABL நடைமுறை 100% வெற்றி பெறவது இயலாது.

SABL ஏற்கக் கூடிய ஒன்றா?

மேலை நாடுகள் சிலவற்றிலும் இம்முறை உள்ளது. ஆனால் அங்கு ஆசிரியர் மாணவர் விகிதம் பின்பற்றப்படுகிறது. உதாரணமாக அமெரிக்காவில், 5 வயதினருக்கு 1:10, 7 வயதினருக்கு 1:12 என்று மாணவர் விகிதம் வயதைப் பொறுத்து நடைமுறையில் உள்ளது. மேலும், பல்வகுப்புக் கற்பித்தல் இல்லை. இதுபோன்ற நடைமுறை இங்கும் பின்பற்றப்படுமாயின் இது ஏற்கக் கூடியதே!

*சிறப்பாகச் செயல்படுத்தியுள்ளனரா?*

ஆம். நானல்ல, எனது நண்பர்கள் சிலர் SABL-ஐ மிகச் சிறப்பாகக் கையாண்டு வருகின்றனர். அவர்களின் வகுப்பறை மேலே கண்ட கூறுகளில் ஏதேனும் 2-னை உடையதாகவே இருந்து வந்துள்ளது. குறிப்பாக இவர்கள் சோர்வறியாதவர்கள். மாணவர் எண்ணிக்கை கூடும் சூழலில் அவர்களும் மலைத்ததுண்டு. அவர்களின் வலிமை அவ்வேளையில் உற்ற துணையாக இருந்துள்ளது.

*SABL சிறப்பாக உள்ளதா?*

என்றால் இல்லை என்பதே விடை. புத்தகம் - அட்டை என பல குழப்பங்களை உள்ளடக்கியுள்ளது. 2-ற்கும் இடையே அதிக வேறுபாடுகளும் உள்ளது. ஏணிப்படி நிலையிலும் முன்பின் முரண் & பாடப்பகுதி இல்லாதது என பல குறைபாடுகள் உள்ளது.

"தனியாள் வேற்றுமை" என்ற பதத்தை உளவியல் தேர்வோடு மறந்துவிட்ட கல்வித்துறை அலுவலர் & அதிகாரிகள், ஆசிரியர் என்பவரும் மானுடன் தான்; அவருக்கும் மானுடத்திற்குரிய அனைத்து உளவியல் & உடலியல் கூறுகள் உண்டு என்பதையும் மறந்து மறத்துப் போய்விட்டதன் விளைவே ஒரே எதிர்பார்ப்பில் அனைத்துப் பள்ளிகளையும் பார்வையிடுதல் என்பது.

நோயுற்றவனைச் சோதித்து தான் மருந்துகள் வெளியிடப்படும். ஆனால் கல்வித் துறையில் மட்டும் மிகச் சிறந்த மீத்திறன் மாணவர் பெரும்பான்மையாக உள்ள பள்ளிகளில் தங்களின் பயிற்றுவிப்பு நடைமுறைகளைச் சோதித்துவிட்டு அதனை மாநிலம் முழுமைக்கும் நடைமுறைப்படுத்துவதோடு, அதே விளைவு அனைத்துப் பள்ளிகளிளும் எதிர்பார்க்கப்படுகிறது.

*என்னதான் செய்வது?*

கல்விக் கொள்கைகளை விவாதத்திற்கு உட்படுத்துதல் எவ்வளவு இன்றியமையாததோ அதே அளவு முக்கியமானது கற்பித்தல் முறைகளைப் பற்றிய விவாதங்களும்.

கற்பித்தல் முறைகள் தொடர்பான விவாதத்திற்கு எந்தவொரு ஆசிரிய இயக்கமும் முன்வந்ததாக எனக்கு நினைவில்லை. அதிகார வர்க்கத்தின் திணிப்பை எவ்வித விமர்சனமும் இன்றி அப்படியே பின்பற்றி வரும் நிலை தான் இன்றும் உள்ளது.

கற்பித்தல் முறை என்பதும் ஆசிரியர் & மாணவர்சார் பிரச்சினையே என்பதை அனைத்து இயக்கங்களும் உணர வேண்டும்.

நடைமுறையில் உள்ள SABL, SALM, ALM என அனைத்து கற்பித்தல் முறைகளையும் ஆசிரிய இயக்கங்கள் தாமே முன்வந்து தனதளவில் ஆய்வு செய்திட வேண்டும். ஏனெனில் நடைமுறைச் சிக்கல்களை பச்சை மையில் கையொப்பமிடும் அதிகாரிகள் அல்ல பச்சைக் குழந்தைக்குப் பாடம்புகட்டும் ஆசிரியர்கள் தான் அறிவர்.

ஆண்டுதோறும் கோடிக்கணக்கான நிதி குறு / வட்டார வளமையப் பயிற்சிகள் என்ற பேரில் களத்தேவைக்கு ஏற்பில்லாத பணியிடைப் பயிற்சிகளால் வீணாகிக் கொண்டு தான் உள்ளது. காரணம் இப்பயிற்சிகளை முடிவு செய்வது அதிகார வர்க்கமாக உள்ளதே அன்றி, தனது தேவையை உணர்ந்த ஆசிரியர்கள் / ஆசிரியப் பயிற்றுநர்கள் அல்ல.

நாடாக் கோப்பில் முன்மொழியப்படும் திட்டங்கள் எந்த அளவிற்கு நடைமுறைச் சாத்தியம் உள்ளது என்பதை ஆய்ந்து தெளியும் அறிவுப் பணியில் ஆசிரிய இயக்கங்கள் கவனம் செலுத்தி, ஆய்ந்து செயல்படுத்த முன்வர வேண்டும்.

இப்படிப்பட்ட ஆய்வுகளை நடைமுறைச் சாத்தியத்திற்கு ஏற்றதாக்கும் பொறுப்பும் கடமையும் இயக்க உறுப்பினர்களான ஆசிரியர்களிடமே உள்ளது.

உடல் நலம் பெற வேண்டுமெனில் பிணியாளிக்கான மருத்துவ முறையை  மருத்துவர் தான் நிர்ணயிக்க வேண்டும். நாடு வளம்பெற வேண்டுமானால் மாணவர்களுக்கான பயிற்றுவிப்பு முறையை ஆசிரியர் தான் தீர்மானிக்க வேண்டுமே அன்றி பயிற்றுவிக்கும் சூழலே அறியாத ஆட்சிப்பணி அதிகாரிகள் அல்ல.

_*✍🏼சிறுதுளி💧

அனைத்து மாவட்ட மாணவர்கள் விபரங்களை STUDENT POOLலிருந்து எளிதில் விபரங்களை ஈர்க்க அனைத்து பள்ளிகளின் UDISE CODE உடன் -

ALL SCHOOL U DISE CODE
ALL SCHOOL DISE CODE ... CLICK HERE

22 Oct 2016

ஒரு வார்த்தை ஒரு லட்சம்

ஒரு வார்த்தை ஒரு லட்சம் பிரமாண்டமான இறுதிப்போட்டியில் முத்திரை பதிக்குமா... மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி?


கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்திலுள்ள மூலத்துறை நடுநிலைப் பள்ளி ஆசிரியரும் அப்பள்ளி மாணவியும் கலந்து கொண்ட "ஒரு வார்த்தை ஒரு லட்சம் " நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியானது வரும் ஞாயிறு (23/10/2016) மாலை 6 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. அரசுப்பள்ளியின் முயற்சியை காணத் தவறாதீர்..

பொம்மலாட்டம் ஆடும் ஆசிரியர்கள் : அடிப்படை கல்விக்கு 'டாட்டா

!'




அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., சார்பில், ஆசிரியர்களுக்கு, பொம்மலாட்டம் போன்ற நடனப் பயிற்சிகள் தரப்படுவதால், மாணவர்களுக்கான அடிப்படை கல்வி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அடிப்படை கல்வியை வலுப்படுத்த வேண்டிய, எஸ்.எஸ்.ஏ., என்ற, மாநில திட்ட அமைப்பு, மத்திய அரசிடம் பெறும், பல கோடி ரூபாய் நிதியில், ஆசிரியர்களுக்கு பல பயிற்சிகளை அளிக்கிறது.



இதற்காக வரும் ஆசிரியர்களுக்கு, போக்குவரத்து செலவு, உபசாரம், விடுமுறை என, சலுகைகளும் அளிக்கப்படுகின்றன.

 சென்னையில், இரு நாட்களாக, நுாற்றுக்கணக்கான ஆசிரியர்களுக்கு, பொம்மலாட்டம் கற்பித்தல் பயிற்சி நடந்தது.


 பொம்மலாட்ட பயிற்சி முடித்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடம் நடத்த துவங்கும் முன், அடுத்த பயிற்சிக்கு அழைக்கப்படுகின்றனர்.


 'மாணவர்களுக்கு உதவாத, இது போன்ற ஆட்டம் காட்டும் பயிற்சி களை வைத்தே, பல ஆசிரியர்கள் பள்ளிகளில் இருப்பதில்லை' என, தலைமை ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.


 மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, எஸ்.எஸ்.ஏ., பாடம் நடத்துகிறது.


பாடம் கற்க வேண்டிய மாணவர்களோ, வகுப்புகளில், ஆசிரியர்கள் இன்றி தடுமாறுகின்றனர் என, கல்வியாளர்கள் குமுறுகின்றனர்.


இது குறித்து, ஆசிரியர் கள் சிலர் கூறுகையில், 'பாடங்களை முறையாக நடத்த ஆசிரியர்களுக்கு உத்தரவிட வேண்டும். பின், இது போன்ற நடனங்களை கற்று தரலாம்.


'எஸ்.எஸ்.ஏ., நடத்தும் மதிப்பீட்டு தேர்வில், மாணவர்கள் பின்தங்கி உள்ளனர். அதன் பின்னும், இது போன்ற பயிற்சிகள் கைகொடுக்க வில்லை என்பதை, அவர்கள் உணரவில்லை' என்றனர்.

11 Oct 2016

Cps missing credit

🍁CPS MISSING CREDIT🍁

👉 வலைதளத்தில்
http://218.248.44.123/auto_cps/public என்ற இணையப் பக்கத்தில்
 உங்களது  CPS கணக்கை லாக்இன் செய்தால் தற்போது இடது பக்கத்தில் புதிய ஆப்சனாக மிஸ்சிங் கிரிடிட் (MISSING CREDIT) உள்ளதை கிளிக் செய்தால் 2015-2016 ல் உங்களது கணக்கில் உள்ள மிஸ்சிங் கிரிடிட் தொகை மற்றும் டோக்கன் நம்பருடன் வரும்.
அந்த CPS பிடித்தம் செய்த தொகை சரியானதாக இருந்தால் அக்ரி
( AGREE ) புள்ளியை கிளிக் செய்யவும்.

👉 தொகை தவறானதாக இருந்தால் டிஸ்அக்ரி
(DIS AGREE) என்று கிளிக் செய்யவும்.

👉 உங்களின் DDO மாற்றம் இருப்பின் அலுவலகத்தில் தெரியப் படுத்தவும்.

ஆயிஷா இரா. நடராசன் அவர்களின் *வன்முறையில்லா* வகுப்பறை என்ற புத்தகத்திலிருந்து... (ஒவ்வொரு ஆசிரியரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்...)



ஆயிஷா இரா. நடராசன் அவர்களின் *வன்முறையில்லா வகுப்பறை* என்ற புத்தகத்திலிருந்து...
(ஒவ்வொரு ஆசிரியரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்...)


““எப்போது பள்ளிக்கு விடுமுறை என அறிவித்தால் குழந்தைகள் மனம் வருந்துகிறார்களோ, பள்ளி வேண்டும் என அடம் பிடிக்கிறார்களோ, அப்போதுதான் உண்மையான கல்வி நடக்கிறது என்று அர்த்தம்...”
- ஜார்ஜ் பெர்னாட்ஷா


நாம் இந்தப் பகுதியில் 4 வகுப்பறை காட்சிகளைக் கண்டு, அதுபற்றி தீவிரமாக ஆராய இருக்கிறோம். இம்மாதிரி நிகழ்வுகள் நம் வகுப்பறைகளில் தினமும் நடப்பதுதான். ஒரே சூழல். ஒரே நிகழ்வு. ஆனால், வேறு வேறு அணுகுமுறைப்படி ஒரு மாணவன் நடத்தப்படுகிறான். நான்கு காட்சிகளையும் வாசித்தபிறகு அவற்றை ஒவ்வொன்றாகப் பரிசீலிப்போம். எது சரியான அணுகுமுறை
என்பதை விவாதிப்போம்.


காட்சி-1


ஆசிரியை லட்சுமி, தான் வகுப்புஎடுக்கும் நான்காம் வகுப்பு (கணிதப் பாடவேளை)க்குள் நுழைகிறார். அது காலை இரண்டாவது பீரியட். வகுப்பில் அனைவரும் எழுந்து ‘குட்மார்னிங் மேடம்’ என்கிறார்கள். தொடர்ந்து ஒரே இரைச்சல். லட்சுமி கத்துகிறார். “கீப்... கொயட்... பேசாத... கவனி...”
வகுப்பு ஓரளவு அமைதியாகிறது. ஆனால், மூன்றாம் பெஞ்சில் உள்ள ரவி பேசுவதை நிறுத்தவே இல்லை. நேற்று நடந்த கிரிக்கெட் ஆட்டம் பற்றி சுவாரசியமாகத் தன் நண்பனோடு விவாதிக்கிறான். “ரவி... ஏண்டா இப்படி இருக்க... உன்னை திருத்தவே முடியாதா...” என்கிறார் லட்சுமி. கோபம் அடங்காமல், “எழுந்து வெளியே போ... கெட் அவுட்...” என்கிறார்.


ரவி முதலில் முரண்டு பிடித்தாலும் மெல்ல எழுந்து வகுப்பறை வாசலில் நிற்கிறான். வகுப்பு தொடர்ந்தது. அந்த வழியே வந்த தலைமை ஆசிரியர், “என்ன லட்சுமி மிஸ்... என்ன பிராப்ளம்... இங்கே யார் BOSS-ன்னு இவனுக்கு காட்டவா?” என்று ரவியைக் காட்டி மிரட்டுகிறார். ரவிக்கு ஒன் பாத்ரூம் வந்து முட்டியது. அச்சத்தில் அழுகை தொண்டையை அடைத்தது. கண்டிப்பாக நாளை பள்ளிக்கு வரமாட்டான்.


காட்சி-2


ஆசிரியை லட்சுமி, நான்காம் வகுப்பிற்குள் நுழைந்து பாடத்தை தொடங்கினார். ஆனாலும் எல்லாரும் பேசிக்கொண்டே இருந்தார்கள். “பிளீஸ்... கீப்... கொயட்... நாம இன்னைக்கு முக்கியமான கணக்கு போடப்போறோம். எல்லாரும் இங்கே கவனிக்கணும்.

 தெரியுதா...” என்று அறிவித்தார். ரவி மட்டும் தொடர்ந்து தொண தொணவென்று பேசிக்கொண்டிருந்தான்.
“யார் இன்னமும் பேசிக்கிட்டிருக்கிறது?” லட்சுமி கேட்டார். “இன்னமும் விதிகளை மதிக்காதவர்கள் இருக்காங்க போலருக்கு...” என இரைந்தார்.

 வகுப்பறை வழியே சென்ற தலைமை ஆசிரியர் காதில் விழுந்தது. “என்ன லட்சுமி மிஸ்... ஏதாவது பிராப்ளமா... உடனே தீர்த்து வெச்சுடலாம்... சொல்லுங்க” என்றார்.


வகுப்பே கப்சிப். “நோ பிராப்ளம் சார்... நான் பார்த்துக்கிறேன்...” - லட்சுமி பணிவோடு பதிலளிக்க அவர் போய்விடுகிறார். “எச்.எம். ஏன் அப்படி சொன்னாரு... ரவி? உனக்கு புரியுதா?” என்று ரவியைப் பார்த்துக் கேட்கிறார். குற்ற உணர்வோடு எழுந்து நிற்கிறான் ரவி. “நீங்க... ‘கொயட்’ன்னு சொன்ன பிறகும் நான் பேசிக்கிட்டிருந்தேன்...” லட்சுமி சொன்னார் “அந்த பயம் இருக்கட்டும்... உட்காரு..!”
ரவிக்கு வியர்த்தது.

அவரைக் கற்றலில் நுழைக்க விரும்பிய லட்சுமி, “சரி... 100 எனும் எண்ணை இரண்டால் வகுத்தால் விடை என்ன? ரவி... சொல்ல முடியுமா...?” என்றார். “தெரியும் மிஸ்... 50...”“குட்...” லட்சுமி புன்னகைத்தார். அந்த வகுப்பு முடியும் வரை ரவி பேசவே இல்லை.


காட்சி-3


ஆசிரியை லட்சுமி நான்காம் வகுப்பில் கணித பாடம் நடத்தத் தொடங்கினார். மாணவர்கள் சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர். “பேசுவதை நிறுத்துங்க... கொயட்... இன்று நாம் புது கணித பாடம் தொடங்குகிறோம்.

 எல்லாரும் கொஞ்சம் குளோசா... லிசன் பண்ணணும்...?” அதன்பின் வகுப்பே அமைதியானது. ரவி மட்டும் பேசுவதை நிறுத்தவே இல்லை.
லட்சுமி ஒரு துண்டுச் சீட்டை எடுத்தார். “வகுப்பில் பாடத்தைக் கவனிக்கத் தவறினான்” என்று எழுதி கையொப்பமிட்டார். “ரவி இதில் உன் பெயரை எழுது” என்றார். “இந்த ஸ்லிப் உன் மேசை மேலிருக்கும். வகுப்பு முடிந்தும் உன் பிரச்னை தொடர்ந்தால் தலைமை ஆசிரியரிடம் தரப்படும்” என வகுப்பே கேட்குமாறு அறிவித்தார்.

 வகுப்பின் முடிவில் ரவி அந்த காகிதத்தைக் கிழித்து குப்பைக் கூடையில் போட்டான். ஏனெனில் அவன் முழு வகுப்பும் பேசக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.


காட்சி-4


ஆசிரியை லட்சுமி நான்காம் வகுப்பில், கணிதப் பாடம் நடத்துகிறார். இன்று, மூன்றிலக்க வகுத்தல் பாடம். வகுப்பே கூச்சலோடு பேசிக் கொண்டிருந்தது.

 “அங்க என்ன பேச்சு... லிசன்..” என்கிறார். ஓரளவு அமைதி... மாணவர்களில் ரவி பேச்சை நிறுத்துவதாக இல்லை. அவர்கள் எதன் மீது ஆர்வத்தோடு இருக்கிறார்கள் என்பதைச் சற்று உற்றுக் கவனித்தார்.


“நேற்று யாரெல்லாம் கிரிக்கெட் மேட்சு டி.வில பார்த்தீங்க.. கை தூக்குங்க” என்றார். ரவி உற்சாகத்தோடு கையை உயர்த்தினான். “கிரேட்...” என்றார் லட்சுமி. “அதில் ரன்-ரேட் பற்றி யாருக்கெல்லாம் தெரியும்?” என்றார் லட்சுமி. “மிஸ் மிஸ்” என்று நாலைந்து பேர் போட்டி போட்டனர். “கவனிங்க... நம்ம இந்திய அணி ஸ்கோர்-110... இப்போ 11 ஓவர் முடிஞ்சிருக்கு. அப்போ ரன் ரேட் எவ்வளவு?” என்று கேட்டார் லட்சுமி.

 ரவிக்கு உற்சாகம் தாங்கவில்லை. “எப்படி மிஸ் கண்டுபிடிக்கறாங்க?” என்று கேட்டான். “இதுக்கு ரன்ரேட் கண்டுபிடிக்க 110-ஐ 11-ஆல் வகுக்கணும் ரொம்ப ஈ.சி? போர்டை பாருங்க...”
அவ்வளவுதான் ரவி கரும்பலகையை விட்டு தன் கவனத்தைத் திருப்பவே இல்லை. அவனே சொந்தமாக ரன்-ரேட் கண்டுபிடிக்கக் கற்றுக்கொள்ளத் துடித்தான். வகுப்பறையில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.சரி. மேற்கண்ட 4 காட்சிகளும் நமக்கு விளக்குவது என்ன? அணுகுமுறைகள் ஆசிரியரின் திறன்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதை இவை நிரூபிக்கின்றன.


காட்சி-1


(1) ரவிக்குத் தண்டனை வழங்கப்படுகிறது.

(2) தலைமை ஆசிரியர் அவருக்குப் பேரச்சத்தை ஏற்படுத்துகிறார்.

(3) குழந்தைகள் உரிமை மீறல், தகாத மிரட்டல், உடல் மற்றும் மனரீதியில் உளைச்சல் பலவற்றையும் ஆசிரியை ரவிக்கு ஏற்படுத்தி விடுகிறார்.

(4) தன்மீதும், வகுப்பின் மீதும் வெறுப்பு ஏற்பட்டதால் ரவி கற்றலில் ஈடுபட முடியவில்லை.

(5) அவர் பள்ளியை வெறுக்கத் தொடங்குகிறார்.

(6) மாணவர் நடத்தை மீது கவனம் செலுத்தாமல் மாணவர் மீதே கவனம் குவிகிறது.

காட்சி-2


(1) ரவிக்குத் தண்டனை எதுவும் வழங்கப்படவில்லைதான்.

(2)ஆனால், தலைமை ஆசிரியர் அச்சத்தை ஏற்படுத்துகிறார்.

(3)உடல் அளவு தண்டனை இல்லாமல் மனதளவு உளைச்சலை ஆசிரியை ஏற்படுத்துகிறார்.

(4)அதே அச்சம் வெறுப்பு ரவிக்கு ஏற்படுகிறது.

(5)ஒரு கேள்வி கேட்டு விடை பெற்று பாராட்டி ஆசிரியை புன்னகைப்பதன் மூலம் கற்றல் ஓரளவு மட்டுமே சாத்தியமாகிறது.

(6)இந்த காட்சியிலும் நடத்தையின் மீது கவனம் செலுத்தாமல் ரவி எனும் நபரின் மீதே கவனம் செலுத்தப்படுகிறது.


காட்சி-3


இது சற்று வேறுபட்ட அணுகுமுறை. சராசரியாகப் பலராலும் ஏற்கப்படும் நெறிப்படுத்துதல் இது. ஆபத்தற்ற விஞ்ஞானபூர்வமான அணுகுமுறை. தனது நடத்தையைத் தானே மாற்றிக்கொள்ளவும் சரி செய்துகொள்ளவும் இந்த ‘துண்டுச்சீட்டு’ முறை மாணவருக்கு உதவுகிறது. ஆனால் இறுதித் தீர்வு எது என்று பார்த்தீர்களா..? மாணவனின் தலைமை ஆசிரியர் அறையை நோக்கிய அச்சம்.


அதைத் தவிர்க்க அவன் தனது நடத்தையை மாற்றிக்கொள்ள வேண்டும். இது ஏனைய முந்தைய மூன்று அணுகுமுறை போலவே, ஆனால், வலி இல்லாமல் வேலை செய்கிறது. தனது பாடமான கணிதத்தைவிட மாணவன், தான் பேசிவிடக்கூடாது என்பதன் மீதே அதிக கவனம் செலுத்துவதால்...
கற்றலை இந்த முறை கடினமாக்கி விடுகிறது என்பதை கவனிக்கவும்.


காட்சி-4


என்ன ஒரு அற்புதம்! வகுப்பே உற்சாகமாகக் கற்றலில் ஈடுபடுகிறதே... இதற்கு என்ன காரணம்? இந்த காட்சியில், தன்னைவிட மாணவர்களின் விருப்பமான இலக்கு ஒன்று அதிக ஆர்வம் ஏற்படுத்துவதாக இருப்பதை ஆசிரியை கண்டறிந்துவிடுகிறார்.
 அதைக் கற்றலுக்குப் பயன்படுத்துகிறார். அவருக்கு தனது கணிதத்தின் மீதும், மாணவர்களின் ஆர்வத்தின் மீதும், பங்கேற்பின் மீதும் அதிக கவனமும் சிறப்பான அணுகுமுறை மூலம் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பாங்கும் கைவரப்பெற்றவராக ஆசிரியர் இருப்பதைப் பார்க்கிறோம்.


பாடம், பள்ளி, வகுப்பு என யாவற்றின் மீதும் குழந்தைகளுக்குக் காதல் வரச்செய்யும் இந்த அணுகுமுறை எவ்வளவு முக்கியம்? மாணவன் பேசுகிறான் என்பதைத் தனது தடையரணாக நினைக்காமல் அதையே சாதகமாக ஆக்கும் இந்தக் காட்சி நான்குதான் இன்றைய ‘ஆட்ட நாயகன்’ அல்லவா.
உற்சாகமான வகுப்பறைகளே வன்முறை இல்லா வகுப்பறைகள் என்பதை நிரூபிக்க வேறு என்ன சாட்சி வேண்டும்?..

குழந்தைகளின் கையெழுத்தை அழகாக்க 7 டிப்ஸ்!!

குழந்தைகளின் கையெழுத்தை அழகாக்க 7 டிப்ஸ்!!


"என் பையன் நல்லா படிக்கிறான்; படித்ததைக் கேட்டால் தவறில்லாமல் ஒப்பிக்கிறான், ஆனால் எக்ஸாமில் எழுதும்போது கையெழுத்து சரியில்லாததால் அதிக மதிப்பெண் எடுக்க முடியலை"னு புலம்பும் பெற்றோரா நீங்கள்?

.உங்கள் பிள்ளையின் கையெழுத்தை சிறுசிறு பயிற்சிகள் மூலம் நீங்களே மாற்றியமைக்க எளிமையான டிப்ஸ் இதோ.


குழந்தை எழுதுவது அழகாக இல்லை என்றவுடன் இரட்டைக் கோடு, நாலு கோடுகள் உள்ள நோட்டுகளை வாங்கி தந்து, அதிக நேரம் எழுத சொல்லி வற்புறுத்தாதீர்கள், இதனால் அவர்களுக்கு எழுதுவதன் மீது வெறுப்புதான் உண்டாகும்.

குழந்தையின் கையெழுத்தை அழகாக மாற்ற வேண்டுமானால், முதலில் fine Motor skill என்ற கைகளின் தசைகளை வலுப்படுத்தும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அடிக்கடி கை விரல்களுக்கு வேலைகள் கொடுக்க வேண்டும். இதனால் நரம்புகள் உறுதி அடைந்து கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

1. உங்கள் குழந்தைகளுக்கு பல வண்ணங்களில் கிடைக்கும் சைனா களிமண்ணை வாங்கி தந்து, பிசைந்து விளையாட வைப்பதும், சின்ன சின்ன உருவங்கள் செய்ய பழக்கப்படுத்தவும் செய்யுங்கள். இதனால் குழந்தையின் கைகள், தசைகள், கண்கள் என்று ஒரே நேரத்தில் பயிற்சி கிடைப்பதுடன், குழந்தையின் மனமும் ஒருங்கிணைந்து செயல்பட முடியும்.



2. உங்கள் வீட்டில் இருக்கும் மைதா, சோளமாவு, கோதுமை மாவு இப்படி ஏதேனும் ஒரு மாவினை ஒரு பெரிய அகலமான தட்டில் வைத்து உங்கள் பிள்ளையை ஏதேனும் எழுதியோ, வரைந்தோ பழகச் சொல்லலாம். இதனால் குழந்தையின் கைகளுக்கு நெகிழ்வுத்தன்மை கிடைக்கும்.



3. சில்லறை காசுகளை எண்ணி, அவற்றை சிறுதுளையுள்ள உண்டியலில் போடச்சொல்லலாம். மேலும், பல்லாங்குழி போன்ற நம் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாட செய்யலாம். இதனால் குழந்தைகளின் நரம்புகள் வலுப்படும். இதனால் பென்சிலை வழுக்காமல் அவர்களால் பிடித்து எழுத விரல்கள் பழக்கப்படும்.



4. குழந்தைகள் விளையாட வைத்து இருக்கும் இடுக்கியால் பொருட்களை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நகர்த்தச் சொல்லுங்கள். இதனால் கைகளுக்கு பிடிப்புத்தன்மை அதிகரிக்கும்.



5. பேப்பர்களைக் கிழித்து பந்துகள் போல் உருட்டி விளையாடினால் தடைபோடாமல் அனுமதியுங்கள். இதனால் மொத்த கை நரம்புகளும் வலுப்படும்..



6. உல்லன் நூலைக் கொடுத்து அதில் மணிகள் சிறு பாசிகள் போன்றவற்றை கோர்க்கச் சொல்லலாம். கெட்டியான அட்டையில் சிறுதுளைகள் போட்டு அதில்நூலை கோர்க்கச் சொல்லி பழக்கப்படுத்தலாம்.



7. உங்கள் குழந்தைக்கு பிடித்த நிறத்தில் க்ரேயான்ஸ் அல்லது கலர் பென்சில்களைக் கொடுத்து முட்டைக்கூடு, காகிதக் கோப்பைகள் போன்றவற்றில் படம் வரைந்து வண்ணம் தீட்டச் சொல்லுங்கள்.



இப்படிச் செய்வதன்மூலம் அவர்களால் எழுத்துக்களை சீராக எழுத முடியும்.இதுபோன்ற பயிற்சிகளைத் தொடர்ந்து செய்துவந்தால் குழந்தையின் கையெழுத்து சரியில்லை என்று மதிப்பெண்கள் குறையாது!!

SC/ST - அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு வருமானச் சான்று தொகை கணக்கிடும் போது DA மற்றும் HRA கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது என்பதற்கான செயல்முறை கடிதம்




13 Aug 2016

Tamil medicine

https://drive.google.com/file/d/0B_YeNwgt8TH5VWxqWjFaZkQwWkE/view?usp=docslist_api

12 Aug 2016

English for childrens

https://drive.google.com/file/d/0B_YeNwgt8TH5U0JIaG5rQ1RkVGM/view?usp=docslist_api

5 Aug 2016

மழலைகள் கதை நேரம் – 064 ரகசியம். உஷ்ஷ்…! -

மழலைகள் கதை நேரம் – 064
ரகசியம். உஷ்ஷ்…! - விழியன்
காட்டின் மன்னர் வருகின்றார் பராக் பராக் பராக் என அறிவிப்பு வந்தது. அரண்மனை மாடிப்படியில் இருந்து அந்த காட்டின் மன்னர் நடந்து வந்தார். அவர் தனக்குத்தானே சிரித்தபடி இறங்கினார். அரசவையில் முதல் வரிசையில் இருந்த சிங்கம் “என்ன மன்னா, அப்படி என்ன நடந்தது. எங்களுக்கு சொல்லுங்களேன்” என்றது. சிங்கத்தை மட்டும் தனியே அழைத்து “நான் ஒரு ரகசியம் சொல்வேன். ஆனால் அதனை நீ ஒருவரிடம் மட்டுமே சொல்லலாம். அப்படி மீறி சொன்னால் உனக்கு ஆபத்து நிகழலாம்.” என்றது மன்னர். ஓ மன்னர் யார் என்று தெரியும் இல்லையா? ஒரு எறும்பு. கடந்த தேர்தலில் வெற்றி பெற்று மன்னராக தேர்ந்தேடுக்கப்பட்ட எறும்பு.

“மன்னா, முதலில் ரகசியத்தை சொல்லுங்க” என்றது சிங்கம். காதை காட்டுங்க என ஒரு மேஜை மீது ஏறி காதில் ரகசியத்தை சொன்னது. குலுங்கி குலுங்கி சிரித்தது சிங்கம். அதனால் சிரிப்பினை அடக்கவே முடியவில்லை. “நிஜமாகவா? நிஜமாகவா?” என்று விழுந்து விழுந்து சிரித்தது. அரண்மனையில் உள்ள தனி அறையில் சிரித்த சிரிப்பு அரண்மனை முழுக்க கேட்டது. யார் கேட்டாலும் அது ரகசியத்தை சொல்லவில்லை. அந்த ரகசியத்தை ஒரே ஒருவருக்கு தான் சொல்ல முடியும் என்பது கூட யாருக்கும் தெரியாது.

மறுநாள் காலை தன் காரில் நாட்டு வழியாக வேறு காட்டிற்கு சென்று கொண்டிருந்தது. திடீரென கார் நின்றுவிட்டது. திக்கு தெரியாத நாட்டில் என்ன செய்வது. மெக்கானிக்கடை எங்கு இருக்கின்றதோ தெரியவில்லையே என்று கவலைப்பட்டது சிங்கம். சர்ர்ர்ர் என்று ஒரு புல்லட்டில் மான் அங்கே கடந்தது. சோகமாக நிற்கும் சிங்கத்தை பார்த்து வண்டியை நிறுத்தியது.   என்ன பிரச்சனை என்று கேட்டதும் விஷயத்தை சொன்னது சிங்கம். “தெரியல”. மான், காரின் முன்பகுதியை திறந்து சில நிமிடங்களில் சரி செய்தது. நல்லவேளை அதுவரையில் மனிதர்கள் யாரும் அந்தப்பக்கம் வரவில்லை. தன் நன்றியின் வெளிப்பாடாக மானிடம் “உனக்கு ஒரு ரகசியம் சொல்லப்போகின்றேன், அதனை நீ ஒருவரிடம் மட்டுமே சொல்லலாம்” என்று சொல்லி ரகசியத்தை சொன்னது. மான் ரகசியத்தை கேட்டதும் தத்தக்கா புத்தக்கா என சிரித்தது. ஊஊ என சத்தமிட்டது. மான் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

தடுமாறி தடுமாறி புல்லட்டை ஒருமாதிரி ஓட்டிக்கொண்டு ஊர் சேர்ந்தது. அதனை நினைத்து நினைத்து இரவு உறங்காமல் சிரித்துக்கொண்டே இருந்தது. பக்கத்து அப்பார்ட்மெண்டில் வசித்த ஒட்டகச்சிவிங்கி மறுநாள் காலையிலேயே மானின் வீட்டிற்கு வந்தது. வெளியே இருக்கும் பூங்காவில் அமர்ந்து கொண்டது. ஒட்டகச்சிவிங்கி உள்ளே நுழையும் அளவிற்கு மானுடைய வீட்டு நுழைவாயில் இல்லை.

“என்ன மான் நண்பரே, இரவெல்லாம் சிரிப்பு சத்தம் கேட்டது. என்ன விசேஷம். எனக்கும் சொல்லக்கூடாதா?” என்றது ஒட்டகச்சிவிங்கி.

மானுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஒரே ஒருத்தரிடம் மட்டும் தான் ரகசியம் சொல்லலாம் என்றது சிங்கம். சொல்லிடலாமா? சரி சொல்லிடலாம் என்ற முடிவிற்கு வந்தது. மன்னர் எறும்பு சிங்கத்திடம் சொன்னதையும் சிங்கம் மானிடம் சொன்ன கதையையும் சொல்லிவிட்டு ரகசியத்தை முதல் மாடிக்கு ஏறி ஒட்டகச்சிவிங்கியின் காதில் சொன்னது. “ஒருத்தர் கிட்ட மட்டும் சொல்லனும்” என்று முடிப்பதற்குள் ஒட்டகச்சிவிங்கி சிரிக்க ஆரம்பித்தது.

தலையை ஆட்டி ஆட்டி சிரித்ததில் சுளுக்கு பிடித்துக்கொண்டது. அன்றைய தினம் ஞாயிற்றுகிழமை. எந்த மருத்துவரும் இருக்க மாட்டார்கள்.  எல்லா நாளும் மருத்துவம் பார்க்கும் ஒரே மருத்துவர் ஆலமரக்குருவி மட்டுமே. நல்லவேளையாக குருவி நல்ல உயரத்தில் மருத்துவமனையை வைத்து இருந்தது. சுளுக்கினை காட்டியது. பறந்து பறந்து ஒட்டகச்சிவிங்கியின் கழுத்திற்கு கட்டு போட்டது. “ஏன் நண்பரே அப்படி என்ன செய்தீர்கள் கழுத்து சுளுக்கும் அளவிற்கு?” என்று கேட்டது குருவி.
வலி சரியானது. உதவிய குருவியிடம் “யாரிடமும் சொல்லாதீங்க” என்று ரகசியத்தை சொன்னது ஒட்டகச்சிவிங்கி. குருவி வேறு மாதிரி சிரித்தது. மற்றவர்களைப்போல விழுந்து விழுந்து சிரிக்கவில்லை “ஆமாம். உங்களுக்கு யார் இந்த ரகசியத்தை சொன்னது?”
“புல்லட் மான்”
“அவருக்கு?”
“காரில் வந்த சிங்கம்”
“அவருக்கு?”
“நம்ம நாட்டு மன்னன் எறும்பு”
“அவருக்கு.?”
“தெரியலையே..”
“முந்தாநாள் ஒரு காலில் அடிபட்டுவிட்டது என்ற மன்னன் எறும்புக்கு நான் தான் இந்த ரகசியத்தையே சொன்னேன்” என்றது குருவி.
“அட” என்று சொல்லிவிட்டு நன்றியையும் தெரிவித்தது ஒட்டகச்சிவிங்கி.
ஆமாம் உங்களுக்கு இப்ப யாரிடம் அந்த ரகசியத்தை கேட்டு தெரிந்துகொள்வீர்கள்? அச்சோ. குருவியும் ஏற்கனவே ஒருத்தர்கிட்ட சொல்லிடுச்சே?