THE KING MAKERS

THE KING MAKERS
THE KING MAKERS

29 Jul 2016

வெள்ளி விழா, பொன் விழா, வைர விழா என்றெல்லாம் விழாவிற்குப் பெயர் வைத்துக் கொண்டாடுகிறோம்.எந்த ஆண்டில் எந்தப் பெயரில் விழா கொண்டாடலாம் என்று உங்களுக்குத் தெரியுமா?

வெள்ளி விழா, பொன் விழா, வைர விழா என்றெல்லாம் விழாவிற்குப் பெயர் வைத்துக் கொண்டாடுகிறோம்.எந்த ஆண்டில் எந்தப் பெயரில் விழா கொண்டாடலாம் என்று உங்களுக்குத் தெரியுமா?

1 ஆண்டு - காகித விழா
2 ஆண்டு - பருத்தி விழா
3 ஆண்டு - தோல் விழா
4 ஆண்டு - மலர் மற்றும் பழ விழா
5 ஆண்டு - மர விழா
6 ஆண்டு - சர்க்கரை / கற்கண்டு / இனிப்பு விழா
7 ஆண்டு - கம்பளி / செம்பு விழா
8 ஆண்டு - வெண்கல விழா
9 ஆண்டு - மண் கலச விழா
10 ஆண்டு - தகரம் / அலுமினிய விழா
11 ஆண்டு - எஃகு விழா
12 ஆண்டு - லினன் விழா
13 ஆண்டு - பின்னல் விழா
14 ஆண்டு - தந்த விழா
15 ஆண்டு - படிக விழா
20 ஆண்டு - பீங்கான் விழா
25 ஆண்டு - வெள்ளி விழா
30 ஆண்டு - முத்து விழா
40 ஆண்டு - மாணிக்க விழா
50 ஆண்டு - பொன் விழா
60 ஆண்டு - வைர விழா
75 ஆண்டு - பவள விழா
100 ஆண்டு - நூற்றாண்டு விழா

Maths activities

Maths activities

28 Jul 2016

SCHOOL REPORT CARD

IMPORTANT DAYS

ஜனவரி
26 -
உலக சுங்க தினம்
30 -
உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
பிப்ரவரி
14 -
உலக காதலர் தினம்
மார்ச்
08 -
உலக பெண்கள் தினம்
15 -
உலக நுகர்வோர் தினம்
20 -
உலக ஊனமுற்றோர் தினம்
21 -
உலக வன தினம்
22 -
உலக நீர் தினம்
23 -
உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
24 -
உலக காசநோய் தினம்
28 -
உலக கால்நடை மருத்துவ தினம்
ஏப்ரல் 
05 -
உலக கடல் தினம்
07 -
உலக சுகாதார தினம்
12 -
உலக வான் பயண தினம்
18 -
உலக பரம்பரை தினம்
22 -
உலக பூமி தினம்
30 -
உலக குழந்தைத் தொழிலாளர் தினம்
மே
01 -
உலக தொழிலாளர் தினம்
03 -
உலக சக்தி தினம்
08 -
உலக செஞ்சிலுவை தினம்
12 -
உலக செவிலியர் தினம்
14 -
உலக அன்னையர் தினம்
15 -
உலக குடும்ப தினம்
16 -
உலக தொலைக்காட்சி தினம்
24 -
உலக காமன்வெல்த் தினம்
29 -
உலக தம்பதியர் தினம்
31 -
உலக புகையிலை மறுப்பு தினம்
ஜீன்
04 -
உலக இளம் குழந்தைகள் தினம்
05 -
உலக சுற்றுப்புற தினம்
18 -
உலக தந்தையர் தினம்
23 -
உலக இறை வணக்க தினம்
26 -
உலக போதை ஒழிப்பு தினம்
27 -
உலக நீரழிவாளர் தினம்
28 -
உலக ஏழைகள் தினம்
ஜீலை
01 -
உலக மருத்துவர்கள் தினம்
11 -
உலக மக்கள் தொகை தினம்
ஆகஸ்ட்
01 -
உலக தாய்ப்பால் தினம்
03 -
உலக நண்பர்கள் தினம்
06 -
உலக ஹிரோஷிமா தினம்
09 -
உலக நாகசாகி தினம்
18 -
உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்
செப்டம்பர்
08 -
உலக எழுத்தறிவு தினம்
16 -
உலக ஓசோன் தினம்
18 -
உலக அறிவாளர் தினம்
21 -
உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்
26 -
உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்
27 -
உலக சுற்றுலா தினம்
அக்டோபர்
01 -
உலக மூத்தோர் தினம்
02 -
உலக சைவ உணவாளர் தினம்
04 -
உலக விலங்குகள் தினம்
05 -
உலக இயற்கைச் சூழல் தினம்
08 -
உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்
09 -
உலக தபால் தினம்
16 -
உலக உணவு தினம்
17 -
உலக வறுமை ஒழிப்பு தினம்
24 -
உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்
30 -
உலக சிந்தனை தினம்
நவம்பர்
18 -
உலக மனநோயாளிகள் தினம்
19 -
உலக குடியுரிமையாளர்கள் தினம்
26 -
உலக சட்ட தினம்
டிசம்பர்
01 -
உலக எய்ட்ஸ் தினம்
02 -
உலக அடிமைத்தனம் ஒழிக்க .நா. சபையின் சர்வதேச தினம்
10 -
உலக மனித உரிமைகள் தினம்
14 -
உலக ஆற்றல் தினம

2 பேருக்கு மேல் மியூச்சல் டிரான்ஸ்பர் கிடையாது!!ஆசிரியர் கவுன்சலிங்கில் தொடரும் அதிரடி!!


26 Jul 2016

பழைய ஓய்வூதிய திட்டம் எப்போ வரும்?

பழைய ஓய்வூதிய திட்டம் எப்போ வரும்?

           'அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது அமலுக்கு வரும்' என, சட்டசபையில் தி.மு.க., எழுப்பிய கேள்விக்கு, ஆளுங்கட்சி தரப்பில் பதில் தெரிவிக்கவில்லை.

             சட்டசபையில் நடந்த விவாதம்: தி.மு.க., - வேலு: தமிழக அரசு அலுவலர் களுக்கு, புதிய ஊதிய விகிதத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து, தகுந்த பரிந்துரை அளிப்பதற்காக, உயர் அலுவலர்கள் குழு அமைக்கப்படும் என, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு, எப்போது குழு அமைக்கும்; குழு பரிந்துரைகள் எப்போது நிறைவேற்றப்படும்; இதற்கு, நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா? அமைச்சர் பன்னீர்செல்வம்: குழு அமைக்கப்படும் போது, எவ்வளவு காலம் என, நிர்ணயிக்கப்படும். அதற்குள் ஏன் அவசரப்படுகிறீர்கள்; குழு அமைப்பதற்கு முன், எவ்வாறு நிதி ஒதுக்க முடியும்? வேலு: பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்து, பரிந்துரை செய்ய குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் காலம் முடிந்து விட்டதா; பரிந்துரை செய்ததா; பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது அமலுக்கு வரும்? அமைச்சர் பன்னீர்செல்வம்: அந்த குழுவிற்கு வழங்கப்பட்ட, மூன்று மாத கால அவகாசம் முடிந்து விட்டது. மீண்டும், மூன்று மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. துரைமுருகன்: மூன்று பேர் குழு அமைத்தீர்கள். அதில், இருவர் ராஜினாமா செய்து விட்டனர். ஒருவர் மட்டும் என்ன செய்யப் போகிறார்?இதற்கு ஆளுங்கட்சி தரப்பில், பதில் எதுவும் கூறப்படவில்லை.

25 Jul 2016

கற்பூர கதை

(கற்பூர கதை)

பக்தன் ஒருவன் கோயிலுக்குச் சென்றான்.அவனது கூடையில் ஆண்டவனுக்குச் சமர்ப்பிப்பதற்காக வாழைப்பழம்.தேங்காய்.கற்பூரம் ஆகியன இருந்ததன.

தேங்காய் பேசஆரம்பித்தது.நம்மூவரில் நானே கெட்டியானவன்.பெரியவனும் கூட! என்றது.

அடுத்து வாழைப் பழம்.நமது மூவரில் நானே இளமையானவன்.இனிமையானவன்.என்று பெருமைப்பட்டுக் கொண்டது கற்பூரமோ எதுவும் பேசாமல் மௌனம் காத்தது.

பக்தன் சந்நியை அடைந்தான்.தேங்காய் உடையப்பட்டது பழம் தோல்உரிக்கப்பட்டது.கற்பூரமோ தீபம் ஏற்றியதும் கரைந்து ஓன்றும் இல்லாமல் போனது.

பக்தர்களாகிய நாம் தேங்காய் போல் கர்வத்துடன் இருந்தால்.ஒருநாள் நிச்சையம் உடைபடுவோம்.
இனிமையாக இருந்தாலும் வாழைப்பழம் போல் தற்பெருமை பேசித் திரிந்தால் ஒருநாள் கிழிபடுவோம்.ஆனால் கற்பூரம் போல் அமைதியாக இருந்து விட்டால்.இருக்கும் வரை ஔிவீசி இறுதியில் மீதமின்றி இறைவனோடு இரண்டறக் கலந்து போவோம்.

பெண்களை மதித்த வீர சிவாஜி அந்தப்புரத்தில் செய்த செயல்...

பெண்களை மதித்த வீர சிவாஜி அந்தப்புரத்தில் செய்த செயல்...

சிவாஜியின் படைகள் ஒரு முறை ஒரு பிராந்தியத்தை கைப்பற்ற நடைபெற்ற போரில் அதை ஆண்டு வந்து சுல்தான் ஒருவனை தோற்கடித்தன.

சிவாஜியின் படை வெற்றி கொண்ட சுல்தானின் மனைவி பேரழகி. அவளது அழகு அந்த பிராந்தியத்திலேயே மிகவும் பிரசித்தம். எனவே சிவாஜியின் படைத் தளபதி மற்றும் வீரர்கள் தம் மன்னனின் மனமும் உடலும் குளிரட்டும் என்று எண்ணினார்.

அன்றிரவு தூங்கச் செல்லும் சத்ரபதி சிவாஜி, தனது அறைக்கு வெளியே பல்லக்கு இருப்பதை பார்த்து, “பல்லக்கில் இருப்பது யார்?” என்று தனது தளபதியிடம் கேட்க, “மன்னா இவள் சுல்தானின் மனைவி. பார் போற்றும் பேரழகி. இவள் அழைகை கண்டு மயங்காதவர்களே இந்த பிரதேசத்தல் இருக்க முடியாது. எனவே இன்றிரவு இவளை உங்களுக்கு விருந்தாக்கலாம் என்று எண்ணியே இங்கே கொண்டு வந்தோம்” என்று கூறுகிறான்.

சிவாஜி நேரே பல்லக்கு அருகே செல்கிறார். பல்லக்கின் திரைச் சீலையை விலக்கி பார்க்கிறார்… ஏற்கனவே அச்சத்தில் இருந்த சுல்தானின் மனைவி மருண்ட விழிகளோடு சிவாஜியை பார்க்கிறாள்.

சிவாஜியோ, “அம்மா…. நீங்கள் உண்மையில் மிகவும் அழகு தான். உங்கள் வயிற்றில் ஒருவேளை நான் பிறந்திருந்தால் நானும் அழகாக பிறந்திருப்பேன்….!” என்று கூறுகிறார்.

சிவாஜியின் தளபதி முதல் படைவீரர்கள் வரை அனைவரும் வெட்கித் தலைகுனிகின்றனர். சுல்தானின் மனைவி அந்த வீரமகனை. கையெடுத்து கும்பிடுகிறாள்.

தனது தளபதியை சினந்துகொண்ட சிவாஜி, “பெண்கள் நம் நாட்டில் தெய்வமல்லவா? இப்படி ஒரு காரியத்திற்கு எப்படி துணிந்தீர்கள்?

பொன்னாசை, மன்னாசையைவிட கொடியது பெண்ணாசை. மாபெரும் சாமாராஜ்ஜியங்களையே இது தரை மட்டமாக்கியிருக்கிறது.

இனி இப்படி ஒரு இழி செயலை கனவிலும் செய்யத் துணியாதீர்கள். முதல் வேலையாக இவர்களை கொண்டு போய் இவர் விரும்பும் இடத்தில் விட்டுவிட்டு வாருங்கள்” என்று கட்டளையிடுகிறார்.

இந்த உலகில் உள்ள மக்கள் பெரும்பாலானோர் இரண்டே வகைகளில் அடங்கிவிடுவர்.
1) கெட்டவர்கள் மற்றும்
2) சந்தர்ப்பம் கிடைக்காத நல்லவர்கள்.

எந்த சூழ்நிலையிலும் குணம் மாறாது நல்லவர்களாக இருப்பவர்கள் மிக மிக அரிது.

தத்துவ நிபுணரின் தவிப்பு

தத்துவ நிபுணரின் தவிப்பு
அரச சபைக்கு தத்துவ ஞானி ஒருவர் வந்தார். தத்துவம் என்பதைப் பற்றி ஒரு சொற்பொழிவு நிகழ்த்திவிட்டு இறுதியில்,"" நாம் கண்ணால் காண்பது, நாவினால் சுவைப்பது, மூக்கினால் நுகர்வது எல்லாமே நாம் அனுபவிப்பதாகத் தோன்றுமே தவிர, செய்யும் ஒவ்வொரு செயலும் பிரம்மையே தவிர உண்மையில் நாம் அப்படிச் செய்வதில்லை'' என்று கூறி தத்துவ ஞானி என்பதற்கு ஏற்ப குழப்பமாகக் கூறி முடித்தார். அதனை சபையோர் ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பொறுமையோடு இதைக் கவனித்துக் கொண்டிருந்த தெனாலி ராமன் எழுந்து, ""ஐயா, தத்துவ ஞானியே நாம் சாப்பிடுவதும் கூட வெறும் பிரம்மைதானா? நாம் சாப்பிடுவதற்கும், சாப்பிடுவதாக நினைப்பதற்கும் வேறுபாடு இல்லையா?'' என்று கேட்டார். இல்லை என்று ஆணித்தரமாகக் கூறினார்
தத்துவ ஞானி.
""இன்று மன்னர்பிரான் வழங்கும் அறுசுவை விருந்தில் நாம் அனைவரும் கலந்து மகிழ்ச்சியோடு சாப்பிடலாம். அப்பொழுது இந்த தத்துவ நிபுணர் மட்டும் சாப்பிடாமல், சாப்பிடுவதாக நினைத்துக் கொண்டு வயிற்றை நிரப்பிக் கொள்ளட்டும்'' என்று கூறினார் தெனாலி ராமன்.
தத்துவ ஞானி தலை குனிந்தார்.

23 Jul 2016

மழலைக் கதை – 62 டம்ராவின் இசைக்கச்சேரி – விழியன்

மழலைக் கதை – 62
டம்ராவின் இசைக்கச்சேரி  – விழியன்

அது எறும்புகளின் இசை வகுப்பு. அன்றைய இசை வகுப்பு முடிந்தது . இசை ஆசிரியர் எல்லோரையும் பத்திரமாக வீட்டிற்கு கிளம்பச்சொன்னார். ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு தலைவன் எறும்பு இருந்தது. அது அந்த பகுதி எறும்புகளை பாதுகாப்பாக வழி நடத்திச் செல்லும். மரத்தின் கீழே இருக்கும் எறும்புக் கூட்டம், பழைய கார் டயருக்கு கீழே இருக்கும் கூட்டம், செம்பருத்தி செடிக்கு கீழே இருக்கும் எறும்புக் கூட்டம், வீட்டு சமையலறைக்கு கீழே இருக்கும் கூட்டம் என ஆங்காங்கே நிறைய கூட்டம் இருக்கும். எல்லா கூட்டத்தில் இருந்தும் எறும்புகள் இசை வகுப்பிற்கு வந்து செல்லும். தினமும் மாலை 6 மணி முதல் 7 மணி வரை வகுப்பு நடைபெறும்.

வகுப்பு நடைபெற்ற இடம் மோர்ட்டர் அறை. அங்கே தான் மனித நடமாட்டமோ மற்ற பூச்சிகளின் நடமாட்டமோ இருக்காது. இசைப் பயிற்சிக்கு அமைதியான இடம் தேவை என்று அதன் ஆசிரியர் முடிவு செய்திருந்தார். மேலும் இசைக்கருவிகளை அடுக்கி வைக்க அங்கே தான் போதுமான இடம் கிடைத்தது.

டம்ரா அன்றைய வகுப்பு முடிந்தும் அங்கிருந்து வர மறுத்தது. அதற்கு இசைக்கருவியை தன் இருப்பிடத்திற்கு எடுத்துச் செல்ல அனுமதி கேட்டது. பகல் முழுவதும் இசை பயிற்சி செய்ய போவதாக இசை ஆசிரியரிடம் கேட்டது. டம்ரா வராததால் அந்த கூட்டத்தை சேர்ந்த எல்லா எறும்புகளும் அதன் தலைவனும் அங்கேயே நின்றிருந்தார்கள்.

“எடுத்துச் செல்லும் போது வழியில் ஆபத்து வரலாம். வேண்டாம்” என எச்சரித்தது ஆசிரியர் எறும்பு. டம்ரா விடாப்பிடியாக எடுத்தே செல்வேன் என ஒற்றைக்காலில் நின்றது. சரி என கடைசியாக ஒப்புக்கொண்டது ஆசிரியர் எறும்பு. தன் நண்பர்களின் துணையோடு அந்த இசைக்கருவியை எடுத்து சென்றனர்.

ஆசிரியர் எச்சரித்தது போலவே வழியில் ஆபத்து வந்தது. ஒரு கரப்பான்பூச்சி வடிவில். “ஏ எறும்புகளே இதென்ன புதுசா இருக்கு. நான் பார்த்ததே இல்லையே” என்றது. கரப்பான்பூச்சிகள் எப்போது எறும்புகளுக்கு ஆபத்தானது. உருவத்தில் மிகப்பெரியது எளிதில் தாக்கிவிடலாம். டம்ரா அது ஒரு இசைக்கருவி என்றது.
“அப்படி என்றால்?”

“இதில் இசை கேட்கலாம். உடன் பாடினால் இன்னும் மகிழ்வாக இருக்கும்” என்றது. அந்த பெரிய கரப்பானுக்கு புரியவில்லை. “நீங்கள் இசைத்து காட்டுங்கள்” என்றது.

கருவியை தோளில் இருந்து இறக்கினார்கள். அதன் தலைவன் மெல்ல கிசுகிசுத்தான் “அப்படியே போட்டுவிட்டு வேகமாக ஓடிவிடலாம். கரப்பானால் நம்மை பிடிக்க முடியாது. இசைக்கருவியோடு போய்விடட்டும் ஆபத்து” என்றது. “இல்லை. நான் இந்த கருவியை விட்டுவிட்டு வரமாட்டேன். ஆசிரியரிடம் நான் ஒழுங்காக ஒப்படைக்க வாக்கு கொடுத்துள்ளேன். நீங்கள் போங்கள். நான் இசைத்துவிட்டு தனியாக எடுத்து வருகின்றேன்” என்றது டம்ரா. மற்றவர்களுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.

டம்ரா கரப்பானின் விண்ணப்பத்தின்படி இசைக்க ஆரம்பித்தது. டம்ராவின் ஆர்வத்தால் அது இசைத்த இசை மென்மையாக இருந்தது. இசையுடன் டம்ராவும் பாட ஆரம்பித்தது. கரப்பான் அந்த இசையால் தன்னை இழந்தது. உடன் வந்திருந்த நண்பர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினார்கள். மெல்ல மெல்ல அந்த வீட்டின் பின்புறம் இருந்த ஒவ்வொரு பூச்சிகளாக வெளியே வரத்துவங்கின. டம்ராவின் இசை அனைவரையும் ஈர்த்தது. அந்த எறும்புக்கூட்ட தலைவன் மோட்டர் பொந்திற்கு சென்று இசை ஆசிரியரிடம் விஷயத்தை கூறியது. ஆசிரியரும் வந்து கூடி இருந்த பூச்சிகளின் எண்ணிக்கையையும் அவர்கள் இசையை ரசிப்பதையும் பார்த்தது. உடனே மற்ற எறும்புகளுடன் சென்று மீதம் இருந்த எல்லா இசைக்கருவிகளையும் எடுத்து வந்தன. எல்லா எறும்புகளும் இசைக்க துவங்கின. மற்ற பகுதிகளில் இருந்தும் எறும்புகள் வந்துவிட்டன.

டம்ரா ஆரம்பித்து வைத்தது கச்சேரியாக  மாறியது. பூச்சிகள் இசையை ரசிக்கும் என எறும்புகளுக்கு இதுவரை தெரியவே இல்லை. பாடல்களுக்கு நடுவே கைத்தட்டல்கள் நிகழ்ந்தன. மகிழ்ச்சி ஆரவாரம். “நாமும் இசை வகுப்பில் சேர்ந்து கொள்ளலாமா” என்று நிறைய பூச்சிகள் பேசத்துவங்கின.

“பாஆஆஆம்” என்ற ஹாரன் சத்தம் கேட்டது. வழக்கமாக இரவு ஒன்பது மணிக்கு வரும் காரின் ஹாரன் சத்தம். இதோ கச்சேரி நடக்கும் இடத்தில் தான் கார் வந்து நிற்கும். உடு ஜூட் என அடுந்த சில நொடிகளில் அந்த இடம் காலியானது.

எங்கேனும் எறும்பினைப் பார்த்தால் அதன் கையில் இசைக்கருவி இருக்கின்றதா என பாருங்கள். அது டம்ராவாக கூட இருக்கலாம்.

- விழியன்⁠⁠⁠⁠

9 Jul 2016

MRI SCAN என்றால் என்ன

✍தெரிந்து கொள்வதற்காக எழுதுகிறேன் சிவசித்தன் அருண்:9094830243.

MRI SCAN என்றால் என்ன
                                                            எம்ஆர்ஐ ஸ்கேன் எதற்காக பயன்படுகிறது👇🏿👇🏿

மருத்துவர்களுக்கு நோயைக் கணிக்க எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேனுக்கு அடுத்தபடியாக, எம்.ஆர்.ஐ. ஸ்கேன்தான் (MRI Scan) பெரிதும் உதவுகிறது.

தற்போதுள்ள ஸ்கேன் பரிசோதனைகளில் மிகச் சிறந்ததும் இதுதான். பல நோய்களை மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் கணிப்பதில் இது முதலிடம் பெற்றுள்ளது.

Magnetic Resonance Imaging என்னும் ஆங்கில வார்த்தைகளின் முதல் எழுத்துச் சுருக்கம்தான் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் (‘மேக்னடிக் ரெசொனென்ஸ் இமேஜிங்’)

எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன் கருவிகள்போல் இது எக்ஸ் கதிர்களைப் பயன்படுத்தி உடல் உறுப்புகளைப் படம் பிடிப்பதில்லை. மாறாக, உடலில் ஒரு காந்தப் புலத்தை உருவாக்கி, ரேடியோ அதிர்வலைகளைப் பயன்படுத்தி, ஒரு கணினியின் உதவியுடன் உறுப்புகளைப் படம்பிடித்துக் காண்பிக்கும் பரிசோதனை இது.

உடலில் இருக்கிறது காந்தம்!
****************************
உடல் செல்கள் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் மூலக்கூறுகளால் ஆனவை. ஹைட்ரஜன் அணுக்களின் மத்தியப் பகுதியில் புரோட்டான் அணுக்கள் உள்ளன. இவற்றின் அருகே ஒரு காந்தப் பொருளைக் கொண்டுவந்தால், இவையும் காந்தத் தன்மையைப் பெற்று, காந்தத்தை நோக்கி நகரும் தன்மையைப் பெறுகின்றன. அந்தக் காந்தத்தை அகற்றினால், மீண்டும் தம் நிலைக்குத் திரும்புகின்றன. இந்த அறிவியலை அடிப்படையாக வைத்து எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செயல்படுகிறது. இதைக் கொஞ்சம் விளக்கமாகவே பார்க்கலாம்.

        செயல்படும் விதம்
****************************
பயனாளியை நகரும் டேபிளில் படுக்கவைத்து, முகத்தை மறைத்து, சிறிய குகை போலிருக்கும் கருவிக்குள் அனுப்புவார்கள். அவரைச் சுற்றி வட்ட வடிவில், காந்தக் கதிர்களை வெளிவிடுகிற குழாய் இருக்கும். இது அறையின் வெளிப்பக்கத்தில் இருக்கிற கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும் முதலில், எந்த உறுப்புக்கு ஸ்கேன் செய்ய வேண்டும் எனத் தீர்மானித்து, அப்பகுதிக்கு எவ்வளவு காந்தக் கதிர்கள் தேவை எனக் கணக்கிட்டு, காந்தக் குழாயிலிருந்து கதிரை அனுப்புவார்கள்.

ஸ்கேன் செய்யப்படும் உறுப்பிலுள்ள கோடிக்கணக்கான புரோட்டான்கள் காந்தத் தன்மையைப் பெற்று, குழாயிலிருக்கும் காந்தப்புலத்துக்கு இணைகோட்டில் வரிசைகட்டி நிற்கும். இந்த நேரத்தில் ஸ்கேனரிலிருந்து ரேடியோ அதிர்வலைகளை, அந்த உறுப்புக்குள் அனுப்புவார்கள். இதன் விளைவால், புரோட்டான்கள் தகர்க்கப்பட்டு, தங்கள் வரிசையிலிருந்து சிதறிவிடும். இப்போது காந்தக் கதிர்களையும் ரேடியோ அலைகளையும் நிறுத்திவிடுவார்கள். இதனால் புரோட்டான்கள் காந்தத் தன்மையை இழந்து, உறுப்பில் அவை இருந்த பழைய நிலைக்குத் திரும்பிச் செல்லும். இப்படித் திரும்பிச் செல்லும்போது, புரோட்டான்கள் தங்களைத் தகர்த்த ரேடியோ அலைகளை வெளியில் அனுப்பும். இவற்றை ஸ்கேனரில் காந்தக் குழாய்க்கு எதிர்ப்புறத்தில் பொருத்தப்பட்டிருக்கும் உணர்கருவி சேகரித்துக் கணினிக்கு அனுப்பும்.

இப்போது கணினியில் உள்ள மென்பொருள் ஒரு விசேஷ வேலையைச் செய்யும். அதாவது, உணர்கருவி அனுப்பிய ரேடியோ அலைகளை ஒருங்கிணைத்து, முப்பரிமாணப் படங்களாகத் தயாரித்துத் திரையில் காண்பிக்கும். இந்த அலைகள் உறுப்பின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் வருகிற காரணத்தால், அந்த உறுப்பின் உள்பகுதி, வெளிப்பகுதி, குறுக்குப்பகுதி, நெட்டுப்பகுதி என எல்லாப் பகுதிகளையும் தெளிவாகக் காணமுடியும். மேலும், திரும்பிச்செல்லும் புரோட்டான்கள் ஒரே வேகத்தில் திரும்புவதில்லை. அந்தத் திசுவின் தன்மையைப் பொறுத்து வேகம் அமையும். இதனால் அந்த வேகத்தைப் பொருத்துத் திசுவின் படங்கள் வேறுபடும். அப்போது உறுப்பில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், பாதிப்புகள், குறைபாடுகள் எனப் பல செய்திகளை நுணுக்கமாகத் தெரிந்துகொள்ள முடியும்.

ஒரு திரைப்படத்தில் அடுத்தடுத்த ஃபிரேம்களின் தொடர்ச்சியே திரைப்படமாகத் திரையில் தெரியும். அதுபோலவே கணினி தயாரித்த படங்கள் அடுத்தடுத்துத் தெரியும். இந்தப் படங்களை ஃபிலிமில் பிரிண்ட் செய்துகொள்ளவும், சி.டி. அல்லது டி.வி.டி.களில் பதிவு செய்து பாதுகாத்துக் கொள்ளவும் வசதி இருக்கிறது. பின்னாளில் தேவைப்படும்போது இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எம்.ஆர்.ஐ. ஸ்கேன் படத்திலும் சில உறுப்புகளின் உட்பகுதிகளைக் காணமுடியாது. அப்படிப்பட்ட நேரத்தில் பயனாளிக்கு ஒரு சாயத்தைச் சிரைக்குழாய் வழியாகச் செலுத்திப் படம் எடுத்தால், அந்த உறுப்புகளும் தெரியும்.

      தயாராவது எப்படி?
****************************
எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனையை எப்போது வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம்.

முடிந்தவரை ஸ்கேன் எடுக்கப்படும் மருத்துவமனை அல்லது ஸ்கேன் சென்டரில் கொடுக்கப்படும் ஆடை களையே அணிந்துகொள்ள வேண்டும்.

மோதிரம், வளையல், கழுத்து நகைகள், கைக்கடிகாரம், ஊக்கு, பொத்தான், கண்ணாடி, பல்செட், இடுப்பு பெல்ட் போன்ற உலோகப் பொருட்களைக் கழற்றிவிட வேண்டும்.

காசு, சாவி, ஏ.டி.எம். கார்டு போன்றவற்றை வெளியில் எடுத்துவிட வேண்டும்.

பயனாளிக்கு ஏதேனும் மருந்து ஒவ்வாமை இருந்தால், ஸ்கேன் எடுப்ப தற்கு முன்பே சொல்லிவிட வேண்டும்.

      யாருக்கு விலக்கு?
***************************
பொதுவாக இந்தப் பரிசோதனையைக் கீழ்க்கண்டோருக்கு மேற்கொள்ள முடியாது:

பேஸ்மேக்கர், ஐ.சி.டி. எனும் டிஃபிபிரிலேட்டர், காக்ளியர் இம்பிளான்ட், நரம்புத் தூண்டல் கருவி போன்றவற்றை உடலில் பதிக்கப்பெற்றவர்கள்.

பலத்த எலும்பு முறிவு மற்றும் முதுகுத் தண்டுவடப் பிரச்சினைக்கான சிகிச்சையின்போது பிளேட், ஸ்குரூ, வயர் போன்ற உலோகப் பொருள்கள் பொருத்தப்பட்டவர்கள்.

உலோகத்தாலான செயற்கை இதய வால்வைப் பொருத்திக்கொண்டவர்கள்.

பெருந்தமனி வீக்கத்துக்கு (Aneurism of Aorta) ‘கிளிப்’ பொருத்திக் கொண்டவர்கள்.

தங்கப்பல் பதிக்கப் பெற்றவர்கள்.

முழங்காலில் செயற்கை மூட்டு மாற்று சிகிச்சை மற்றும் இடுப்பு மாற்று சிகிச்சையை மேற்கொண்டவர்கள்.

காப்பர்-டி’ எனும் கர்ப்பத் தடை கருவி பொருத்திக்கொண்டவர்கள்.

இவை தவிர, வேறு ஏதேனும் சிகிச்சைக்காக உலோகத்தாலான பொருள்களை உடலில் பதிக்கப்பெற்றவர்கள். என்ன காரணம்?

உடலில் காந்தப்புலத்தை ஏற்படுத்தி இந்தப் பரிசோதனையை மேற்கொள்வதால், இரும்பு கலந்த உலோகங்கள் காந்தப்புலத்தை நோக்கி இழுக்கப்படும். இது அவர்களுக்கு ஆபத்தாக அமையும். இதைத் தவிர்க்கவே மேற்சொன்னவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

ஓர் ஆறுதல், இவர்கள் அனைவரும் எம்.ஆர்.ஐ. ஸ்கேனுக்குப் பதிலாக எக்ஸ்ரே அல்லது சி.டி. ஸ்கேன் பரிசோதனையை மேற்கொள்ளலாம் என்பதுதான்.

       முக்கியக் குறிப்பு
***************************
கர்ப்பிணிகள், கர்ப்பமடைய வாய்ப்புள்ளவர்கள், தாய்ப்பால் தரும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு இந்தப் பரிசோதனையை அவசியப்பட் டால் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

முக்கியமாக, கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதங்களுக்கு இதை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது.

தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்குச் சிரைக்குழாய் வழியாகச் சாயத்தைக் கொடுத்து எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்பட்டிருந்தால், அடுத்து எத்தனை மணி நேரம் கழித்துக் குழந்தைக்குத் தாய்ப்பால் தருவது என்பதை மருத்துவரிடம் கேட்டுக்கொள்ள வேண்டும்.

கூடுதல் நன்மை என்ன?

இதில் எக்ஸ் கதிர்களைப் பயன்படுத்துவதில்லை. ஆகவே, கதிர்வீச்சு ஆபத்து துளியும் இல்லை.

எக்ஸ்ரே மற்றும் சி.டி. ஸ்கேன் படங்களைவிட மிகத் தெளிவாக எலும்பு, மூட்டு, தசை, தசைநாண்கள், மூளை, நரம்பு மண்டலம், முதுகுத் தண்டுவடம் போன்றவற்றைப் படம்பிடித்துக் காட்டும்.

எந்தெந்த நோய்களைக் கண்டுபிடிக்கலாம்?

மூளை தொடர்பான எல்லா நோய்களுக்கும் காரணம் தெரிந்துகொள்வதற்கு, மூளையை எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுப்பது வழக்கம்.

மூளையில் ஏற்படும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு கட்டிகளை ஆரம்பத்திலேயே அறிய, இது உதவுகிறது.

மூளையில் அடிபடுவதால் ஏற்படும் ரத்தக்கசிவு, ரத்த ஓட்டத் தடை போன்றவற்றையும் இதில் காண முடியும்.

வலிப்பு நோய், நாட்பட்ட தலைவலி, தலைச்சுற்றல், மயக்கம் போன்றவற்றுக்குக் காரணத்தை அறிய இது உதவும்.

கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகங்கள், கணையம் ஆகியவை பாதிக்கப்பட்டிருந்தால், இதில் தெரிந்துவிடும்.

எலும்பு மற்றும் எலும்பு மூட்டுகள் தொடர்பான எல்லா நோய்களுக்கும் காரணம் கண்டுபிடிக்க, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுப்பது நல்லது.

முதுகெலும்பின் நிலைமை மற்றும் தண்டுவடத்தின் தன்மை அறிந்து, கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலி போன்றவற்றுக்குக் காரணம் தெரிந்து சிகிச்சை பெற முடியும்.

எலும்புகளை இணைக்கிற தசைநாண்கள் (Ligament) எம்.ஆர்.ஐ. ஸ்கேனில்தான் தெரியும். எனவே, விபத்துகளில் ஏற்படும் எலும்புத் தசை நோய்களைக் கண்டறிய இதுதான் சிறந்த பரிசோதனை.

குறிப்பிட்ட சில இதயநோய்களைக் கணிக்கவும் இது உதவும்.

காது, மூக்கு, தொண்டை தொடர்பான எல்லா நோய்களையும் இதில் தெரிந்துகொள்ளலாம்.

உடலில் உள்ள மென்திசுக்களை ஆராய இதுவே பெரிதும் உதவுகிறது.

ரத்தக் குழாய்களில் உண்டாகிற வீக்கம், பிறவி அமைப்புக் கோளாறுகள் போன்ற பல நோய்களைத் தெளிவாகக் கணிக்கலாம்.

பெண்களுக்கு ஏற்படுகிற கருப்பைக் கோளாறுகளைத் தெளிவாக அறியலாம்.

மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே அறிய இது உதவும்.

ஆண்களுக்குப் புராஸ்டேட் வீக்கம் / புற்றுநோய் போன்றவற்றைக் கணிக்க இது உதவுகிறது.

பொதுவாக ஒரு நோயைக் கணிப்பதற்கும், அதற்கான சிகிச்சையை முடிவு செய்வதற்கும், சிகிச்சைக்குப் பிறகு நோய் குணமாகிறதா என்ற விவரத்தைத் தெரிந்துகொள்வதற்கும் இது பெரிதும் பயன்படுகிறது. Read this whenever u want and share this mgs via www.testftirupurnorth.blogspot.com

7 Jul 2016

குறை - சிறுவர் கதை


குறை - சிறுவர் கதை தெத்துப்பட்டி என்ற ஊரில் சாந்தனு என்ற இளைஞன் இருந்தான். அவனுக்கு நகரத்தில் வேலை கிடைத்தது. அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்தான். அவனுக்குத் திருமணம் நடந்தது. தன் மனைவியை நகரத்திற்கு அழைத்து வந்து அவளுடன் குடும்பம் நடத்தினான். முதல்நாள் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பினான். ""இங்கே யாருமே சரி இல்லை. எல்லாரும் நம்மைப் பார்த்து பொறாமைப்படுகின்றனர். என்னைப் பார்த்தாலே முகத்தைத் திருப்பிக் கொள்கின்றனர். யாரும் என்னுடன் பேசுவது இல்லை!'' என்று குறை சொன்னாள். ""நீ இப்போதுதான் இங்கே வந்திருக்கிறாய். உன்னுடன் பழக அவர்கள் தயக்கம் காட்டியிருக்கலாம். நீ அதைத் தவறாகப் புரிந்து கொண்டிருப்பாய். நாளாக நாளாக எல்லாம் சரியாகி விடும். சிறிது பொறுமையாக இரு!'' என்றான் அவன். அடுத்த நாள் அவன் வேலை முடித்து வீடு திரும்பினான். ""அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் நம்மைக் குறை சொல்லிக் கொண்டிருந்தனர். நான் வருவதைப் பார்த்ததும் பேசுவதை நிறுத்தி விட்டனர். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை!'' என்றாள் அவள். இப்படியே அவள் நாள்தோறும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களைப் பற்றி குறை சொன்னாள். ""இனி நம்மால் இங்கே குடி இருக்க முடியாது. வேறு இடம் பாருங்கள்,'' என்று நச்சரிக்கத் தொடங்கினாள். "நாம் அதிகம் பழகாததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் குறை தெரியாமல் போயிற்றா? மனைவி சொல்வது போல அவர்கள் பொல்லாதவர்கள்தானா?' என்று குழம்பினான் அவன். அப்போது பெற்றோர்களிடம் இருந்து அவனுக்கு ஒரு மடல் வந்தது. அதில், "ஊர்த் திருவிழா ஒருவாரம் நிகழ உள்ளது. நீ குடும்பத்துடன் வர வேண்டும்' என்று எழுதி இருந்தது. மனைவியிடம் அந்த மடலைக் காட்டினான். ""என் பெற்றோர்கள் ஊர்த் திருவிழாவிற்கு நம்மை அழைத்திருக்கின்றனர். எனக்கு அலுவலகத்தில் நிறைய வேலை உள்ளது. என்னால் வர முடியாது. நீ மட்டும் சென்று திருவிழா முடியும் வரை இருந்துவிட்டு வா!'' என்றான். அவளும் அவன் சொன்னது போலவே ஊருக்குச் சென்றாள். அங்கே ஒருவாரம் தங்கிவிட்டு வந்தாள். ""பயணம் எப்படி இருந்தது? என் வீட்டில் உள்ளவர்கள் உன்னை நன்றாகக் கவனித்துக் கொண்டார்களா?'' என்று கேட்டான் அவன். ""அங்கே மாடு மேய்க்கும் சுப்பனே என்னை எதிரியைப் போலப் பார்த்தான். மற்றவர்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? இனி என்னை அங்கே போகச் சொல்லாதீர்கள்!'' என்று சலித்துக் கொண்டாள் அவள். "சுப்பன் மாடுகளை மேய்ப்பதற்காக அதிகாலையில் வீட்டைவிட்டுச் செல்வான். இரவில்தான் வீடு திரும்புவான். பகலில் அவனை பார்ப்பதே அரிது. இரவிலும் எப்போதாவதுதான் கண்ணில் படுவான். அவன் இவளை எதிரி போலப் பார்த்ததாகச் சொல்கிறாள். "யாரைக் கண்டாலும் அவர்கள் தன்னை பார்ப்பதாகவும், தன்னைப் பற்றிதான் பேசுவதாகவும் நினைப்பதுடன், அடுத்தவர்களை குறை கூறும் இயல்பு இவளுக்கு அதிகம் உண்டு. நல்ல வேளை, இவள் பேச்சை நம்பி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சண்டை போடாமல் இருந்தேனே. இந்தக் கெட்ட பழக்கத்தை இவள் விடும்படி செய்ய வேண்டும். அதற்கான முயற்சியில் இறங்க வேண்டும்!' என்ற முடிவுக்கு வந்தான் சாந்தனு. நன்றி தினமலர் சிறுவர் மலர் always read and share cia https://testftirupurnorth.blogspot.com or www.testftirupurnorth.blogspot.com

4 Jul 2016

வெற்றி என்பது 99 சதவிகிதம் தோல்வி.”! - சி.குருநாதசுந்தரம். ( மாணாக்கர் மன உயர்வுக்கான கதை )

வெற்றி என்பது 99 சதவிகிதம் தோல்வி.”! -  சி.குருநாதசுந்தரம்.
( மாணாக்கர் மன உயர்வுக்கான கதை )

           “பிழைக்கத் தெரியாத முட்டாள்” என்று அந்த 18 வயது இளைஞனைத் திட்டினார் அவனது அப்பா. “தோல்விக்கென்றே பிறப்பெடுத்த துரதிர்ஷ்டக்காரன்” என்று கேலி பேசினர் அவனது நண்பர்கள்.

      அவன் அடைந்த தொடர் தோல்விகளை உலகத்தில் வேறு யாராவது அனுபவித்திருந்தால், எப்போதோ தற்கொலை முடிவுக்குப் போயிருக்கக்கூடும்.அத்தனை தோல்விகளையும் உள்வாங்கி, கடைசியில் பிரமாண்டமான வெற்றியைச் சாதித்த அந்த மாமனிதர் சாய்க்கிரோ ஹோண்டா. தனது வாழ்க்கை அனுபத்தைச் சாறுபிழிந்து சொன்னார்: “வெற்றி என்பது 99 சதவிகிதம் தோல்வி.”

      டொயோட்டா கம்பெனிக்கு பிஸ்டன் தயாரிக்கும் தொழிற்கூடம் உருவாக்க வேண்டும் என்பது மாணவர் சாய்க்கிரோ ஹோண்டாவின் கனவு. யாருக்காகவும் அவர் காத்திருக்கவில்லை. அப்பாவின் வசவு, சக மாணவர்களின் பரிகசிப்புக்கு இடையே, மாதிரி உலைக்கூடம் ஒன்றை 1928-ம் ஆண்டு உருவாக்கினார். இரவு பகலாக உழைத்தார்.

       ஓராண்டு உழைத்து உருவாக்கிய, மாதிரி பிஸ்டனை பெரும் எதிர்பார்ப்புடன் டொயோட்டா கம்பெனிக்கு எடுத்துச் சென்றார். “எங்கள் எதிர்பார்ப்புக்குரிய தரத்தில் உனது பிஸ்டன் இல்லை” என்று நிராகரித்துவிட்டார்கள் பொறியாளர்கள். முதலாவது கனவுத் திட்டம் படுதோல்வி அடைந்தது. மனம் பாரமாக இருந்தது. திரட்டிவைத்த முதலீடு மொத்தமும் காலி. எல்லோரும் வசைமாரி பொழிந்தார்கள்.

      புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும் என்ற மனப் பக்குவத்தோடு, ஹோண்டா மீண்டும் முயற்சித்தார். மேலும் பல மாதங்கள் விடாப்பிடியாக உழைத்து அவர் உருவாக்கிய புதிய பிஸ்டன் மாதிரியை டொயோட்டா கம்பெனி, “அருமை” என்று பாராட்டி ஏற்றுக்கொண்டது. தயாரிப்புக்கு கான்ட்ராக்ட் கொடுக்கப்பட்டது. மனதுக்குள் சிறிய வெற்றிக் களிப்பு. பெரிய தொழிற்கூடம் கட்டினால்தான் அவர்கள் கேட்கும் எண்ணிக்கையில் பிஸ்டன் தயாரிக்க முடியும். எனவே, கட்டடம் கட்டத் திட்டமிட்டார் ஹோண்டா. அப்போது ஜப்பான் நாடு உலகப் போருக்குத் தயாராகிக் கொண்டிருந்ததால், அங்கே வரலாறு காணாத சிமென்ட் தட்டுப்பாடு. எவ்வளவோ முயற்சி செய்தபோதும் 10 மூட்டை சிமென்ட்கூட கிடைக்கவில்லை.
“ஒழுங்காக ஏதாவது வேலையில் போய்ச் சேர்ந்துவிடு” – அப்பா.
                 “வாழ்க்கை முழுவதுமா ரிஸ்க் எடுத்துக்கொண்டே இருப்பாய்?” – உயிர் நண்பன்.

        தனது நலன் விரும்பிகளுடன் விவாதித்து, சிமென்ட் கலவைக்கு இணையான மாற்றுக் கலவையை உருவாக்கும் ஃபார்முலாவை கண்டுபிடித்தார் ஹோண்டா. ஆங்காங்கே கடன் வாங்கி, அடுத்த சில மாதங்களில் பெரிய தொழிற்சாலையை கட்டி முடித்தார். தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி, பிஸ்டன் தயாரிக்கும் தொழில் அமர்க்களமாகத் தொடங்கியது.

         கூடவே இரண்டாம் உலகப்போரும் தொடங்கியது. அமெரிக்கா போட்ட குண்டு, ஹோண்டாவின் தொழிற்சாலையில் பெரும் பகுதியை உடைத்துச் சுக்குநூறாக்கியது. ஹோண்டாவின் வாழ்க்கை முடிந்தது என்று பேசிக் கொண்டார்கள் நண்பர்கள். ஆனால், தனது மொத்தத் தொழிலாளர்களையும் திரட்டிக்கொண்டு, தானே களமிறங்கி இடிபாடுகளைச் சீர்செய்து, தொழிற்சாலையை மீண்டும் இயக்கிக் காட்டினார் ஹோண்டா.

        ஜப்பான் நாட்டில் நிலநடுக்கங்கள் அதிகம். ஒரு நாள் திடீரெனத் தாக்கிய நிலநடுக்கம் ஹோண்டாவின் தொழிற்சாலையைத் தரைமட்டமாக்கிவிட்டது. மொத்தத் தொழிற்சாலையையும் திருப்பிக்கட்ட முடியாத அவலநிலை. வேறு வழியின்றி உடைந்த கருவிகள், மூலப்பொருட்களைக் கிடைத்த விலைக்கு டொயோட்டா கம்பெனிக்கு விற்றுவிட்டார் ஹோண்டா. இப்படிப்பட்ட நிலைமையில் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? எண்ணிப் பாருங்கள். ஹோண்டா தனது அப்போதைய நிலைமை பற்றிச் சொல்கிறார். “நான் ஆசைப்பட்ட ஒரு திட்டம் தோல்வி அடைந்தால், துளிகூட கவலைப்பட மாட்டேன்… இருக்கிற நிலைமையை எப்படி மாற்றலாம் என்று தீவிரமாக சிந்திக்கத் தொடங்கி விடுவேன்.”

         இரண்டாம் உலகப் போர் முடிந்திருந்த நேரம். ஜப்பான் பொருளாதாரம் சாம்பலாக்கப்பட்ட காலகட்டம். எங்கும் பெட்ரோல் தட்டுப்பாடு. கார்கள் எல்லாம் முடங்கிவிட்டன. எல்லோரும் நடக்கிறார்கள் அல்லது சைக்கிள் மிதிக்கிறார்கள். சாய்க்கிரோ ஹோண்டா, வீட்டில் அமர்ந்திருந்தார். அருகில் சைக்கிள் நின்றது. சற்றுத் தொலைவில் புல்வெட்டும் இயந்திரம் இருந்தது. அந்தப் புல்வெட்டும் இயந்திரத்தில் உள்ள மோட்டாரைக் கழற்றி, இந்த சைக்கிளில் இணைத்தால் என்ன என்று ஹோண்டாவுக்கு ஒரு புத்தம்புது ஐடியா பளிச்சிட்டது.

        அடுத்த நொடியில் காரியத்தில் இறங்கினார் ஹோண்டா. புல்வெட்டும் இயந்திர மோட்டாரைக் கழற்றி எடுத்து, தனது சைக்கிளில் அவர் பொருத்தியபோது உலகின் முதல் மோட்டார் சைக்கிள் பிறந்துவிட்டது. அதை எடுத்துக்கொண்டு ஜம்மென்று சுற்றி வந்தார் ஹோண்டா.

             ‘‘அதேபோன்று எனக்கும் செய்துகொடு’’ என்று மொய்க்கத் தொடங்கினர் மக்கள். அவரும் சளைக்காமல் செய்துகொடுத்தார். விளைவு? அந்த ஊரில் மோட்டார் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. இதையே பெரிய தொழிலாக மாற்றினால் என்ன என்று சிந்தித்தார் ஹோண்டா. கையில் பணமில்லை. வங்கிகள் கடன் தரத் தயாரில்லை. ‘ஹோண்டா துரதிர்ஷ்டக்காரன்’ என்று எல்லோரும் சான்றிதழ் கொடுத்துவைத்திருந்தார்கள். கலங்கவில்லை ஹோண்டா. தனது தொழில் திட்டத்துக்கு பண உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து, ஜப்பானில் உள்ள 18 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்களுக்கு கடிதம் எழுதினார். முதலீடு செய்யும் சைக்கிள் கடைக்காரர்கள், மோட்டார் சைக்கிள் விநியோகஸ்தர்களாக நியமிக்கப்படுவார்கள் என உறுதி அளித்தார். 5 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்கள் முன்வந்து பண உதவி செய்தனர். ஹோண்டா மோட்டார் சைக்கிள் கம்பெனி உதயமானது. முதலில் தயாரான மோட்டார் சைக்கிள் குறித்து விமர்சனங்கள் வந்தபோது, தானே உலைக்கூடத்தில் அமர்ந்து, அழகான வடிவமைப்புடன் அற்புதமான மோட்டார் சைக்கிள் ரகங்களைக் கொண்டுவந்தார்.

          அவமானகரமான தொடர் தோல்விகளுக்குப் பின்னர் பெரும் வெற்றி பெற்றார் சாய்க்கிரோ ஹோண்டா. இப்போது ஹோண்டா கம்பெனி ஆண்டுக்கு சுமார் 2 கோடி மோட்டார் பைக்குகளைத் தயாரிக்கிறது. ஹோண்டா கார்களுக்கு மேலை நாடுகளிலும் பெரும் வரவேற்பு. எத்தனையோ வகை வகையான தயாரிப்புகளில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது இந்த நிறுவனம்.

         ஹோண்டா தயாரிப்புகளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு நினைவுக்கு வருவது, அதன் பிதாமகன் சாய்க்கிரோ ஹோண்டா தனது வாழ்க்கை அனுபவங்களைச் சாறுபிழிந்து சொன்ன வார்த்தைகள்தான்: “வெற்றி என்பது 99 சதவிகிதம் தோல்வி.”
 நன்றி : ஆனந்த விகடன்.

பழமொழி/Pazhamozhi கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்.

பழமொழி/Pazhamozhi
கம்பன் வீட்டுக் கட்டுத்
தறியும் கவிபாடும்.
பொருள்/Tamil Meaning
ஒரு மஹாகவியின் தாக்கம்
அவர் வீட்டில் உள்ள
பொருட்களிலும் பயிலும்
என்பது செய்தி.
Transliteration
Kampan veettuk kattut tariyum kavipatum.
தமிழ் விளக்கம்/Tamil Explanation
’கம்பன் வீட்டு
வெள்ளாட்டியும்
கவிபாடும்’ என்பது
இப்பழமொழியின் இன்னொரு
வழக்கு. வெள்ளாட்டி என்பவள்
வீட்டு வேலைகள் செய்யும்
வேலைக்காரி.’கட்டுத் தறி’
என்பது என்ன? தறி என்றால்
நெசவு என்பதால் கம்பர்,
வள்ளுவர் போல நெசவுத்
தொழில் செய்துவந்த
குலத்தைச் சேர்ந்தவரா?
கம்பரின் வரலாற்றைப் பற்றி
உள்ள கட்டுக் கதைகளில் அவர்
நெசவாளர் என்ற செய்தி
இல்லை. சிலர் ’கட்டுத் தறி’
என்றால் பசுமாட்டைக்
கட்டும் முளைக்கோல் என்று
பொருள் கொள்கின்றனர்.
எனக்கென்னவோ ’கட்டுத் தறி’
என்றதன் சரியான பொருள்
’தறித்துக் கட்டிவைக்கப்பட்ட
ஓலைச் சுவடிகள்’ என்றே
படுகிறது. புலவர்கள்
வீட்டில் பாட்டெழுத
நறுக்கிய ஓலைச் சுவடிகள்
இருப்பது வழக்கம்தானே?
எனவே, கம்பர் பாட்டால்
தாக்குண்டு இன்னும் எழுதப்
படாமல் காலியாக உள்ள
கட்டுத் தறிகளும்கூட
கவிபாடும் என்பதே சரியான
விளக்கம் என்று
தோன்றுகிறது.

மலை முழுங்கி சின்னக் குருவி! | Mountain Swallow a Little Sparrow

மலை முழுங்கி சின்னக்
குருவி! | Mountain Swallow a Little
Sparrow
சிட்டுக்குருவி, தவிட்டுக் குருவி,
ரெட்டைவால் குருவி, உழாவராக்
குருவி, தூக்கணாங்குருவி,
ஊர்க்குருவி என இப்படிப் பல
குருவிகளைப் பற்றி உங்களுக்குத்
தெரிந்திருக்கும். மலை முழுங்கி
சின்னக் குருவியைப் பற்றித்
தெரியுமா?
அதோ... ஒரு பெரிய மலை
தெரியுது இல்லையா? அதற்குக் கீழ
மலையடிவாரத்துல கொன்றை மரம்
ஒன்று இருக்கு. அந்த மரத்துல கூடு
கட்டி வாழுது இந்த மலை முழுங்கி
சின்னக் குருவி.
அது பொதுவான குருவிதான்.
தன்னால நாள்தோறும் ஒரு
மலையை முழுங்க
முடியுதுன்னு, மற்றவர்களை நம்ப
வைத்து, தனக்குத் தானே வைத்துக்
கொண்ட பெயர்தான் மலை முழுங்கி
சின்னக் குருவி.
அந்தக் கொன்றை மரத்துல சின்னக்
குருவியைப் போலவே, வேறொரு
கிளையில மைனா ஒன்றும் கூடு
கட்டி வாழ்ந்தது. ஒரே மரத்தில
இருக்கிறதால, இரண்டு பேரும்
நண்பர்கள் ஆனார்கள்.
ஒவ்வொரு நாளும் மைனா எங்கே
போனதோ, அந்த இடத்தோட
வளத்தையும், அழகையும், மிக
அழகாகச் சின்னக் குருவியிடம் வந்து
சொல்லும்.
அடிப்படையில சின்னக் குருவி
ரொம்ப சோம்பேறி. ரொம்ப தூரம்
பறந்து போய் இரையைத் தேடாது.
பக்கத்திலேயே போய்விட்டு
கூட்டுக்குத் திரும்பிவிடும். வந்து
கூட்டுக்குள் உறங்கும். தாகம்
எடுத்தால் மலையடிவாரத்துல
ஓடும் நதியில் தண்ணீரைக்
குடிக்கும். ஆனா, மைனாகிட்ட
“நான் ரொம்ப தூரம் போனேன். அங்கே
ஒரு அதிசயத்தைப் பார்த்தேன்னு”
ரொம்ப பொய் சொல்லும்.
சின்னக் குருவி சொல்லும்
பொய்களை உண்மை என்றே
நம்பியிருந்தது மைனா.

“குருவி நண்பனே! எனது நண்பர்கள்
வெளியூரிலிருந்து, அருகில்
உள்ள ஊருக்குச் சுற்றுப்பயணம்
வருகிறார்கள். ஆகையால் நான்
அங்கு செல்கிறேன். வருவதற்கு ஒரு
வாரம் ஆகிவிடும்” என்று
கூறிவிட்டு புறப்பட்டது மைனா.
மைனா திரும்பி வருவதற்குள்
சின்னக் குருவி, ‘மலை முழுங்கி
சின்னக் குருவி’ என்ற பட்டப் பெயரை
சூட்டிக் கொண்டது. அது
சுற்றுவட்டாரத்தில் பரபரப்பாகப்
பேசப்பட்டது.
ஒருவாரம் கழித்து, திரும்பி வந்த
மைனா, “என்ன குருவி நண்பனே!
உனது பெயர் சின்னக் குருவிதானே!
ஆனால், எல்லோரும் மலை முழுங்கி
சின்னக் குருவி என்று
அழைக்கிறார்களே” என்று ஆவலாகக்
கேட்டது.
“ஹா....! ஹா...!” என்று சிரித்த சின்னக்
குருவி, “என்ன மைனாவே!
என்னுடைய பலத்தை அறியாமல்
இப்படி ஒரு கேள்வியைக்
கேட்டுவிட்டாயே. நீ என் நண்பன்
என்பதால் உன்னை சும்மா
விடுகிறேன். வேறு யாராவது
கேட்டிருந்தால் அவ்வளவுதான்” எனக்
கோபமாகக் கூறியது.
“நண்பனே! இதிலே கோப்படுவதற்கு
என்ன இருக்கிறது. நாம் இருவரும் பல
ஆண்டுகள் நண்பர்களாக இருக்கிறோம்.
ஆகையால் உனது பலம் எனக்கும்
தெரியும். அதுமட்டுமல்ல நம்மைப்
போன்ற சிறிய பறவைகளால்
அவ்வளவு பெரிய மலையை அல்ல...
மடுவைக்கூட முழுங்க இயலாதே”
என்றது மைனா.
“அப்படியா? நீ நம்ப வில்லைதானே?
சரி, நாளைக்குக் காலை அந்த
நதிக்கு வா.. நான் மலையை
முழுங்குவதைக் காணலாம்” என்றது
சின்னக் குருவி.
“சரி!” என்று கூறிவிட்டு உணவுத்
தேடிப் பறந்தது மைனா.
மறுநாள் காலை
மலையடிவாரத்தில் உள்ள நதிக்கு
இரண்டும் வந்தன.
அப்போது சூரியன் மலைக்குப்
பின்னால் ஒளிவீசிக்
கொண்டிருந்தது. அதனால் மலையின்
நிழல் நீரில் விழுந்திருந்தது.
“மைனாவே! இதோ பார்! இந்த நீரில்
மலையின் அச்சு தெரிகிறது
அல்லவா?” எனக் கேட்டது சின்னக்
குருவி.
“ஆமாம், தெரிகிறது” எனப் பதில்
சொன்னது மைனா.
“இப்போது பார்” எனத் தன் மெல்லிய
அலகால் கொஞ்சம் கொஞ்சமாக நீரைக்
குடித்துக் கொண்டிருந்தது சின்னக்
குருவி.
நேரம் ஆக ஆக சூரியன் மேலே
போனது. மேலேச் செல்ல செல்ல
மலையின் நிழல் நதியை விட்டு
கொஞ்சம் கொஞ்சமாக மறையத்
தொடங்கியது.
ஒரு மணி நேரத்துக்கு பிறகு,
“மைனாவே! பார்த்தாயா? நான்
நீரைக் குடிக்க குடிக்க மலையின்
நிழல் குறைந்து கொண்டே வந்தது.
அந்தக் குறைந்த மலையின் நிழல் என்
வயிற்றுக்குள் சென்றுவிட்டது”
என்றது சின்னக் குருவி.
இப்போது “ஹா...! ஹா...!” என்று
சிரித்தது மைனா.
“என்ன மைனாவே! ஏன் சிரிக்கிறாய்?”
எனக் கேட்டது சின்னக் குருவி
“என்ன சொல்வது குருவி நண்பனே!
மலை அதன் இடத்தில் தான்
இருக்கிறது. நீ தாகத்துக்கு தண்ணீர்
குடித்தாய். சூரியனின் ஒளியால்
அதன் நிழல் நீரில் படிந்திருக்கிறது.
சூரியன் தன் வேலையைச் சரியாகச்
செய்வதால், அதன் ஒளி மேலே செல்ல
செல்ல மலையின் நிழலும்
குறைந்தது.
அப்படியானால் சூரியன் தானே
மலையின் நிழலை முழுங்கி இருக்க
முடியும்? நீ முழுங்கி விட்டதாகத்
தவறாக நினைத்துக்கொண்டு, பட்டப்
பெயரை வேறு சூட்டிக்
கொண்டாயே...” என விளக்கியது
மைனா.
“ஓ.. நான்தான் தவறாகப்
புரிந்துகொண்டேனா?” எனச்
சொல்லி தலை கவிழ்ந்தது சின்னக்
குருவி.
“குருவி நண்பனே! கவலைப்படாதே.
நாம் நம் கடமையில் சரியாக
இருந்தால், அதுவே சிறப்பு தான்.
இது எல்லோருக்கும் இயல்பாக
நடக்கக்கூடிய தவறுதான்” என்றது
மைனா.
“மைனாவே! என் தவறை எனக்குப்
புரிய வைத்ததற்கு நன்றி” என்றது
சின்னக் குருவி.
“சரி! வா... நண்பனே... இருவரும்
இணைந்தே உணவுத் தேடிப்
பறப்போம்” என அழைத்தது மைனா.
மிகுந்த உற்சாகத்தோடு, வானில்
பறக்க ஆரம்பித்தது சின்னக் குருவி.
“குழந்தைகளே, உங்கள் வீட்டின்
அருகில் உள்ள மரங்களில் பாருங்கள்...
அந்த சின்னக் குருவி ஏதும்
வந்திருக்கிறதா என்று. முடிந்தால்
உங்கள் வீட்டின் மொட்டை மாடியில்
குருவிகளுக்காகத்
தானியங்களையும், நீரையும்
வையுங்கள்.”                                       ------read this story and share this story whenever u need via www.testftirupurnorth.blogspot.com