மழலைக் கதை – 62
டம்ராவின் இசைக்கச்சேரி – விழியன்
அது எறும்புகளின் இசை வகுப்பு. அன்றைய இசை வகுப்பு முடிந்தது . இசை ஆசிரியர் எல்லோரையும் பத்திரமாக வீட்டிற்கு கிளம்பச்சொன்னார். ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு தலைவன் எறும்பு இருந்தது. அது அந்த பகுதி எறும்புகளை பாதுகாப்பாக வழி நடத்திச் செல்லும். மரத்தின் கீழே இருக்கும் எறும்புக் கூட்டம், பழைய கார் டயருக்கு கீழே இருக்கும் கூட்டம், செம்பருத்தி செடிக்கு கீழே இருக்கும் எறும்புக் கூட்டம், வீட்டு சமையலறைக்கு கீழே இருக்கும் கூட்டம் என ஆங்காங்கே நிறைய கூட்டம் இருக்கும். எல்லா கூட்டத்தில் இருந்தும் எறும்புகள் இசை வகுப்பிற்கு வந்து செல்லும். தினமும் மாலை 6 மணி முதல் 7 மணி வரை வகுப்பு நடைபெறும்.
வகுப்பு நடைபெற்ற இடம் மோர்ட்டர் அறை. அங்கே தான் மனித நடமாட்டமோ மற்ற பூச்சிகளின் நடமாட்டமோ இருக்காது. இசைப் பயிற்சிக்கு அமைதியான இடம் தேவை என்று அதன் ஆசிரியர் முடிவு செய்திருந்தார். மேலும் இசைக்கருவிகளை அடுக்கி வைக்க அங்கே தான் போதுமான இடம் கிடைத்தது.
டம்ரா அன்றைய வகுப்பு முடிந்தும் அங்கிருந்து வர மறுத்தது. அதற்கு இசைக்கருவியை தன் இருப்பிடத்திற்கு எடுத்துச் செல்ல அனுமதி கேட்டது. பகல் முழுவதும் இசை பயிற்சி செய்ய போவதாக இசை ஆசிரியரிடம் கேட்டது. டம்ரா வராததால் அந்த கூட்டத்தை சேர்ந்த எல்லா எறும்புகளும் அதன் தலைவனும் அங்கேயே நின்றிருந்தார்கள்.
“எடுத்துச் செல்லும் போது வழியில் ஆபத்து வரலாம். வேண்டாம்” என எச்சரித்தது ஆசிரியர் எறும்பு. டம்ரா விடாப்பிடியாக எடுத்தே செல்வேன் என ஒற்றைக்காலில் நின்றது. சரி என கடைசியாக ஒப்புக்கொண்டது ஆசிரியர் எறும்பு. தன் நண்பர்களின் துணையோடு அந்த இசைக்கருவியை எடுத்து சென்றனர்.
ஆசிரியர் எச்சரித்தது போலவே வழியில் ஆபத்து வந்தது. ஒரு கரப்பான்பூச்சி வடிவில். “ஏ எறும்புகளே இதென்ன புதுசா இருக்கு. நான் பார்த்ததே இல்லையே” என்றது. கரப்பான்பூச்சிகள் எப்போது எறும்புகளுக்கு ஆபத்தானது. உருவத்தில் மிகப்பெரியது எளிதில் தாக்கிவிடலாம். டம்ரா அது ஒரு இசைக்கருவி என்றது.
“அப்படி என்றால்?”
“இதில் இசை கேட்கலாம். உடன் பாடினால் இன்னும் மகிழ்வாக இருக்கும்” என்றது. அந்த பெரிய கரப்பானுக்கு புரியவில்லை. “நீங்கள் இசைத்து காட்டுங்கள்” என்றது.
கருவியை தோளில் இருந்து இறக்கினார்கள். அதன் தலைவன் மெல்ல கிசுகிசுத்தான் “அப்படியே போட்டுவிட்டு வேகமாக ஓடிவிடலாம். கரப்பானால் நம்மை பிடிக்க முடியாது. இசைக்கருவியோடு போய்விடட்டும் ஆபத்து” என்றது. “இல்லை. நான் இந்த கருவியை விட்டுவிட்டு வரமாட்டேன். ஆசிரியரிடம் நான் ஒழுங்காக ஒப்படைக்க வாக்கு கொடுத்துள்ளேன். நீங்கள் போங்கள். நான் இசைத்துவிட்டு தனியாக எடுத்து வருகின்றேன்” என்றது டம்ரா. மற்றவர்களுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.
டம்ரா கரப்பானின் விண்ணப்பத்தின்படி இசைக்க ஆரம்பித்தது. டம்ராவின் ஆர்வத்தால் அது இசைத்த இசை மென்மையாக இருந்தது. இசையுடன் டம்ராவும் பாட ஆரம்பித்தது. கரப்பான் அந்த இசையால் தன்னை இழந்தது. உடன் வந்திருந்த நண்பர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினார்கள். மெல்ல மெல்ல அந்த வீட்டின் பின்புறம் இருந்த ஒவ்வொரு பூச்சிகளாக வெளியே வரத்துவங்கின. டம்ராவின் இசை அனைவரையும் ஈர்த்தது. அந்த எறும்புக்கூட்ட தலைவன் மோட்டர் பொந்திற்கு சென்று இசை ஆசிரியரிடம் விஷயத்தை கூறியது. ஆசிரியரும் வந்து கூடி இருந்த பூச்சிகளின் எண்ணிக்கையையும் அவர்கள் இசையை ரசிப்பதையும் பார்த்தது. உடனே மற்ற எறும்புகளுடன் சென்று மீதம் இருந்த எல்லா இசைக்கருவிகளையும் எடுத்து வந்தன. எல்லா எறும்புகளும் இசைக்க துவங்கின. மற்ற பகுதிகளில் இருந்தும் எறும்புகள் வந்துவிட்டன.
டம்ரா ஆரம்பித்து வைத்தது கச்சேரியாக மாறியது. பூச்சிகள் இசையை ரசிக்கும் என எறும்புகளுக்கு இதுவரை தெரியவே இல்லை. பாடல்களுக்கு நடுவே கைத்தட்டல்கள் நிகழ்ந்தன. மகிழ்ச்சி ஆரவாரம். “நாமும் இசை வகுப்பில் சேர்ந்து கொள்ளலாமா” என்று நிறைய பூச்சிகள் பேசத்துவங்கின.
“பாஆஆஆம்” என்ற ஹாரன் சத்தம் கேட்டது. வழக்கமாக இரவு ஒன்பது மணிக்கு வரும் காரின் ஹாரன் சத்தம். இதோ கச்சேரி நடக்கும் இடத்தில் தான் கார் வந்து நிற்கும். உடு ஜூட் என அடுந்த சில நொடிகளில் அந்த இடம் காலியானது.
எங்கேனும் எறும்பினைப் பார்த்தால் அதன் கையில் இசைக்கருவி இருக்கின்றதா என பாருங்கள். அது டம்ராவாக கூட இருக்கலாம்.
- விழியன்

No comments:
Post a Comment