THE KING MAKERS

THE KING MAKERS
THE KING MAKERS

27 Oct 2016

அண்ணாமலைப் பல்கலை.யில் சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம்

🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் பெறாத மாணவர்களுக்கு அதை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.


பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம் கடந்த 15 ஆண்டுகளாகப் படித்து தேர்ச்சி பெற்றவர்களில் சிலர் தங்களது மதிப்பெண் பட்டியல் (Mark Sheet), பட்டச் சான்றிதழை(Covocation)  இதுவரை பெறாததால் அவை தேர்வுத் துறையில் உள்ளன.


அந்த மாணவர்கள் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்வதற்கானசிறப்பு முகாம் டிசம்பர் 9 முதல் 11-ஆம் தேதி வரை பல்கலைக்கழகத் தேர்வுத் துறை கட்டடத்தில் நடைபெற உள்ளது. எனவே, இதுவரை சான்றிதழ் பெற்றுக் கொள்ளாதவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பயன்பெறலாம்.


மாணவ, மாணவிகள் தங்களது அடையாள அட்டையுடன் நேரில் வந்து, பல்கலைக்கழகத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைச் செலுத்தி சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.

 மேலும் விவரங்களுக்கு 04144-238027, 237368, 238358, 04144-238282, 238248 EX: 578 என்ற எண்களிலும், aucertisplcamp16@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம் என தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரி ராம.சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.

ஆதார் அட்டை பதிவுக்கு காலக்கெடு ஏதுமில்லை'

🍄🍄🍄🍄🍄🍄🍄🍄


குடும்ப அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணிக்கு காலக்கெடு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என்று உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவித்துள்ளார். மேலும், ஆதார் எண்ணை இணைக்காத குடும்ப அட்டைகளுக்கு பொருள்கள் நிறுத்தப்படும் என்று வெளியான தகவலையும் அவர் மறுத்துள்ளார்.


சென்னையில் உள்ள அமுதம், கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் அமைச்சர் ஆர்.காமராஜ் புதன்கிழமை ஆய்வு நடத்தினார். இதைத் தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-


தீபாவளி பண்டிகைக்கு முன்பாக, அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் அத்தியாவசியப் பொருள்கள் நகர்வு செய்துமுடிக்கப்பட வேண்டும். மாத ஒதுக்கீட்டின்படி பொருள்கள் நகர்வு செய்து முடிக்க வேண்டும். மேலும், அத்தியாவசியப் பொருள்கள் சீரான முறையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்வது உறுதி செய்யப்பட வேண்டும்.


ஆதார் எண் பதிவு: ஆதார் எண் பதிவுகள் மேற்கொள்ளாத அட்டைதாரர்களுக்கு பொருள்கள் விநியோகம் நிறுத்தப்பட மாட்டாது. இந்தப் பணிகளுக்கு காலநிர்ணயம் செய்யப்படவில்லை. ஆதார் எண்ணை இணைக்காதோரும் பொருள்கள் வழங்குவதற்கு வழக்கமான நடைமுறையே பின்பற்றப்பட்டு வருகிறது.


பொருள் தேவைப்படாத அட்டைதாரர்களும்...:


எந்தப் பொருளும் தேவைப்படாத குடும்ப அட்டை ("என் கார்டு') வைத்துள்ளோர், குடும்ப அட்டை காலக்கெடு (31.12.16 வரை) நீட்டிப்பு பிரதி, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் தங்கள் பகுதிக்குரிய நியாய விலைக் கடைக்குச் சென்று செல்லிடப்பேசி உள்ளிட்ட சுயவிவரக் குறிப்புகளைக் கூறி ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் என்றார்.ஆய்வின்போது உணவு பொருள் வழங்கல்- நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் மதுமதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

8 ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி: மாநிலங்களின் முடிவுக்கு விட்டது மத்திய அரசு

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷






பள்ளி மாணவர்களுக்கு 8-ஆம் வகுப்பு வரை கட்டாயமாக தேர்ச்சி அளிக்கும் கொள்கை தொடர்பான இறுதி முடிவை சம்பந்தப்பட்ட மாநிலங்களிடமே விட்டுவிடுவதாக மத்திய அரசு கூறியுள்ளது.



மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தலைமையில் தில்லியில் மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.


இதில், "8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை கடைப்பிடிக்கப்படுவதால் கல்வித் தரம் குறைகிறது. எனவே, 5-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி பெறவைப்பது தொடர்பாக இறுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும்' என்று பல்வேறு மாநிலங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.



கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ஜாவடேகர் கூறியதாவது: மாநில அரசுகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது.

 இது தொடர்பாக உரிய சட்டத் திருத்தத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வரும். அது வரை 8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் கொள்கை தொடர்பான இறுதி முடிவை மாநில அரசுகளே எடுத்துக் கொள்ளலாம்.


மாநிலக் கல்வி வாரியத்தில் ஏற்கெனவே 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு உள்ளது. அதேபோல மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திலும் (சிபிஎஸ்இ) 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பான திட்டம் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது. இது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும்.

 மத்திய கல்வி ஆலோசனை வாரியக் கூட்டத்தை அடிக்கடி நடத்த வேண்டும் என்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.


மத்திய, மாநில அரசுகளுக்கு கல்வித் திட்டங்கள் தொடர்பாக ஆலோசனைகள் அளிப்பதில் முதன்மையானது மத்திய கல்வி ஆலோசனை வாரியமாகும்.

 இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜீவ் பிரதாப் ரூடி, விஜய் கோயல், மகேந்திர நாத் பாண்டே, உபேந்திர குஷ்வாஹா, 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த கல்வி அமைச்சர்கள், மாநிலப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

23 Oct 2016

OCTOBER SALARY

தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு மாநில கருவூல கணக்குத்துறை இயக்குநர் அவர்கள் அனைத்து மாவட்ட கருவூல அலுவர்களுக்கும் தெரிவித்துள்ள அறிவுரைகளின்படி, வரும் திங்கட்கிழமை 24.10.2016 அன்று கருவூலகத்தில் பணியாளர்களது ஊதியப்பட்டியல் தயார்செய்து வழங்கினால் தீபாவளிக்கு முதல் நாள் 28.10.2016 அன்று ஊதியம் வழங்கிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது என்ற செய்தியினை தெரிவித்துக
கொள்கிறோம்.

SABL ஏற்கக் கூடிய ஒன்றா? இணையத்தில் ஓர் கட்டுரை !! கற்பிப்பு முறைகளும் கள(கால)த் தேவையும்:



*செயல்வழிக் கற்றல் எளிமைப்படுத்தப்பட்டதா?*

SABL மிக எளிய நடைமுறையாக இருக்க வேண்டுமெனில், ஒரு வகுப்பில்

1. மாணவர்கள் மீத்திறன் மிக்கவர்களாக இருக்க வேண்டும்.

2. மாணவர் எண்ணிக்கை 15

3. ஆசிரியர் துடிப்பான & உடல் வலிமை மிக்கவராக இருத்தல்.

ஆகிய இம்மூன்றில் ஏதேனும் 2 கூறுகள் இருந்தே ஆகவேண்டும்.

2 கூறுகள் கூட இல்லையெனில் SABL நடைமுறை 100% வெற்றி பெறவது இயலாது.

SABL ஏற்கக் கூடிய ஒன்றா?

மேலை நாடுகள் சிலவற்றிலும் இம்முறை உள்ளது. ஆனால் அங்கு ஆசிரியர் மாணவர் விகிதம் பின்பற்றப்படுகிறது. உதாரணமாக அமெரிக்காவில், 5 வயதினருக்கு 1:10, 7 வயதினருக்கு 1:12 என்று மாணவர் விகிதம் வயதைப் பொறுத்து நடைமுறையில் உள்ளது. மேலும், பல்வகுப்புக் கற்பித்தல் இல்லை. இதுபோன்ற நடைமுறை இங்கும் பின்பற்றப்படுமாயின் இது ஏற்கக் கூடியதே!

*சிறப்பாகச் செயல்படுத்தியுள்ளனரா?*

ஆம். நானல்ல, எனது நண்பர்கள் சிலர் SABL-ஐ மிகச் சிறப்பாகக் கையாண்டு வருகின்றனர். அவர்களின் வகுப்பறை மேலே கண்ட கூறுகளில் ஏதேனும் 2-னை உடையதாகவே இருந்து வந்துள்ளது. குறிப்பாக இவர்கள் சோர்வறியாதவர்கள். மாணவர் எண்ணிக்கை கூடும் சூழலில் அவர்களும் மலைத்ததுண்டு. அவர்களின் வலிமை அவ்வேளையில் உற்ற துணையாக இருந்துள்ளது.

*SABL சிறப்பாக உள்ளதா?*

என்றால் இல்லை என்பதே விடை. புத்தகம் - அட்டை என பல குழப்பங்களை உள்ளடக்கியுள்ளது. 2-ற்கும் இடையே அதிக வேறுபாடுகளும் உள்ளது. ஏணிப்படி நிலையிலும் முன்பின் முரண் & பாடப்பகுதி இல்லாதது என பல குறைபாடுகள் உள்ளது.

"தனியாள் வேற்றுமை" என்ற பதத்தை உளவியல் தேர்வோடு மறந்துவிட்ட கல்வித்துறை அலுவலர் & அதிகாரிகள், ஆசிரியர் என்பவரும் மானுடன் தான்; அவருக்கும் மானுடத்திற்குரிய அனைத்து உளவியல் & உடலியல் கூறுகள் உண்டு என்பதையும் மறந்து மறத்துப் போய்விட்டதன் விளைவே ஒரே எதிர்பார்ப்பில் அனைத்துப் பள்ளிகளையும் பார்வையிடுதல் என்பது.

நோயுற்றவனைச் சோதித்து தான் மருந்துகள் வெளியிடப்படும். ஆனால் கல்வித் துறையில் மட்டும் மிகச் சிறந்த மீத்திறன் மாணவர் பெரும்பான்மையாக உள்ள பள்ளிகளில் தங்களின் பயிற்றுவிப்பு நடைமுறைகளைச் சோதித்துவிட்டு அதனை மாநிலம் முழுமைக்கும் நடைமுறைப்படுத்துவதோடு, அதே விளைவு அனைத்துப் பள்ளிகளிளும் எதிர்பார்க்கப்படுகிறது.

*என்னதான் செய்வது?*

கல்விக் கொள்கைகளை விவாதத்திற்கு உட்படுத்துதல் எவ்வளவு இன்றியமையாததோ அதே அளவு முக்கியமானது கற்பித்தல் முறைகளைப் பற்றிய விவாதங்களும்.

கற்பித்தல் முறைகள் தொடர்பான விவாதத்திற்கு எந்தவொரு ஆசிரிய இயக்கமும் முன்வந்ததாக எனக்கு நினைவில்லை. அதிகார வர்க்கத்தின் திணிப்பை எவ்வித விமர்சனமும் இன்றி அப்படியே பின்பற்றி வரும் நிலை தான் இன்றும் உள்ளது.

கற்பித்தல் முறை என்பதும் ஆசிரியர் & மாணவர்சார் பிரச்சினையே என்பதை அனைத்து இயக்கங்களும் உணர வேண்டும்.

நடைமுறையில் உள்ள SABL, SALM, ALM என அனைத்து கற்பித்தல் முறைகளையும் ஆசிரிய இயக்கங்கள் தாமே முன்வந்து தனதளவில் ஆய்வு செய்திட வேண்டும். ஏனெனில் நடைமுறைச் சிக்கல்களை பச்சை மையில் கையொப்பமிடும் அதிகாரிகள் அல்ல பச்சைக் குழந்தைக்குப் பாடம்புகட்டும் ஆசிரியர்கள் தான் அறிவர்.

ஆண்டுதோறும் கோடிக்கணக்கான நிதி குறு / வட்டார வளமையப் பயிற்சிகள் என்ற பேரில் களத்தேவைக்கு ஏற்பில்லாத பணியிடைப் பயிற்சிகளால் வீணாகிக் கொண்டு தான் உள்ளது. காரணம் இப்பயிற்சிகளை முடிவு செய்வது அதிகார வர்க்கமாக உள்ளதே அன்றி, தனது தேவையை உணர்ந்த ஆசிரியர்கள் / ஆசிரியப் பயிற்றுநர்கள் அல்ல.

நாடாக் கோப்பில் முன்மொழியப்படும் திட்டங்கள் எந்த அளவிற்கு நடைமுறைச் சாத்தியம் உள்ளது என்பதை ஆய்ந்து தெளியும் அறிவுப் பணியில் ஆசிரிய இயக்கங்கள் கவனம் செலுத்தி, ஆய்ந்து செயல்படுத்த முன்வர வேண்டும்.

இப்படிப்பட்ட ஆய்வுகளை நடைமுறைச் சாத்தியத்திற்கு ஏற்றதாக்கும் பொறுப்பும் கடமையும் இயக்க உறுப்பினர்களான ஆசிரியர்களிடமே உள்ளது.

உடல் நலம் பெற வேண்டுமெனில் பிணியாளிக்கான மருத்துவ முறையை  மருத்துவர் தான் நிர்ணயிக்க வேண்டும். நாடு வளம்பெற வேண்டுமானால் மாணவர்களுக்கான பயிற்றுவிப்பு முறையை ஆசிரியர் தான் தீர்மானிக்க வேண்டுமே அன்றி பயிற்றுவிக்கும் சூழலே அறியாத ஆட்சிப்பணி அதிகாரிகள் அல்ல.

_*✍🏼சிறுதுளி💧

அனைத்து மாவட்ட மாணவர்கள் விபரங்களை STUDENT POOLலிருந்து எளிதில் விபரங்களை ஈர்க்க அனைத்து பள்ளிகளின் UDISE CODE உடன் -

ALL SCHOOL U DISE CODE
ALL SCHOOL DISE CODE ... CLICK HERE

22 Oct 2016

ஒரு வார்த்தை ஒரு லட்சம்

ஒரு வார்த்தை ஒரு லட்சம் பிரமாண்டமான இறுதிப்போட்டியில் முத்திரை பதிக்குமா... மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி?


கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்திலுள்ள மூலத்துறை நடுநிலைப் பள்ளி ஆசிரியரும் அப்பள்ளி மாணவியும் கலந்து கொண்ட "ஒரு வார்த்தை ஒரு லட்சம் " நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியானது வரும் ஞாயிறு (23/10/2016) மாலை 6 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. அரசுப்பள்ளியின் முயற்சியை காணத் தவறாதீர்..

பொம்மலாட்டம் ஆடும் ஆசிரியர்கள் : அடிப்படை கல்விக்கு 'டாட்டா

!'




அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., சார்பில், ஆசிரியர்களுக்கு, பொம்மலாட்டம் போன்ற நடனப் பயிற்சிகள் தரப்படுவதால், மாணவர்களுக்கான அடிப்படை கல்வி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அடிப்படை கல்வியை வலுப்படுத்த வேண்டிய, எஸ்.எஸ்.ஏ., என்ற, மாநில திட்ட அமைப்பு, மத்திய அரசிடம் பெறும், பல கோடி ரூபாய் நிதியில், ஆசிரியர்களுக்கு பல பயிற்சிகளை அளிக்கிறது.



இதற்காக வரும் ஆசிரியர்களுக்கு, போக்குவரத்து செலவு, உபசாரம், விடுமுறை என, சலுகைகளும் அளிக்கப்படுகின்றன.

 சென்னையில், இரு நாட்களாக, நுாற்றுக்கணக்கான ஆசிரியர்களுக்கு, பொம்மலாட்டம் கற்பித்தல் பயிற்சி நடந்தது.


 பொம்மலாட்ட பயிற்சி முடித்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடம் நடத்த துவங்கும் முன், அடுத்த பயிற்சிக்கு அழைக்கப்படுகின்றனர்.


 'மாணவர்களுக்கு உதவாத, இது போன்ற ஆட்டம் காட்டும் பயிற்சி களை வைத்தே, பல ஆசிரியர்கள் பள்ளிகளில் இருப்பதில்லை' என, தலைமை ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.


 மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, எஸ்.எஸ்.ஏ., பாடம் நடத்துகிறது.


பாடம் கற்க வேண்டிய மாணவர்களோ, வகுப்புகளில், ஆசிரியர்கள் இன்றி தடுமாறுகின்றனர் என, கல்வியாளர்கள் குமுறுகின்றனர்.


இது குறித்து, ஆசிரியர் கள் சிலர் கூறுகையில், 'பாடங்களை முறையாக நடத்த ஆசிரியர்களுக்கு உத்தரவிட வேண்டும். பின், இது போன்ற நடனங்களை கற்று தரலாம்.


'எஸ்.எஸ்.ஏ., நடத்தும் மதிப்பீட்டு தேர்வில், மாணவர்கள் பின்தங்கி உள்ளனர். அதன் பின்னும், இது போன்ற பயிற்சிகள் கைகொடுக்க வில்லை என்பதை, அவர்கள் உணரவில்லை' என்றனர்.

11 Oct 2016

Cps missing credit

🍁CPS MISSING CREDIT🍁

👉 வலைதளத்தில்
http://218.248.44.123/auto_cps/public என்ற இணையப் பக்கத்தில்
 உங்களது  CPS கணக்கை லாக்இன் செய்தால் தற்போது இடது பக்கத்தில் புதிய ஆப்சனாக மிஸ்சிங் கிரிடிட் (MISSING CREDIT) உள்ளதை கிளிக் செய்தால் 2015-2016 ல் உங்களது கணக்கில் உள்ள மிஸ்சிங் கிரிடிட் தொகை மற்றும் டோக்கன் நம்பருடன் வரும்.
அந்த CPS பிடித்தம் செய்த தொகை சரியானதாக இருந்தால் அக்ரி
( AGREE ) புள்ளியை கிளிக் செய்யவும்.

👉 தொகை தவறானதாக இருந்தால் டிஸ்அக்ரி
(DIS AGREE) என்று கிளிக் செய்யவும்.

👉 உங்களின் DDO மாற்றம் இருப்பின் அலுவலகத்தில் தெரியப் படுத்தவும்.

ஆயிஷா இரா. நடராசன் அவர்களின் *வன்முறையில்லா* வகுப்பறை என்ற புத்தகத்திலிருந்து... (ஒவ்வொரு ஆசிரியரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்...)



ஆயிஷா இரா. நடராசன் அவர்களின் *வன்முறையில்லா வகுப்பறை* என்ற புத்தகத்திலிருந்து...
(ஒவ்வொரு ஆசிரியரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்...)


““எப்போது பள்ளிக்கு விடுமுறை என அறிவித்தால் குழந்தைகள் மனம் வருந்துகிறார்களோ, பள்ளி வேண்டும் என அடம் பிடிக்கிறார்களோ, அப்போதுதான் உண்மையான கல்வி நடக்கிறது என்று அர்த்தம்...”
- ஜார்ஜ் பெர்னாட்ஷா


நாம் இந்தப் பகுதியில் 4 வகுப்பறை காட்சிகளைக் கண்டு, அதுபற்றி தீவிரமாக ஆராய இருக்கிறோம். இம்மாதிரி நிகழ்வுகள் நம் வகுப்பறைகளில் தினமும் நடப்பதுதான். ஒரே சூழல். ஒரே நிகழ்வு. ஆனால், வேறு வேறு அணுகுமுறைப்படி ஒரு மாணவன் நடத்தப்படுகிறான். நான்கு காட்சிகளையும் வாசித்தபிறகு அவற்றை ஒவ்வொன்றாகப் பரிசீலிப்போம். எது சரியான அணுகுமுறை
என்பதை விவாதிப்போம்.


காட்சி-1


ஆசிரியை லட்சுமி, தான் வகுப்புஎடுக்கும் நான்காம் வகுப்பு (கணிதப் பாடவேளை)க்குள் நுழைகிறார். அது காலை இரண்டாவது பீரியட். வகுப்பில் அனைவரும் எழுந்து ‘குட்மார்னிங் மேடம்’ என்கிறார்கள். தொடர்ந்து ஒரே இரைச்சல். லட்சுமி கத்துகிறார். “கீப்... கொயட்... பேசாத... கவனி...”
வகுப்பு ஓரளவு அமைதியாகிறது. ஆனால், மூன்றாம் பெஞ்சில் உள்ள ரவி பேசுவதை நிறுத்தவே இல்லை. நேற்று நடந்த கிரிக்கெட் ஆட்டம் பற்றி சுவாரசியமாகத் தன் நண்பனோடு விவாதிக்கிறான். “ரவி... ஏண்டா இப்படி இருக்க... உன்னை திருத்தவே முடியாதா...” என்கிறார் லட்சுமி. கோபம் அடங்காமல், “எழுந்து வெளியே போ... கெட் அவுட்...” என்கிறார்.


ரவி முதலில் முரண்டு பிடித்தாலும் மெல்ல எழுந்து வகுப்பறை வாசலில் நிற்கிறான். வகுப்பு தொடர்ந்தது. அந்த வழியே வந்த தலைமை ஆசிரியர், “என்ன லட்சுமி மிஸ்... என்ன பிராப்ளம்... இங்கே யார் BOSS-ன்னு இவனுக்கு காட்டவா?” என்று ரவியைக் காட்டி மிரட்டுகிறார். ரவிக்கு ஒன் பாத்ரூம் வந்து முட்டியது. அச்சத்தில் அழுகை தொண்டையை அடைத்தது. கண்டிப்பாக நாளை பள்ளிக்கு வரமாட்டான்.


காட்சி-2


ஆசிரியை லட்சுமி, நான்காம் வகுப்பிற்குள் நுழைந்து பாடத்தை தொடங்கினார். ஆனாலும் எல்லாரும் பேசிக்கொண்டே இருந்தார்கள். “பிளீஸ்... கீப்... கொயட்... நாம இன்னைக்கு முக்கியமான கணக்கு போடப்போறோம். எல்லாரும் இங்கே கவனிக்கணும்.

 தெரியுதா...” என்று அறிவித்தார். ரவி மட்டும் தொடர்ந்து தொண தொணவென்று பேசிக்கொண்டிருந்தான்.
“யார் இன்னமும் பேசிக்கிட்டிருக்கிறது?” லட்சுமி கேட்டார். “இன்னமும் விதிகளை மதிக்காதவர்கள் இருக்காங்க போலருக்கு...” என இரைந்தார்.

 வகுப்பறை வழியே சென்ற தலைமை ஆசிரியர் காதில் விழுந்தது. “என்ன லட்சுமி மிஸ்... ஏதாவது பிராப்ளமா... உடனே தீர்த்து வெச்சுடலாம்... சொல்லுங்க” என்றார்.


வகுப்பே கப்சிப். “நோ பிராப்ளம் சார்... நான் பார்த்துக்கிறேன்...” - லட்சுமி பணிவோடு பதிலளிக்க அவர் போய்விடுகிறார். “எச்.எம். ஏன் அப்படி சொன்னாரு... ரவி? உனக்கு புரியுதா?” என்று ரவியைப் பார்த்துக் கேட்கிறார். குற்ற உணர்வோடு எழுந்து நிற்கிறான் ரவி. “நீங்க... ‘கொயட்’ன்னு சொன்ன பிறகும் நான் பேசிக்கிட்டிருந்தேன்...” லட்சுமி சொன்னார் “அந்த பயம் இருக்கட்டும்... உட்காரு..!”
ரவிக்கு வியர்த்தது.

அவரைக் கற்றலில் நுழைக்க விரும்பிய லட்சுமி, “சரி... 100 எனும் எண்ணை இரண்டால் வகுத்தால் விடை என்ன? ரவி... சொல்ல முடியுமா...?” என்றார். “தெரியும் மிஸ்... 50...”“குட்...” லட்சுமி புன்னகைத்தார். அந்த வகுப்பு முடியும் வரை ரவி பேசவே இல்லை.


காட்சி-3


ஆசிரியை லட்சுமி நான்காம் வகுப்பில் கணித பாடம் நடத்தத் தொடங்கினார். மாணவர்கள் சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர். “பேசுவதை நிறுத்துங்க... கொயட்... இன்று நாம் புது கணித பாடம் தொடங்குகிறோம்.

 எல்லாரும் கொஞ்சம் குளோசா... லிசன் பண்ணணும்...?” அதன்பின் வகுப்பே அமைதியானது. ரவி மட்டும் பேசுவதை நிறுத்தவே இல்லை.
லட்சுமி ஒரு துண்டுச் சீட்டை எடுத்தார். “வகுப்பில் பாடத்தைக் கவனிக்கத் தவறினான்” என்று எழுதி கையொப்பமிட்டார். “ரவி இதில் உன் பெயரை எழுது” என்றார். “இந்த ஸ்லிப் உன் மேசை மேலிருக்கும். வகுப்பு முடிந்தும் உன் பிரச்னை தொடர்ந்தால் தலைமை ஆசிரியரிடம் தரப்படும்” என வகுப்பே கேட்குமாறு அறிவித்தார்.

 வகுப்பின் முடிவில் ரவி அந்த காகிதத்தைக் கிழித்து குப்பைக் கூடையில் போட்டான். ஏனெனில் அவன் முழு வகுப்பும் பேசக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.


காட்சி-4


ஆசிரியை லட்சுமி நான்காம் வகுப்பில், கணிதப் பாடம் நடத்துகிறார். இன்று, மூன்றிலக்க வகுத்தல் பாடம். வகுப்பே கூச்சலோடு பேசிக் கொண்டிருந்தது.

 “அங்க என்ன பேச்சு... லிசன்..” என்கிறார். ஓரளவு அமைதி... மாணவர்களில் ரவி பேச்சை நிறுத்துவதாக இல்லை. அவர்கள் எதன் மீது ஆர்வத்தோடு இருக்கிறார்கள் என்பதைச் சற்று உற்றுக் கவனித்தார்.


“நேற்று யாரெல்லாம் கிரிக்கெட் மேட்சு டி.வில பார்த்தீங்க.. கை தூக்குங்க” என்றார். ரவி உற்சாகத்தோடு கையை உயர்த்தினான். “கிரேட்...” என்றார் லட்சுமி. “அதில் ரன்-ரேட் பற்றி யாருக்கெல்லாம் தெரியும்?” என்றார் லட்சுமி. “மிஸ் மிஸ்” என்று நாலைந்து பேர் போட்டி போட்டனர். “கவனிங்க... நம்ம இந்திய அணி ஸ்கோர்-110... இப்போ 11 ஓவர் முடிஞ்சிருக்கு. அப்போ ரன் ரேட் எவ்வளவு?” என்று கேட்டார் லட்சுமி.

 ரவிக்கு உற்சாகம் தாங்கவில்லை. “எப்படி மிஸ் கண்டுபிடிக்கறாங்க?” என்று கேட்டான். “இதுக்கு ரன்ரேட் கண்டுபிடிக்க 110-ஐ 11-ஆல் வகுக்கணும் ரொம்ப ஈ.சி? போர்டை பாருங்க...”
அவ்வளவுதான் ரவி கரும்பலகையை விட்டு தன் கவனத்தைத் திருப்பவே இல்லை. அவனே சொந்தமாக ரன்-ரேட் கண்டுபிடிக்கக் கற்றுக்கொள்ளத் துடித்தான். வகுப்பறையில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.சரி. மேற்கண்ட 4 காட்சிகளும் நமக்கு விளக்குவது என்ன? அணுகுமுறைகள் ஆசிரியரின் திறன்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதை இவை நிரூபிக்கின்றன.


காட்சி-1


(1) ரவிக்குத் தண்டனை வழங்கப்படுகிறது.

(2) தலைமை ஆசிரியர் அவருக்குப் பேரச்சத்தை ஏற்படுத்துகிறார்.

(3) குழந்தைகள் உரிமை மீறல், தகாத மிரட்டல், உடல் மற்றும் மனரீதியில் உளைச்சல் பலவற்றையும் ஆசிரியை ரவிக்கு ஏற்படுத்தி விடுகிறார்.

(4) தன்மீதும், வகுப்பின் மீதும் வெறுப்பு ஏற்பட்டதால் ரவி கற்றலில் ஈடுபட முடியவில்லை.

(5) அவர் பள்ளியை வெறுக்கத் தொடங்குகிறார்.

(6) மாணவர் நடத்தை மீது கவனம் செலுத்தாமல் மாணவர் மீதே கவனம் குவிகிறது.

காட்சி-2


(1) ரவிக்குத் தண்டனை எதுவும் வழங்கப்படவில்லைதான்.

(2)ஆனால், தலைமை ஆசிரியர் அச்சத்தை ஏற்படுத்துகிறார்.

(3)உடல் அளவு தண்டனை இல்லாமல் மனதளவு உளைச்சலை ஆசிரியை ஏற்படுத்துகிறார்.

(4)அதே அச்சம் வெறுப்பு ரவிக்கு ஏற்படுகிறது.

(5)ஒரு கேள்வி கேட்டு விடை பெற்று பாராட்டி ஆசிரியை புன்னகைப்பதன் மூலம் கற்றல் ஓரளவு மட்டுமே சாத்தியமாகிறது.

(6)இந்த காட்சியிலும் நடத்தையின் மீது கவனம் செலுத்தாமல் ரவி எனும் நபரின் மீதே கவனம் செலுத்தப்படுகிறது.


காட்சி-3


இது சற்று வேறுபட்ட அணுகுமுறை. சராசரியாகப் பலராலும் ஏற்கப்படும் நெறிப்படுத்துதல் இது. ஆபத்தற்ற விஞ்ஞானபூர்வமான அணுகுமுறை. தனது நடத்தையைத் தானே மாற்றிக்கொள்ளவும் சரி செய்துகொள்ளவும் இந்த ‘துண்டுச்சீட்டு’ முறை மாணவருக்கு உதவுகிறது. ஆனால் இறுதித் தீர்வு எது என்று பார்த்தீர்களா..? மாணவனின் தலைமை ஆசிரியர் அறையை நோக்கிய அச்சம்.


அதைத் தவிர்க்க அவன் தனது நடத்தையை மாற்றிக்கொள்ள வேண்டும். இது ஏனைய முந்தைய மூன்று அணுகுமுறை போலவே, ஆனால், வலி இல்லாமல் வேலை செய்கிறது. தனது பாடமான கணிதத்தைவிட மாணவன், தான் பேசிவிடக்கூடாது என்பதன் மீதே அதிக கவனம் செலுத்துவதால்...
கற்றலை இந்த முறை கடினமாக்கி விடுகிறது என்பதை கவனிக்கவும்.


காட்சி-4


என்ன ஒரு அற்புதம்! வகுப்பே உற்சாகமாகக் கற்றலில் ஈடுபடுகிறதே... இதற்கு என்ன காரணம்? இந்த காட்சியில், தன்னைவிட மாணவர்களின் விருப்பமான இலக்கு ஒன்று அதிக ஆர்வம் ஏற்படுத்துவதாக இருப்பதை ஆசிரியை கண்டறிந்துவிடுகிறார்.
 அதைக் கற்றலுக்குப் பயன்படுத்துகிறார். அவருக்கு தனது கணிதத்தின் மீதும், மாணவர்களின் ஆர்வத்தின் மீதும், பங்கேற்பின் மீதும் அதிக கவனமும் சிறப்பான அணுகுமுறை மூலம் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பாங்கும் கைவரப்பெற்றவராக ஆசிரியர் இருப்பதைப் பார்க்கிறோம்.


பாடம், பள்ளி, வகுப்பு என யாவற்றின் மீதும் குழந்தைகளுக்குக் காதல் வரச்செய்யும் இந்த அணுகுமுறை எவ்வளவு முக்கியம்? மாணவன் பேசுகிறான் என்பதைத் தனது தடையரணாக நினைக்காமல் அதையே சாதகமாக ஆக்கும் இந்தக் காட்சி நான்குதான் இன்றைய ‘ஆட்ட நாயகன்’ அல்லவா.
உற்சாகமான வகுப்பறைகளே வன்முறை இல்லா வகுப்பறைகள் என்பதை நிரூபிக்க வேறு என்ன சாட்சி வேண்டும்?..

குழந்தைகளின் கையெழுத்தை அழகாக்க 7 டிப்ஸ்!!

குழந்தைகளின் கையெழுத்தை அழகாக்க 7 டிப்ஸ்!!


"என் பையன் நல்லா படிக்கிறான்; படித்ததைக் கேட்டால் தவறில்லாமல் ஒப்பிக்கிறான், ஆனால் எக்ஸாமில் எழுதும்போது கையெழுத்து சரியில்லாததால் அதிக மதிப்பெண் எடுக்க முடியலை"னு புலம்பும் பெற்றோரா நீங்கள்?

.உங்கள் பிள்ளையின் கையெழுத்தை சிறுசிறு பயிற்சிகள் மூலம் நீங்களே மாற்றியமைக்க எளிமையான டிப்ஸ் இதோ.


குழந்தை எழுதுவது அழகாக இல்லை என்றவுடன் இரட்டைக் கோடு, நாலு கோடுகள் உள்ள நோட்டுகளை வாங்கி தந்து, அதிக நேரம் எழுத சொல்லி வற்புறுத்தாதீர்கள், இதனால் அவர்களுக்கு எழுதுவதன் மீது வெறுப்புதான் உண்டாகும்.

குழந்தையின் கையெழுத்தை அழகாக மாற்ற வேண்டுமானால், முதலில் fine Motor skill என்ற கைகளின் தசைகளை வலுப்படுத்தும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அடிக்கடி கை விரல்களுக்கு வேலைகள் கொடுக்க வேண்டும். இதனால் நரம்புகள் உறுதி அடைந்து கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

1. உங்கள் குழந்தைகளுக்கு பல வண்ணங்களில் கிடைக்கும் சைனா களிமண்ணை வாங்கி தந்து, பிசைந்து விளையாட வைப்பதும், சின்ன சின்ன உருவங்கள் செய்ய பழக்கப்படுத்தவும் செய்யுங்கள். இதனால் குழந்தையின் கைகள், தசைகள், கண்கள் என்று ஒரே நேரத்தில் பயிற்சி கிடைப்பதுடன், குழந்தையின் மனமும் ஒருங்கிணைந்து செயல்பட முடியும்.



2. உங்கள் வீட்டில் இருக்கும் மைதா, சோளமாவு, கோதுமை மாவு இப்படி ஏதேனும் ஒரு மாவினை ஒரு பெரிய அகலமான தட்டில் வைத்து உங்கள் பிள்ளையை ஏதேனும் எழுதியோ, வரைந்தோ பழகச் சொல்லலாம். இதனால் குழந்தையின் கைகளுக்கு நெகிழ்வுத்தன்மை கிடைக்கும்.



3. சில்லறை காசுகளை எண்ணி, அவற்றை சிறுதுளையுள்ள உண்டியலில் போடச்சொல்லலாம். மேலும், பல்லாங்குழி போன்ற நம் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாட செய்யலாம். இதனால் குழந்தைகளின் நரம்புகள் வலுப்படும். இதனால் பென்சிலை வழுக்காமல் அவர்களால் பிடித்து எழுத விரல்கள் பழக்கப்படும்.



4. குழந்தைகள் விளையாட வைத்து இருக்கும் இடுக்கியால் பொருட்களை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நகர்த்தச் சொல்லுங்கள். இதனால் கைகளுக்கு பிடிப்புத்தன்மை அதிகரிக்கும்.



5. பேப்பர்களைக் கிழித்து பந்துகள் போல் உருட்டி விளையாடினால் தடைபோடாமல் அனுமதியுங்கள். இதனால் மொத்த கை நரம்புகளும் வலுப்படும்..



6. உல்லன் நூலைக் கொடுத்து அதில் மணிகள் சிறு பாசிகள் போன்றவற்றை கோர்க்கச் சொல்லலாம். கெட்டியான அட்டையில் சிறுதுளைகள் போட்டு அதில்நூலை கோர்க்கச் சொல்லி பழக்கப்படுத்தலாம்.



7. உங்கள் குழந்தைக்கு பிடித்த நிறத்தில் க்ரேயான்ஸ் அல்லது கலர் பென்சில்களைக் கொடுத்து முட்டைக்கூடு, காகிதக் கோப்பைகள் போன்றவற்றில் படம் வரைந்து வண்ணம் தீட்டச் சொல்லுங்கள்.



இப்படிச் செய்வதன்மூலம் அவர்களால் எழுத்துக்களை சீராக எழுத முடியும்.இதுபோன்ற பயிற்சிகளைத் தொடர்ந்து செய்துவந்தால் குழந்தையின் கையெழுத்து சரியில்லை என்று மதிப்பெண்கள் குறையாது!!

SC/ST - அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு வருமானச் சான்று தொகை கணக்கிடும் போது DA மற்றும் HRA கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது என்பதற்கான செயல்முறை கடிதம்