THE KING MAKERS

THE KING MAKERS
THE KING MAKERS

27 Dec 2016

இணைய வேகம்... இந்தியா, நேபாளம், பங்களாதேஷ்... யாருக்கு சாதகம்?

இணைய வேகம்... இந்தியா, நேபாளம், பங்களாதேஷ்... யாருக்கு சாதகம்?
http://www.testftirupurnorth.blogspot.com

இந்தியாவில் ஒரு பக்கம் கேஷ்லெஸ் பொருளாதாரம்; பரிவர்த்தனைகள் அதிகரிக்கும் என கூறும் நேரத்தில் இணைய வேகம் பற்றி  வெளியாகியுள்ள புள்ளிவிவரங்கள் "நிஜமாவா” என அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றன. டிஜிட்டல் இந்தியா என்று மார்தட்டிக் கொள்ளும் நாம் இணைய வேகத்தில் நேபால், பங்களாதேஷ் ஆகிய நாடுகளைவிடவும் பின் தங்கியுள்ளோம். இணைய பாதுகாப்பு, இணைய பயன்பாட்டு வேகம் ஆகியவற்றில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது. இது எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்?
இணைய பாதுகாப்பு:
ஹேக்கர்களின் கைவரிசை உலக அளவில் அதிகரித்து வருகிறது. இணைய பாதுகாப்பு என்பது உலக அளவில் சவாலான விஷயம்தான். சமீபத்தில் இணைய பாதுகாப்பு குறைவு காரணமாக ஹேக்கர்கள் இந்தியாவில் உள்ள 32 லட்சம் ஏ.டி.எம் கார்டுகளின் பின் நம்பர்களை திருடியது குறிப்பிடத்தக்கது. இதே போல அரசு இணையதளங்கள், முக்கிய பிரமுகர்களின் மின்னஞ்சல்கள் முடக்கப்படுவதும் வழக்கமாகியுள்ளது. இணைய தாக்குதலுக்கு உள்ளாகும் உலகின் டாப் 5 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.

ஒட்டு மொத்தமாக ஒப்பிட்டால் உலக அளவில் இங்கிலாந்தில் 25.6 சதவிகித தாக்குதல்களும், சீனாலில் 20.7 சதவிகிதமும், அமெரிக்காவில் 17.04 சதவிகிதமும் இணைய தாக்குதல் நடைபெறுகிறது. இந்தியாவில் 6.95 சதவிகித தாக்குதல்கள் நடபெறுகின்றன.
இணைய வேகம்:
இந்தியாவில் என்னதான்  4ஜி தொழில்நுட்பம் வந்துவிட்டாலும் இன்னும் பல கிராமங்கள் இணையத்தால் இணைக்கப்படாத நிலையில் தான் இருக்கிறது. அடிப்படை இணைய வசதிகளுக்கான முயற்சி தொடர்ந்து இருந்தாலும் மக்களை இணையம் மூலம் இணைக்க போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது குறை தான்.

இணைய வேகத்தில் இந்தியா 96-வது இடம் பிடித்துள்ளது. இந்தியாவை விட பொருளாதார ரீதியாக பின் தங்கிய நேபால் மற்றும் பங்களாதேஷ் முறையே 90 மற்றும் 91-வது இடத்தைப் பிடித்துள்ளன.
சராசரி இணைய வேகம்:
சராசரி இணைய வேகத்தில் சவுத் கொரியா முதலிடத்தில் உள்ளது. அதன் சராசரி இணைய வேகம் நொடிக்கு 26.3 மெகாபைட்டாக உள்ளது. ஹாங்காங் 2-வது இடத்திலும், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் முறையே 6 மற்றும் 7-வது இடத்தில் உள்ளன. இந்தியாவில் சராசரியாக நொடிக்கு 4.1 மெகாபைட் இணையத்தையே மக்கள் பெறுகின்றனர்.
பாதிப்பை ஏற்படுத்துமா இணைய வேக குறைபாடு?
இன்னும் இந்தியாவில் வங்கிகள் முழுமையாக இணையத்தால் இணைக்கப்படவில்லை. இணைய சேவை என்பதும் நாடு முழுவதும் ஒரே அளவில் இன்னமும் போய்ச் சேரவில்லை. இந்த காரணங்கள் வங்கி பரிவர்த்தனை, கல்வி, சேவைகள் போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியா போன்ற பொருளாதார ரீதியாக மேம்பட்ட நாடு இணைய வேகம், பாதுகாப்பில் பின் தங்கியிருப்பது கவலையளிக்கும் விஷயம் தான்.
கேஷ்லெஸ் பொருளாதாரம் பற்றி பேசுவதற்கு முன்னால் அனைத்து வங்கிகளும் இணையத்தின் மூலம் இணைக்கப்படுவதும், முறையான இணையப்பாதுகாப்பு மேம்படுத்தப்படுவதும் அவசியமாகியுள்ளது. டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்கள் மூலம் நல்ல முடிவுகள் கிடைத்தால் மட்டுமே உலக அரங்கில் இந்தியா டிஜிட்டல் புரட்சியில் கால்பதிக்க முடியும்.

25 Dec 2016

நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் இனி 5-ம் வகுப்பு வரையில் மட்டுமே கட்டாய தேர்ச்சி முறை அமலில் இருக்கும்

நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் இனி 5-ம் வகுப்பு வரையில் மட்டுமே கட்டாய தேர்ச்சி முறை அமலில் இருக்கும்.

5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் கட்டாய தேர்ச்சி முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது. மாற்றம் செய்வதற்கான மத்திய
மனிதவள மேம்பாட்டுத் துறையின் பரிந்துரைக்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. கட்டாய தேர்ச்சி முறையால் கல்வி தரம் குறைகிறது என மனிவதவள மேம்பாட்டுத் துறை தெரிவித்து உள்ளது. தற்போது 8-ம் வகுப்பு வரையில் கட்டாய தேர்ச்சி முறையானது நடைமுறையில் உள்ளது.

தேசிய கல்வி கொள்கை தொடர்பாக ஆலோசிக்க மத்திய கல்வி ஆலோசனை வாரியம் (சி.ஏ.பி.இ) கடந்த வருடம் டெல்லியில் கூடியது. அப்போதைய மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிருதி இரானி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது 8–வது வகுப்பு வரை நடைமுறையில் உள்ள கட்டாய தேர்ச்சி முறை வேண்டாம் என்று மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

அப்போது ஸ்மிருதி இரானி பேசுகையில், 8-ம் வகுப்பு வரையில் மாணவர்களை பெயில் ஆக்குவதில்லை என்ற கொள்கையை ரத்து செய்வதற்கு அனைவரும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தனர் என்று தெரிவித்து இருந்தார். 8-ம் வகுப்பு வரையில் மாணவர்கள் பெயில் ஆக்க கூடாது என்ற திட்டம் முந்தைய காங்கிரஸ் தலையிலான அரசினால் கொண்டுவரப்பட்டது.

20 Dec 2016

அரசு பள்ளி மாணவர் சேர்க்கை: தமிழகம் முதலிடம்: அமைச்சர் கே.பாண்டியராஜன் பெருமிதம்


அரசு பள்ளி மாணவர் சேர்க்கை விகிதத்தில் நாட்டிலேயே தமிழகம் முன்னிலை பெற்றுள்ளது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறினார்.சென்னை முகப்பேர் கிழக்கில் உள்ள அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் 10,000 சதுர அடியில் ரூ.1.5 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பாண்டியராஜன் ஆகியோர் திங்கள்கிழமை திறந்து வைத்தனர்.

பின்னர் விழாவில் அமைச்சர் கே.பாண்டியராஜன் பேசியது: தற்போதைய சூழலில் பள்ளிக் கல்வித் துறையில் மாணவர் சேர்க்கை நாடு முழுவதும் 5 சதவீதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் தனியார் பள்ளி மாணவர் சேர்க்கை 8 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மட்டுமே மாணவர் சேர்க்கை 1 சதவீதம் அதிகரித்துள்ளது.தமிழகத்தைப் பொறுத்தவரை 100 மாணவர்களில் 99 பேர் 6 -ஆம் வகுப்பையும், 95 சதவீதம் பேர் 10 -ஆம் வகுப்பையும், 80 சதவீதம் பேர் பிளஸ் 2 வகுப்பையும் நிறைவு செய்கின்றனர்.அமெரிக்காவில் கூட கல்லூரி படிப்பை 100 -க்கு 30 சதவீதம் பேர் மட்டுமே நிறைவு செய்யும் நிலையில், தமிழகத்தில் ஆண்டுதோறும் 45 சதவீதம் பேர் கல்லூரி படிப்பை நிறைவு செய்கின்றனர்.

அடுத்த 5 ஆண்டுகளில் இதை 50 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பள்ளிக் கல்வியில் மதிப்பெண்ணுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் மாணவர்களின் கற்கும் திறனை வெளிப்படுத்தச் செய்வது, படிப்பு தவிர தனித்திறனை வளர்க்கும் செயல்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்துவது உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பிளஸ் 2 வகுப்புக்கு புதிய பாடத்திட்டத்தைஅறிமுகப்படுத்துவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன என்றார் அவர். விழாவில் அமைச்சர் பெஞ்சமின், அம்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலெக்ஸாண்டர், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சத்துணவு மையங்கள் தூய்மையாக செயல்படுவது குறித்த ஆணை



விலையில்லா பாடப்புத்தகம் பெற


19 Dec 2016

புத்திசாலி முதலாளியும் வேலைக்காரனும் | நகைசுவை கதைகள்


ஒரு பெரிய தொழிற்சாலை, கிட்ட தட்ட 1000 பேருக்கு மேல வேலை பார்க்கும் தொழிற்சாலை, எல்லாம் நல்லபடியாகத்தான் போய்கொண்டிருந்தது....!

ஒரு நாள் அந்த முதலாளி தொழிற்சாலைகுள் வலம் வந்தாராம், அப்போது ஒருத்தன் “மல்லாக்க படுத்து விட்டத்த பாக்குறது என்ன சுகம் ” அப்படின்னு படுத்து கிடந்தான்.


அவருக்கு வந்தது பாரு கோபம்… இருந்தாலும் அடக்கிகிட்டு, அவனை எழுப்பினார்,  “தம்பி நீ மாதம் எவ்வளவு சம்பளம் வாங்குற”? அப்படின்னு கேட்டாரு… அதுக்கு அவன் ஒன்னும் புரியாம முழிச்சிக்கிட்டு “மூவாயிரம் ருபாய் சார் “ அப்படின்னான்.

உடனே அவரு பைக்குள இருந்து பண முடிப்பினை எடுத்து ஒரு பத்தாயிரம் ருபாய எடுத்து தூக்கி எரிஞ்சாறு. “இதுல உன்னோட மூணு மாச சம்பளத்துக்கு மேலே ஒரு ஆயிரம் ருபாய் அதிகமா இருக்கு, நான் இங்க சும்மா படுத்து கிட்டு இருக்குரவனுக்கு சம்பளம் கொடுக்கறதுக்கு இந்த தொழிற்சாலையை நடத்தல..” அப்படின்னு சொன்னாரு.

அவன் ஒரு நிமிஷம் அவர குறு குருன்னு பார்த்தான். அப்புறம் அந்த பணத்த வாங்கிகிட்டு வேகமா வெளிய போய்ட்டான்எல்லாரும் வாயடைச்சி போய் நின்னாங்க.

அப்புறம் முதலாளி எல்லாரையும் கர்வமா பார்த்து… “இனிமே எல்லாம் அப்படி தான் ” (தமிழ் பட டயலாக்) அப்படின்னாரு. அப்புறமா கணக்குபிள்ளய கூப்பிட்டு “யார்யா அவன் ??” அப்படின்னு கேட்டாரு…

அதுக்கு அந்த கணக்கு பிள்ளை சொன்னான்…! ” டீ கொண்டு வந்த பையன் மொதலாளி .. “

இது எப்படி இருக்கு…! டீ கொடுக்க வந்தவனுக்கு பத்தாயிரம் குடுத்த முதலாளிய நெனைச்சா எப்படி தெரியுமா இருக்கு??? 

18 Dec 2016

Year planner 2017

அனைத்து பள்ளி தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு...

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷?

அரசாணை எண் 309 நாள் 16.12.2016 இன்படி அகவிலைப்படி 125% to 132%ஆக 1.7.2016 முதல் உயர்த்தப்பட்டு உள்ளது.

உயர்த்தப்பட்ட அகவிலைப்படி நிலுவை கோரும் பட்டியல் தயார் செய்து உதவி தொடக்கக் கல்வி அலுவகத்தில் 20.12.2016 மாலைக்குள் வழங்கவும்.

நிலுவைப்பட்டியலில்
1. July / October ஆண்டு ஊதிய உயர்வு நாள் குறிப்பிடவும்.

2. 1.7.2016 க்குப் பின் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு தேதி மற்றும் நாட்கள் குறிப்பிட்டு நிலுவை பட்டியலில் சேர்க்கவும்

3. 1.7.2016 க்குப்பின் தேர்வுநிலை சிறப்புநிலை பெற்றிருப்பின் எந்த தேதி முதல் எனக் குறிப்பிட்டு பட்டியலில் சேர்க்கவும் (ஆணையின் நகல் இணைக்கவும்)

4.1.7.2016 க்குப்பின் ஊக்க ஊதிய உயர்வுகள் பெற்றிருப்பின் எந்த தேதி முதல் எனக் குறிப்பிட்டு பட்டியலில் சேர்க்கவும் (ஆணையின் நகல் இணைக்கவும்)

5. 1.7.2016 க்குப்பின் அரைச்சம்பள விடுப்பு (UEL ON PA)எடுத்திருப்பின் எந்த தேதி முதல் எந்த தேதி வரை எனக் குறிப்பிட்டு பட்டியலில் சேர்க்கவும் (ஆணையின் நகல் இணைக்கவும்)

6.அனைத்து ஆசிரியர்களின் TPF / CPS எண் குறிப்பிடவும்

7. CPS திட்டத்தில் உள்ள ஆசியர்கள் மொத்த நிலுவையில் 10% CPS பங்களிப்பு தொகை கழித்து நிலுவை கோரவும்.

🌷SAN🌷

நாடு முழுவதும் ஒரே விதமான ஓட்டுனர் உரிமம் விரைவில் அறிமுகம்.

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷



நாடு முழுவதும் உள்ள, ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், புதிய மென்பொருளை பயன்படுத்தி, இணையதளம் வாயிலாக, ஒரே மாதிரியான ஓட்டுனர் உரிமம் வழங்கும் முயற்சியில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. 'தமிழகத்தில் கூடுதலாக, 12 ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், மேம்படுத்தப்பட்ட புதிய மென்பொருள், இந்த மாதத்தில் செயல்பாட்டிற்கு வரும்' என, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.



இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: தமிழகம் உள்ளிட்ட, 14 மாநிலங்களில் உள்ள, 175 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், 'வாகன், சாரதி' என்ற, மென்பொருள்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வாகன் மென்பொருள், வாகனங்களை பதிவு செய்யவும், 'சாரதி'யானது, ஓட்டுனர்களின் பதிவுகளை கையாளவும் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வழங்கி வருகிறது.



தேசிய தகவலியல் மையமான, என்.ஐ.சி., பொறியாளர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு, மென்பொருள் செயல்பாடு குறித்த பயிற்சி அளித்தனர். ஆனாலும், சோதனை முயற்சியாக, தமிழகத்தில், 12 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் மட்டுமே, இந்த மென்பொருள்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
இம்மாதத்தில் கூடுதலாக, 12 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், இந்த மென்பொருள்கள், புதிய அம்சங்களுடன் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். 'சாரதி, 4.0 வெர்ஷன்' மூலம், ஓட்டுனர் உரிமம் வழங்குதல், புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளும், 'வாகன்' மென்பொருள் மூலம், வாகன பதிவு உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படும். இவற்றில் உள்ள தகவல்கள், டில்லியில் உள்ள, என்.ஐ.சி., சர்வரில் பாதுகாக்கப்படும். இது, ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் உள்ள, கம்ப்யூட்டர் தகவல்களை, இணையதளம் வாயிலாக இணைக்கும். இதனால், ஒரு மாநிலத்தின் வாகனம் மற்றும் வாகன ஓட்டியின் தகவல்களை, மற்ற மாநிலங்களிலும் சரிபார்க்க முடியும். போலி வாகனம், போலி ஓட்டுனர் உரிமத்தை எளிதாக கண்டுபிடிக்க முடியும்.




இதற்கு வசதியாக, நாடு முழுவதும் உள்ள ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், ஒரே மாதிரியான ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இம்மாதம்... : சென்னை தென்மேற்கு, செங்குன்றம், கிருஷ்ணகிரி, நாமக்கல் வடக்கு, விழுப்புரம், கரூர், புதுக்கோட்டை, மதுரை வடக்கு, சிவகங்கை, விருதுநகர், நாகர்கோவில், மயிலாடுதுறை ஆகிய, 12 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், இம்மாதம் வாகன், சாரதியின், 4.0 வெர்ஷனின் செயல்பாடு அமலுக்கு வருகிறது.


        

16 Dec 2016

English for children

TamilNadu Districts

Tamil Handwriting practice book

வி.ஏ.ஓ., பதவிக்கு கவுன்சிலிங் அறிவிப்பு


'கிராம நிர்வாக அதிகாரி என்ற, வி.ஏ.ஓ., பதவிக்கான, பணி ஒதுக்கீட்டு கவுன்சிலிங், வரும், 19 முதல் நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயகுமார் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பு:


வி.ஏ.ஓ., பதவிகளில் நேரடி நியமனம் செய்ய, பிப்., 28ல், எழுத்துத்தேர்வு நடந்தது. இதன் முடிவுகள், ஜூலை, 1ல், வெளியாகின. பின், தேர்வு பெற்றவருக்கு, ஆக., 1 முதல், 8 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. ரேங்க் பட்டியலின்படி, தேர்வான விண்ணப்பதாரர்களுக்கு, வரும், 19 முதல், 23 வரை, கலந்தாய்வு நடக்கிறது. இதற்கான கூடுதல் தகவல்களை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

4 Dec 2016

வங்கி கணக்கு துவங்க ஆதார் எண் கட்டாயமல்ல : நிதி அமைச்சகம்!!!

     

      வங்கி கணக்கு துவங்குவதற்கு ஆதார் எண் கட்டாயம் இல்லை என மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ்குமார் கேங்வார் தெரிவித்துள்ளார்.

      பார்லி.,யில் கேள்வி ஒன்றிற்கு எழுத்துபூர்வமாக பதிலளித்த சந்தோஷ்குமார், வங்கி கணக்கு துவங்குவதற்கோ அல்லது பணபரிவர்த்தனைக்கோ ஆதார் எண் கட்டாயமல்ல. மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 6 ஆவணங்களில் ஆதார் எண்ணும் ஒன்று. எனவே வங்கி நடவடிக்கைகளை பெறவும் ஆதார் எண் கட்டாயம் இல்லை என தெரிவித்துள்ளார்.

சமச்சீர் கல்வி; உயர்நீதிமன்றம் அரசுக்கு நோட்டீசு!!!


தமிழகத்தில் நடைமுறையில் உள்ள சமச்சீர் கல்வியை மேம்படுத்தி, தரமான கல்வி வழங்க நடவடிக்கை கோரியதை, தானாக முன்வந்து பொதுநல வழக்காக விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை (நீதித்துறை) இளங்கோவன் தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழகத்தில் ஒன்று முதல் 10 ம் வகுப்புவரை நடைமுறையில் உள்ள சமச்சீர் கல்வியை ஒழுங்குபடுத்தி, மேம்படுத்தி, தரமான கல்வி வழங்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு பதிவாளர் மனு செய்திருந்தார். தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எஸ்.நாகமுத்து கொண்ட அமர்வு தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது.
நீதிபதிகள்: தமிழக கல்வித்துறை முதன்மைச் செயலர், பள்ளிக் கல்வி மற்றும் துவக்கக் கல்வி இயக்குனர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
இவ்விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு உதவ நடுநிலை அறிவுரையாளராக மூத்த வழக்கறிஞர் ஐசக்மோகன்லாலை நியமிக்கிறோம். விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனர்

2017 ல் வார இறுதி நாட்களுடன் மகிழ்விக்க வரும் விடுமுறைகள்

.

பிறக்கவிருக்கும் 2017 ம் ஆண்டில் அனைத்து விடுமுறை நாட்களும் வார இறுதி நாட்களை ஒட்டியே வருவது பலரையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
🌷  மொத்தம் 14 விடுமறை நாட்கள் வார இறுதி நாட்களுடன் சேர்ந்து வருகிறது.


அதிலும் ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை வருவது கூடுதல் 'ஜாக்பாட்'
செய்தி.


🌷ஜனவரி 🌷

26 ம் தேதி குடியரசு தினம் வியாழக்கிழமை வருகிறது. சனி, ஞாயிறு வார விடுமுறை என்பதால் வெளியூர்களில் தங்கி வேலை செய்வோர் வெள்ளிக்கிழமையும் விடுமுறை எடுக்க வாய்ப்புள்ளது.

பிப்ரவரி


24 ம் தேதி வெள்ளிகிழமை மகாசிவராத்திரி.


🌷மார்ச் 🌷


11, 12 ஆகிய நாட்கள் சனி,ஞாயிறு

இதைத் தொடர்ந்து 13 ம் தேதி திங்கள்கிழமை ஹோலி பண்டிகை விடுமுறை.

25, 26 சனி,ஞாயிறு.


28 ம் தேதி கூடி பட்வா (வடமாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகை) விடுமுறை

🌷ஏப்ரல் 🌷


1, 2 சனி,ஞாயிறு, இதைத் தொடர்ந்து 4ம் தேதி ராம நவமி விடுமுறை.


13 ம் தேதி வைஷாகி பண்டிகை,


 14ம் தேதி அம்பேத்கார் ஜெயந்தி மற்றும் புனிதவெள்ளி.


🌷ஏப்ரல் 🌷


14ம் தேதி தென்னிந்தியாவில் தமிழ் புத்தாண்டு தினமாகவும், சித்திரை விஷூவாகவும் கொண்டாடப்படுகிறது.


 இதைத் தொடர்ந்து 15, 16 ஆகிய நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறை.

16ம் தேதி ஈஸ்டர் தினம் விடுமுறையாகவே கருதப்படுகிறது.


29, 30 சனி, ஞாயிறு விடுமுறை. இதனைத் தொடர்ந்து மே 1 ம் தேதி விடுமுறை.


🌷ஜூன் 🌷


24, 25 சனி, ஞாயிறு. இதைத் தொடர்ந்து 26ம் தேதி திங்கள்கிழமை ரம்ஜான்.


🌷ஆகஸ்ட் 🌷


12,13 சனி,ஞாயிறு. 14ம் தேதி கிருஷ்ணஜெயந்தி.

15ம் தேதி சுதந்திர தினம்.

 மீண்டும் ஆகஸ்ட் 17 ம் தேதி வியாழக்கிழமை பார்சி புத்தாண்டு.

19 மற்றும் 20 சனி,ஞாயிறு விடுமறை.

இதனால் இடையில் வரும் 16 மற்றும் 18 ஆகிய தேதிகள் விடுமுறை எடுத்தால் தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.



🌷ஆகஸ்ட் 🌷



25 ம் தேதி வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தி.


இதைத் தொடர்ந்து 26, 17 சனி,ஞாயிறு விடுமுறை.


🌷அக்டோபர் 🌷

 செப்டம்பர் 30, அக்டோபர் 1 சனி,ஞாயிறு.


தொடர்ந்து அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி விடுமுறை.

14, 15 சனி,ஞாயிறு. அக்டோபர் 16 திங்கள் கிழமை தசரா.

17 ம் தேதி நரக சதுர்த்தி.

18 ம் தேதி புதன்கிழமை தீபாவளி.

19 ம் தேதி பலிபிரதிபதா பண்டிகை.

20 ம் தேதி பாய்துஜ் பண்டிகை.

தொடர்ந்து 21 மற்றும் 22 சனி,ஞாயிறு விடுமுறை.

🌷டிசம்பர் 🌷

டிசம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை மிலாடி நபி.


 2,3 சனி,ஞாயிறு விடுமுறை.

டிசம்பர் 23,24 சனி,ஞாயிறு.

 டிசம்பர் 25 திங்கள்கிழமை கிறிஸ்துமஸ் விடுமுறை.

இந்திய மாணவிக்கு அமைதி விருது





 

துபாய்: சர்வதேச அமைதி விருது, வெளிநாட்டு வாழ் இந்திய மாணவிக்கு வழங்கப்பட்டது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் வசிப்பவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவி கேஹ்காசன் பாசு. இவர் சுற்றுச்சூழல் ஆர்வலர். 'கிரீன் ஹோப்' என்ற பசுமை அமைப்பை நிறுவி, இயற்கை பாதுகாப்பு தொடர்பான பல்வேறு பணிகளை செயல்படுத்தி வருகிறார். இதில் 1000 தன்னார்வலர்கள் பணிபுரிகின்றனர். 10 நாடுகளில் இவரது அமைப்பு செயல்படுகிறது. இளம் வயதிலேயே இவர் ஆற்றிய பணிகளை பாராட்டி, நெதர்லாந்தின் ஹேக் நகரில் நடந்த விழாவில் 2016ம் ஆண்டுக்கான சர்வதேச குழந்தைகள் அமைதி விருது நேற்று இவருக்கு வழங்கப்பட்டது. இதனை வங்கதேசத்தை சேர்ந்த நோபல் அமைதி பரிசு பெற்ற முகமது யூனிஸ் வழங்கினார்.

பாசுவின் பெற்றோர் கோல்கட்டாவைச் சேர்ந்தவர்கள். இவர் 12 வயதிலேயே 'கிரீன் ஹோப்' அமைப்பை தொடங்கினார். அடுத்த 4 ஆண்டுகளில் கொலம்பியா, பிரான்ஸ், மெக்சிகோ, நேபாளம், ஓமன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் 5000 மரங்களை நட்டுள்ளார். இது தவிர யு.ஏ.இ., யில் பல்வேறு இயற்கை தொடர்பான பணிகளை செய்துள்ளார்.

சர்வதேச குழந்தைகள் அமைதி விருது 2005ம் ஆண்டு, நெதர்லாந்தில் தொடங்கப்பட்டது. உலகளவில் குழந்தைகளின் அரிய பணிகளை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது. விருதுடன் 72 லட்ச ரூபாய் வழங்கப்படுகிறது. முதல் விருது எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்திய தென் ஆப்ரிக்க மாணவர் நிகோசி ஜான்சனுக்கு வழங்கப்பட்டது. 2013ல் பாக்., சிறுமி மலாலாவுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதுக்கும், நோபல் அமைதி பரிசுக்கும் தொடர்பில்லை.

1 Dec 2016

4th week cce worksheets

பொதுக்குழு& செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்
திருப்பூர் மாவட்டம் செயற்குழு மற்றும் பொதுக்குழு

இடம் : மா.ந.நி.பள்ளி, தேவங்கபுரம்.

நாள் : 01.12.2016


பொருள் :

1) வரவு, செலவு
2) நிலுவைகள்
3) உறுப்பினர் சேர்க்கை
4) கோரிக்கை விளக்க மாநாடு
5) பிற...

போன்றவைகளை முன்வைத்து  தற்போது  நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது