THE KING MAKERS

THE KING MAKERS
THE KING MAKERS

30 Nov 2015

ஆசிரியர்கள் மாணவர்களின் நண்பன்...!

புத்தகத்தில் உள்ளதை சொல்லி கொடுப்பதும், அதை மாணவர்கள் மனப்பாடம் செய்வது மட்டும் கல்வி இல்லை. மாணவர்களின் திறமையை அறிந்தும் விருப்பத்தை தெரிந்தும் வழிநடத்தனும். மேலும் கல்வி கற்கும் முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி எடுக்கபட்டது நண்பன் படம். அந்த கருத்து செயல் வடிவம் எடுக்க தொடங்கியுள்ளது.

திருச்சி மண்டல அளவிலான ஆசிரியர்களுக்கான குழந்தை மையம் என்று சொல்லப்படும் குழந்தை நேயப்பள்ளி செயலாக்க கருத்தரங்கம் தஞ்சாவூரில் நடைபெற்றது. 7 மாவட்டங்களைச் சேர்ந்த தனிதிறன்மிக்க ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர். ஐ.நா.வை சேர்ந்த குழந்தைகள் அமைப்பான யுனிசிப்பும், சமூக கல்வி நிறுவனமும் இணைந்து இதற்கான ஏற்பாட்டை செய்திருந்தது.

ஆசிரியர்களின் மண்டல அளவிலான ஒருங்கினைப்பாளர் மணிமாறனிடம் பேசினோம், ''இன்றைக்கு குழந்தைகளுக்கான கல்வி முறையில் மாற்றம் என்பது அவசியமானதாக மாறியுள்ளது. ஏற்கனவே செயல் வழியில் கல்வி கற்றல் நடைமுறையில் இருந்தாலும், இன்னும் மேம்படுத்தி குழந்தைகளின் நலனை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்பட இருப்பதுதான் குழந்தை நேய பள்ளிகளின் நோக்கம். குழந்தைகளை மையப்படுத்தியே எல்லா செயல்பாடுகளும் இருக்கும். அதன் முதற்கட்டமாகத்தான் ஆசிரியர்களுக்கான கருத்தரங்கத்தை நடத்தி வருகிறோம். அரசுடன் இணைந்து அரசு பள்ளிகளில் இந்த கருத்தை நடைமுறைப்படுத்த இருக்கிறோம். வரும் கல்வி ஆண்டான 2016 முதல் இதன் செயல்பாடுகள் ஆரம்பிக்கும்.

கற்றல், கற்பித்தல் எல்லாமே குழந்தையை மையப்படுத்திதான் இருக்க வேண்டும். ஆசிரியர்களை மையப்படுத்தி இருக்கக் கூடாது. ஜனநாயக பங்கேற்பு இருக்க வேண்டும். ஒரு பள்ளி ஏழை, பணக்கார மாணவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லா தரப்பு குழந்தைகளுக்குமானதாக இருக்க வேண்டும். இந்த மூன்று அம்சங்களும் சேர்ந்ததுதான் குழந்தை நேயப்பள்ளியின் நோக்கம்.
இதில், குழந்தைகளுக்கான கற்றல் சூழலும், பள்ளியின் சூழலும் சரியாக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு ஏற்றவர்களாக மாற வேண்டும். பள்ளி கட்டமைப்பு சரியானதாக இருக்கவேண்டும். குழந்தைகளிடம் பள்ளிக்கு வரும் ஆர்வத்தை தூண்ட வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்கள் என்ற பாகுபாடு இல்லமல் நண்பர்களாக பழக வேண்டும். அவர்களுடைய தேவைகள் மற்றும் விருப்பம் அறிந்து சமூகத்துக்கு நல்ல குடிமகனாக மாணவர்களை மாற்ற வேண்டும். இதற்கு ஆசிரியர்கள் மாணவர்களிடையே அதிகம் கலந்துரையாட வேண்டும். இப்போது நடந்து வரும் ஆசிரியர்கள் செயலாக்க கருத்தரங்கம் மூலம் இது அடுத்த கட்டதுக்கு நகரும்'' என்றார்.

தரமான கல்வி தேவையான ஒன்றுதான்...

கே.குணசீலன்

No comments:

Post a Comment