THE KING MAKERS

THE KING MAKERS
THE KING MAKERS

16 Mar 2016

இந்திய மாணவர்களுக்கு டிரம்ப் திடீர் ஆதரவு

வாஷிங்டன்: இந்திய தொழிலாளர்களுக்கு எதிராக பேசி, பரபரப்பை ஏற்படுத்திய, டொனால்டு டிரம்ப், தற்போது, இந்திய மாணவர்கள், அமெரிக்காவில் தங்கி இருக்க ஆதரவு தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவில், வரும் நவம்பரில், அதிபர் தேர்தல் நடக்கிறது. அதில், போட்டியிடும் வேட்பாளரை முடிவு செய்வதற்காக, 'பிரைமரி' தேர்தல்கள் நடக்கின்றன. இதில், குடியரசு கட்சியில் 
வேட்பாளர் போட்டியில், ரியல் எஸ்டேட் அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னணியில் உள்ளார். எனினும், பல்வேறு பிரச்னைகளில், சர்சசைக்குரிய வகையில் அவர் பேசி வருகிறார். 

'அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றும், இந்தியர்களால், அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோவதால், அவர்களை வெளியேற்ற வேண்டும்' என பேசினார். 

இந்நிலையில், 'டிவி' சேனல் ஒன்றுக்கு, அவர் பேட்டிஅளித்ததாவது: ஹார்வர்டு 
உள்ளிட்ட பல்கலைக்கழங்களில், படிப்பதற்காக, ஏராளமான இந்தியர்கள் வருகின்றனர். 
அந்த மாணவர்கள் புத்திசாலிகளாக உள்ளனர். அவர்களில் பலர், இங்கேயே தங்கி 
விடுகின்றனர். அதுபோன்றவர்களை அமெரிக்காவில் இருந்து வெளியேற்ற வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு டிரம்ப் கூறினார். 

டிரம்ப், சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவது வெறுப்பை ஏற்படுத்தும். அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பை, மக்கள் ஆதரிக்க மாட்டர்.
பராக் ஒபாமா, அமெரிக்க அதிபர்

No comments:

Post a Comment