THE KING MAKERS

THE KING MAKERS
THE KING MAKERS

13 Dec 2015

தென் மாவட்டங்களில்கன மழை பெய்யும்

காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென் கடலோர மாவட்டங்களில், கன மழை பெய்யலாம்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:குமரி கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த, காற்று மேலடுக்கு சுழற்சி, மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு அருகே நகர்ந்துள்ளது. இதனால், ராமநாதபுரம், துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், சில இடங்களில் கன மழை பெய்யும்.
வட உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில், ஒருசில இடங்களில், மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை, அடுத்த, 48 மணி நேரத்துக்கு, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை அதிகபட்சமாக, 31; குறைந்தபட்சம், 24 டிகிரி செல்சியசாக இருக்கும்.
பரவலாக, அடுத்த மூன்று நாட்களுக்கு, கனமழைக்கு வாய்ப்பு இல்லை. நேற்று காலை, 8:30 மணி வரை, அதிகபட்சமாக, துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி - 4; கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம், திருவாரூர் மாவட்டம், திருத்துறைபூண்டி - 3 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment