லூதியானா : குழந்தைகளின் எதிர்கால நலனை கருதி, வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் பள்ளிக்கு, கிராம மக்களே வாடகை செலுத்தி வரும் விவகாரம் அனைவரையும் வியப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவிலிருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ளது பதேபூர் அவானா கிராமம். இந்த கிராமத்தில் அரசு துவக்க பள்ளி செயல்பட்டு வந்தது. பள்ளி கட்டடத்தில் நிலை சரியில்லாததால், மாவட்ட நிர்வாகம், கடந்த செப்டம்பரில் அந்த பள்ளி கட்டிடத்தை இடித்துத் தள்ளியது.
புதிய கட்டிடம் கட்ட மாநில அரசு இன்னும் நிதி ஒதுக்காததால், அப்பகுதி குழந்தைகள் கல்வி கற்க மிகவும் சிரமப்பட்டனர். தங்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்றெண்ணிய அக்கிராம மக்கள், ஒரு வாடகை கட்டிடத்தில் பள்ளி செயல்பட முடிவு செய்தனர். அந்த கட்டிடத்திற்கான வாடகை ரூ. 5 ஆயிரத்தை, கடந்த இரண்டு மாதங்களாக, அக்கிராம மக்களே கட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment