சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது.
கடந்த 2004 ஆம் ஆண்டு ஐ.நா பொதுக்கூட்டத்தின் போது டிசம்பர் 9 ஆம் திகதி ஊழல் எதிர்ப்புத் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு ஊழல் எதிர்ப்புத் தினமானது 'ஊழல் சங்கிலியை உடைப்போம்' என்ற தொனிப்பொருளில் அனுஸ்டிக்க ஐ.நாவின் போதைப் பொருள் மற்றும் குற்றங்கள் அலுவலகம் தீர்மானித்துள்ளது.
அதன்படி ஊழல் தொடர்பான விழிப்புணர்வு ,வகிபங்கு, எதிர்ப்பு மற்றும் தடுப்பு என்பவற்றை நோக்காகக் கொண்டு அனுஸ்டிக்கப்படவுள்ள இந்தத் தினத்திற்கான உடன்படிக்கை கடந்த 2015 ஆம் உள்வாங்கப்பட்டது. ஊழலானது நாடுகளின் சமூக, அரசியல் , பொருளாதார பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதுடன் நிறுவனங்களின் ஜனநாயகத் தன்மையை இல்லாமற் செய்யும்.பொருளாதார அபிவிருத்தியை மந்த நிலைக்கு கொண்டு செல்லும். இதனைத் தடுக்கும் நோக்கிலே ஐ.நா ஊழல் எதிர்ப்புத் தினத்தை பிரகடனப்படுத்தியது. மேலும் அதிக இலஞ்சம் பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 85 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு ஆண்டும் டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
175 நாடுகளை மையப்படுத்திய இந்த பட்டியலில் 85 ஆவது இடத்தில் இலங்கை, இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment